இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம்

The Real Difference between Islam and Christian Faith

ஆசிரியர்: டல்லஸ் எம் ரோர்க், Ph.D.

இஸ்லாமியர்களின் எழுத்துக்களின் மூலம் நான் பெரும்பாலும் அறிந்துகொள்வது என்னவென்றால் கிறிஸ்தவத்தின் மீதுள்ள நம்பகத் தன்மையை அழிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்பதே. இஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் அதிகமாக பதில்களை கொடுத்துள்ளார்கள்.

இப்போதைக்கு இவ்விரு வாதங்களுக்குள்ளும் நாம் செல்ல வேண்டாம். நீங்களும் நானும் மரிக்கும் போது நமக்கு என்ன நடக்கும் என்பதில் இப்போது நம்முடைய கவனத்தைச் செலுத்தலாம்.

நான் அறிந்த அனேகம் இஸ்லாமியர்கள், வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்குச் செல்லுதல்,ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுது கொள்ளுதல், ரமலான் விரதத்தை கைக்கொள்ளுதல், குர்‍ஆன் மற்றும் ஹதீஸில் உள்ள முகமது நபியின் போதனைகளைக் க‌டைப்பிடித்தல் போன்றவற்றைத் தங்களின் வழக்கமான‌ நடவடிக்கைகளாக‌ கொண்டுள்ளனர் என்று விவரிப்பார்கள். மற்றும் நல்லதே நடக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் நல்ல காரியங்களைச் செய்து அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், "நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்களா?" என்கின்ற கேள்விக்கு,"அல்லாஹ் விரும்பினால் மட்டுமே செல்லமுடியும்" என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள ஒருவராலும் முடியாது “இன்ஷா அல்லாஹ் – Inshaallah” என்பார்கள். சொர்க்கமா அல்லது நரகமா என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வார் என்றுச் சொல்வார்கள்.

"நரகம்" என்கின்ற வார்த்தை அநேகம் முறை குர்‍ஆனில் காணப்படுகிறது. நரகத்தினை விவரிக்க குர்‍ஆன் பயன்படுத்தும் மற்றுமொரு பயங்கரமான வார்த்தை "அக்கினி" என்பதாகும். அவநம்பிக்கையாளர்கள் முடிவற்ற ஒரு அக்கினியால் சூழப்படுவார்கள். … அல்லாஹ் விரும்பினால் நம்பிக்கையாளர்கள் நீர்ப்பாய்ச்சலான ஆனந்தமயமான (சொர்க்கத்திற்கு) தோட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவார்கள். ஆனால் இறுதியாக அவர்களை அல்லாஹ் என்ன செய்வார் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள்.

குர்‍ஆனில் உள்ள‌, தங்களை உறுத்தும் கருத்துக்களைப் பற்றி கேள்விகள் எழுப்ப இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவதில்லை. ஒருவரும் அல்லாஹ்வைக் கேள்வி கேட்கக்கூடாது! இஸ்லாமில் அல்லாஹ் ஒரு தொலை தூரக் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறார். அவர் தவறு செய்பவர்களை எப்பொழுதும் தண்டிப்பவராக, ஒரு பயப்படத்தக்க நபராகவே காணப்படுகிறார்.

நீங்கள் செல்லும் வழியினை அறிந்துள்ளீர்களா? உங்களின் முடிவு என்ன என்பதைப் பற்றி இஸ்லாமில் எந்த உறுதியான நிலைப்பாடும் இல்லை. தாங்கள் நல்ல காரியங்கள் பலவற்றைச் செய்கிறோமென்றும் அல்லாஹ்வை மகிழ்ச்சியுறச் செய்யும் வகையில் வாழ முயற்சிக்கிறோமென்றும் சொல்லும் பல இஸ்லாமியர்களை நான் அறிவேன். ஆனால், அல்லாஹ்வோ சமாதானத்தைத் தருவதில்லை; நரகத்திற்குத் தப்பித்துக் கொள்வார்களென்ற என்ற நிச்சயத்தை தருவதில்லை. அவர்களின் நன்னடத்தை ஒருபோதும் போதுமானவையாக இருக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நிலமை இன்னும் மோசம்.

