ஆண் பிள்ளைகளைக் கொள்ளும்படி பார்வோன் எப்போது கட்டளையிட்டார்?

குர்-ஆன் முரண்பாடுகள்

பதில்: எகிப்தின் அரசன் ஒருமுறை இஸ்ரவேல் மக்களின் ஆண்பிள்ளைகளை கொள்ளும்படியாகவும், பெண்பிள்ளைகளை கொள்ளாமல் வைக்கும்படியாகவும் கட்டளையிட்டார். அப்போது ஒரு இஸ்ரவேல் தாய் தனக்கு பிறந்த ஆண்பிள்ளையை காப்பாற்ற ஒரு கூடையில் அப்பிள்ளையை வைத்து நைல் நதியில் விட்டாள். அப்போது குளிக்க அங்கே வந்த அந்நாட்டு அரசனின் சகோதரி அப்பிள்ளையைக் கண்டு, எடுத்து வளர்த்த விதம் நமக்கு தெரிந்ததே. அந்த பிள்ளை தான் மூஸா என்று நமக்குத் தெரியும்.

மூஸா குழந்தையாக இருக்கும் போது எகிப்து அரசன் (பார்வோன்) பிள்ளைகளை கொள்ளும்படி கட்டளையிட்டார் என்று குர்-ஆன் ஒரு இடத்தில் சொல்கிறது. ஆனால் வேறு இடத்தில் மூஸா வளர்ந்து மனிதனாக இருக்கும்போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்று முரண்படுகிறது.

குர்-ஆன் 40:23-25 : மூஸா(வயது 80) பார்வோனை சந்தித்த பிறகு கட்டளை வந்தது

40:23 - மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்.

40:24 -ஃபிரவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ: "(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.

40:25 - ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்: "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.

குர்-ஆன் 20:38-39 : மூஸா குழந்தையாக இருக்கும்போது கட்டளை பிறந்தது

20:38 - "உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!

20:39 - அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்துவிடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்). மேலும்,"(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்".

மூலம்: http://www.answering-islam.org/Quran/Contra/qi026.html

 


குர்-ஆன் முரண்பாடுகள்

குர்-ஆன் பற்றிய இதர கட்டுரைகள்