தூது - The Message

கடந்த காலங்களில் கடிதங்களை அனுப்பும் போது, அவைகள் தங்கள் இலக்கை அடைவதற்கு அனேக நாட்கள் பிடித்தன, சில நேரங்களில் வாரங்கள் மற்றும் மாதங்கள் கழித்து அவைகள் சென்றடைந்தன. அக்காலத்தில் ஈ-மெயில் வசதியோ அல்லது தொலைபேசி வசதியோ இல்லை, அவ்வளவு ஏன் தந்தி கூட இல்லை. இருந்தபோதிலும் மக்கள் அனேக வழிமுறைகளில் ஒவ்வொருவரோடும் தங்கள் செய்தியை பகிர்ந்துக்கொண்டனர். 


மக்கள் தங்கள் "தூதுகளை" சில தூதர்கள் மூலமாக அனுப்பிக்கொண்டு இருந்தனர். இது மாத்திரமல்ல, இறைவன் மூலமாக கூட தூதுகள் தூதர்கள் மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டது. இறைவன் மனித இனத்தோடு தொடர்பு கொள்ள "பேசினார்" என்பதை நாங்கள் நம்புகிறோம். தன்னை உருவாக்கியவரும், உலகை படைத்தவருமாகிய இறைவன், "தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்தவேண்டும்" என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா? இவ்வுலகில் இறைவன் விருப்பப்படி எப்படி வாழவேண்டும் என்ற கட்டளைகளை அந்த இறைவனிடமிருந்து தமக்கு வரவேண்டும் என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா? 

தனக்கு இறைவனிடமிருந்து தூது வருகிறது என்றுச் சொல்லுகிற மனிதனை நாம் "தீர்க்கதரிசி (Prophet)" என்று கூறுகிறோம். எபிரேய மற்றும் அரபி மொழியில் "நபி" என்றுச் சொல்லக்கூடிய வார்த்தையை நாம் சரியாக மொழிப்பெயர்த்தால், "தூதர் (Messenger)" என்று மொழியாக்கம் செய்யலாம்.. 

"தூதர்கள்" என்பவர்கள் யார் என்பதைப் பற்றி யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியிலே ஒரு பொதுவான உடன்பாடு உள்ளது. இம்மக்கள் அங்கீகரிக்கும் தூதர்களில் சிலரது பெயர்கள் இவைகளாகும்: நோவா, ஆபிரகாம், மோசே, எலியா, யோபு மற்றும் தாவீது. யூதர்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று அங்கீகரிப்பதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் இயேசுவை "ஈஸா நபி" என்று அழைக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள். இதில் முக்கியமான விவரம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இயேசுவை "இறைத்தூதர்" என்று அழைத்தாலும், இயேசு கொண்டு வந்த அந்த தூது குர்‍ஆனில் காணப்படுவதில்லை . இயேசு கொண்டு வந்த செய்தியை நாம் பைபிளின் "நற்செய்தி நூல்களில்" காணலாம். 

ஆச்சரியப்படும் விதமாக, தற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் "இயேசுவின் தூது யூதர்களுக்கு மட்டும் தான்" என்று போதித்துக்கொண்டு வருகிறார்கள், ஆனால், இயேசுவைப் பற்றி குர்‍ஆன் கூறும்போது, அவரை "அகிலத்தாருக்கு சான்றாக்கினோம் " என்று கூறுகிறது (ஸூரா 21:91). 

குர்‍ஆன் கீழ்கண்டவாறு போதிக்கிறது: 

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் ழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்" என்று கூறுங்கள்! (குர்‍ஆன் 2:136) 

குர்‍ஆனில் காணப்படும் அவ்விதமான முரண்பாட்டை நியாயப்படுத்துவதற்காக, இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை குற்றப்படுத்துகின்றனர், அதற்கு அவர்கள் இவ்விதமாக கூறுகின்றனர், "அதாவது ஆபிரகாம், மோசே மற்றும் இயேசுவிற்கு அருளப்பட்ட இறைவனின் வார்த்தைகள் இப்போது பைபிளில் காணப்படுவதில்லை, அது மாற்றப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது". 

ஆனால், இவர்கள் சொல்வது போல குர்‍ஆன் போதிக்கவில்லை, குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது: 

"வேதமுடையோரே! தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும், நீங்கள் நிலை நாட்டாதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்"..." குர்‍ஆன் (5:68). 

குர்‍ஆனின் இவ்வார்த்தைகள் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இன்று நம்மிடம் இருக்கும் பழைய பைபிள் கையெழுத்துப் பிரதிகள், ஏழாம் நூற்றாண்டை விட முந்தையது. அவைகள் இன்று நம்மிடம் உள்ள பைபிளுக்கு முரண்படுவது இல்லை. இஸ்லாமிய அறிஞர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் என்னவென்றால், பைபிள் மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்ற நீங்கள், எப்போது, யார் ஏன் பைபிளை மாற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லவேண்டும். உங்களால் சொல்லமுடியுமா? உங்களால் நிச்சயம் இக்கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லமுடியாது . 

உண்மையில் குர்‍ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: "நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!..." (குர்‍ஆன் 10:94). எந்த வேதம்? குர்‍ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம். நேர்மையாக நடந்துக்கொள்ளும் ஒரு மனிதன், குர்‍ஆனின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, பைபிள் திருத்தப்பட்டது என்று கூறமாட்டான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆன் இவ்விதமாக கட்டளையிடுகிறது: "(இதனை நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுப்படுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்துக்) கொள்ளுங்கள் " குர்‍ஆன் 21:7 (முஹம்மது ஜான் தமிழாக்கம்). 

இவ்வசனத்தில் கூறப்பட்ட வேதங்களை உடையோர் யார்? அவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் என்பது தெளிவு. 

நாம் ஏற்கனவே பார்த்தபடி, நற்செய்தி நூல்கள் இறைவனின் வார்த்தை என்று குர்‍ஆன் வெளிப்படையாக கூறுகிறது. மற்றும் அதே குர்‍ஆன் "அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை" என்றும் கூறுகிறது (குர்‍ஆன் 10:64 மற்றும் 6:34). 

அனேக இஸ்லாமியர்கள் நற்செய்தி நூல்களை படிப்பதில்லை. எனவே, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் திருவாய் மொழிந்த வார்த்தைகளை ஒரு தொகுப்பாக இங்கு தருகிறோம். இவ்வார்த்தைகளை சரியான தலைப்பின் கீழ் ஒரு கோர்வையாக நாம் உங்களுக்காக தருகிறோம், இதனால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். 

ஆங்கில மூலம்: The Message

 "ஒரு தூது"  இதர கட்டுரைகள்