இப்பொழுது பைபிளின் மகத்துவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டும். இந்த உலகம், ஆதி மனுஷன் மற்றும் மனுஷி ஆகியவர்களின் படைப்பின் விவரத்திலிருந்து அது ஆரம்பிக்கிறது. இது ஒரு அன்பின் கிரியை ஆகும். தேவன் நமக்காக உண்டாக்கிய இந்த பூமியானது ஒருவர் வாழ்வதற்கு வேண்டிய‌ சகலவிதமான வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, மனிதனின் பாவம் அவனை தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. நாம் தேவனிடம் மறுபடியும் சேருவது எப்படி?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மனித இனத்திற்கு ஆசீர்வாதமாக ஒரு இரட்சகர் (மேசியா - இஸ்லாமின் படி மஸீஹா) வருவார் என முன்னுரைக்கப்பட்டது. இத்தகைய ஆசீர்வாதமான நபர் யார்? அவரே இயேசுக் கிறிஸ்து (ஈஸா மஸீஹா) ஆவார். இதனால் நமக்கு என்ன பயன்? 2 கொரிந்தியர் 5:19-20 ல் பைபிள் சொல்கிறது,

"தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்."

இத‌ற்கு அர்த்த‌ம் என்ன‌வெனில், தேவ‌ன் த‌ம்மை நமக்கு வெளிப்ப‌டுத்த‌ த‌ம‌து குமாரனையே அனுப்பி இவ்வளவாய் நம்மீது அன்பு கூர்ந்தார் என்பதே. நமக்குப் பாவ மன்னிப்பினைக் கொண்டு வரவே இவ்வாறு தம் குமாரனை அனுப்பினார். நமக்கு அவரது சமூகத்தில் நித்திய வாழ்வினை வாக்களிக்கவே அவர் குமாரனை அனுப்பினார். அனைவரும் பாவம் செய்திருப்பினும், தேவன் இன்னும் நம்மீது அன்புகூர்ந்து, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதை சாத்தியமாக்கி அவரை நாம் புரிந்துகொள்ள வகை செய்ததே இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை. நீங்க‌ள் ஒரு வெறுமையான‌ உண‌ர்வினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அல்லாஹ்வினைக் காண முடியாமல் அவர் நமக்குத் தொலைதூரத்தில் உள்ளவர் என்கின்ற உணர்வினைப் பெற்றுள்ளீர்களா? தேவனின் அன்பிலும் சமாதானத்திலும் திளைக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறீர்களா?

இஸ்லாம் என்பது ஒரு மத‌ம் (Religion) என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மத‌ம் என்பது, அதற்கான காரியங்களைச் செய்தல், தொழுகைகள் செய்தல், மத சடங்குகளை பின்பற்றுதல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். எனினும், கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு மதமல்ல‌. ஆனால், அது புதுப்பிக்கப்பட்ட ஒரு உறவாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் இப்பொழுதே ஒரு உறவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மரணத்தின் போது என்ன நடக்கும் என்பதினை அறிய நீங்கள் மரணம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. நித்திய வாழ்வின் நிச்சயத்தினையும், நீங்கள் சாகும்போது பரலோகத்திற்குத் தான் செல்வீர்கள் என்கின்ற உறுதியையும் நீங்கள் இப்போதே பெற்றுக் கொள்ளலாம். நிக்கோதோமஸ் என்கின்ற ஒரு மத வல்லுனரிடம் இயேசு “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” எனக் கூறினார். ஒரு ஆவிக்குறிய பிறப்பு இப்போதே ஏற்படவேண்டும். (எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இத்தகைய உறவு உள்ளது என நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். வெறும் பெயர்க் கிறிஸ்தவர்களும் உள்ளார்கள்).

நீங்களும் இப்போதே இத்தகைய ஒரு உறவினை, அதாவது ஒரு புதிய பிறப்பினை, உங்களின் வாழ்வில் ஆண்டவராகவும் மீட்பராகவும் வரும்படிக்கு இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக் கொள்வதின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் சமாதானத்தையும் பாவ மன்னிப்பையும் நித்திய வாழ்வினையும் தேடிக் கொண்டிருப்பீர்களானால் இப்பொழுதே இயேசுவை உங்கள் ஆண்டவரென்று ஏற்றுக் கொள்ளுவதின் மூலம் நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொளுவீர்கள். நான் இவைகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எனது நம்பிக்கையும் ஜெபமும் என்னவெனில் நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் இவ்வாறு இயேசுவிடம் வேண்டிக் கொண்டு நன்மை அடையவேண்டுமென்பதே ஆகும். கீழ்கண்ட வேத வாக்கியத்தினை நினைவில் கொள்ளுங்கள்:

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று." (யோவான் 3: 16-18)

"For God so loved the world, that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. For God did not send his Son into the world to condemn the world, but in order that the world might be saved through him. Whoever believes in him is not condemned, but whoever does not believe is condemned already, because he has not believed in the name of the only Son of God." (John 3:16-18 ESV)

"கீழ்படிதலின் வழி இதுவே; எனவே நீங்கள் இதனைப் பின்பற்ற வேண்டும்" என்று முகமது கூறினார். இதற்கு நேர் எதிராக இயேசு யோவான் 14:6 ல் சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 10:10 ல் இயேசு இவ்வித‌ம் அறிவித்தார்: "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்"

நீங்கள் இயேசுவினிடம் வரும்பட்சத்தில் உங்களின் பாவங்களை மன்னிக்க வாக்களித்து உங்களை இவ்வளவாய் நேசிக்கும் தேவனின் அன்புக்கு உங்களின் நல்ல செயல்கள் ஈடாகுமென நீங்கள் எண்ணுகின்றீர்களா?

எது அறிவுபூர்வமான செயல் என நீங்கள் நினைக்கிறீர்கள்:

தோல்விக்கே நடத்திச்செல்லும் செயல்களின் வழியா? அல்லது

வாழ்வுக்கு வகை செய்யும் வழியா?


நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது அல்லாஹ்வின் அங்கீகாரத்தினைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உங்களை வைக்கும் ஒரு மதமா (இஸ்லாம்) ? அல்லது உங்களின் பாவங்களை மன்னித்து தமது சமூகத்தில் ஒரு நித்திய வாழ்வினை வாக்களிக்கும் தேவனோடு கொள்ள வேண்டிய உறவா (கிறிஸ்தவம்) என்பதே.

இயேசுவில் அன்பினையும், ச‌மாதான‌த்தையும், பாவமன்னிப்பினையும், நித்திய வாழ்வினையும் கண்டுகொண்ட ஏனைய இஸ்லாமியர்களின் அனுபவங்களை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் இந்தத் தொடுப்பினில் சென்று பார்க்கவும் (ந‌ம்பிக்கையை நோக்கி இஸ்லாமியரின் ஒரு பயணம் - ஒலி மற்றும் ஒளி வடிவில் சாட்சிகள்). அனேக‌ம் எழுத்துபூர்வ‌மான‌ சாட்சிகள் இந்தத் தொடுப்பில் பார்க்கவும்.

தேவ‌னிட‌ம் கொடுக்க‌ ந‌ம்மிட‌ம் ஒன்றும் இல்லை, ஆனால் ந‌ம‌க்குக் கொடுக்க‌ அனைத்தும் அவ‌ரிட‌ம் உண்டு.

ஆங்கில மூலம்: The Real Difference between Islam and Christian Faith


டல்லஸ் எம் ரோர்க் அவர்களின் கட்டுரைகள்