அல்லாஹ்விற்கு எப்படி வாரிசுரிமை கொடுக்கமுடியும்?

ஆசிரியர்கள்: சாம் ஷமான் & யோகன் கட்ஜ்

திரு பால் வில்லியம்ஸ் என்ற இஸ்லாமியரின் நேர்மைக்கும், முரண்பாடற்ற தன்மைக்கும் சவாலாக இருக்கும் படியாக, இயேசுவின் தெய்வீகத்தன்மைக்கு எதிராக அவர் எந்த கருத்தை முன்வைத்தாரோ அதே கருத்தை, அவருக்கு எதிராக திருப்பிவிட ஆசைப்படுகிறேன்.

அல்லாஹ் படைத்த படைப்பிலிருந்து அவருக்கு “வாரிசு” கொடுக்கப்படுகின்றது என்று இஸ்லாமிய வேதம் போதிக்கின்றது.

நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம். குர்-ஆன் 15:23.  (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)

நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.   குர்-ஆன் 19:40 (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)

இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான். குர்-ஆன் 19:80 (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)

இன்னும் ஒரு படி மேலே சென்று, அல்லாஹ் வாரிசுகளை பெற்றுக் கொள்பவர்களில் சிறந்தவர் என்றும் குர்-ஆன் விவரிக்கிறது.

இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே ! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித் போது: குர்-ஆன் 21:89 (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)

இப்போது இந்த வசனங்கள் கூறும் விவரங்கள் பெரிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இறைவன் என்பவன்  எந்த தேவையும் அற்றவன், ஆரம்ப முதல் தானாக இருப்பவன், மேலும் அனைத்தையும் உண்டாக்கியவன் அதே நேரத்தில் அனைத்திற்கும் சொந்தக்காரன் அவனே. விஷயம் இப்படி இருக்கும் போது, அல்லாஹ்விற்கு தன் சொந்த படைப்பிலிருந்து எப்படி வாரிசுகளை தரமுடியும்? இந்த வாரிசுகளை கொடுப்பதற்கு முன்பாக அல்லாஹ் என்னவாக இருந்தார்?  திரு பால் வில்லியம்ஸ் என்ற இஸ்லாமியரின் கூற்றுப்படி பார்த்தால், இந்த வாரிசு கொடுப்பதற்கு முன்பு “அல்லாஹ் ஒன்றுமில்லாமல் இருந்தார், அதாவது அல்லாஹ் இல்லை” என்பதாகும். இதனை வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், வாரிசை கொடுப்பதற்கு முன்பாக அல்லாஹ் எந்த வகையான இறைவனாக இருந்தார்?  உண்மையாகவே அல்லாஹ் எல்லாவற்றையும் படைத்தவனாக இருந்து, அவை எல்லாவற்றின் உரிமையாளனாக இருப்பது உண்மையானால், ஏன் மற்றவர்கள் அவருக்கு வாரிசுகளை கொடுக்கவேண்டும்?  அல்லாஹ் எப்படி இன்னொருவரின் வாரிசாக இருக்கமுடியும்?

அல்லாஹ் என்பவர் வாரிசுரிமையை பெறுகிறார் என்பதை நாம் ஆய்வு செய்தால், இது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பிவிடும். அதாவது அல்லாஹ பெரியவைகளை (பூமியை – குர்-ஆஅன் 19:40) தனக்கு வாரிசாக (சொந்தமாக) எடுத்துக்கொள்கிறார் என்பதும், சிறியவைகளை (மனிதர்களை - குர்-ஆன் 19:80) வாரிசுகளாக பெற்றுக்கொள்கிறார் என்பதும் கேள்விக்குரிய பிரச்சனைகளாக மாறுகிறது என்பதை நாம் காண்போம்.

குறிப்பாக அல்லாஹ் எவைகளைத் தன் படைப்புகளிலிருந்து வாரிசாக பெற்றுக்கொள்கிறார்? குர்-ஆனில் காணப்படும் வாரிசு உரிமை சட்டங்களை நாம் பார்த்தால், ஒரு மனிதன் மரித்தால் அவருடைய சொத்துக்களை இதர மக்களுக்கு எப்படி பகிர்ந்து அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பகிர்ந்து அளிக்கும் பாகங்களில் அல்லாஹ்வைப் பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை. இப்படி இருக்கும் போது மனிதர்களின் வாரிசாக அல்லாஹ் எப்படி இருக்கமுடியும்?

எப்படி மற்றும் யார் மூலமாக இந்த சுதந்திரம் (வாரிசு) அல்லாஹ்விற்கு தரப்படுகின்றது? ஒருவேளை தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக அல்லாஹ் மனிதர்களை கொன்று அதன் மூலமாக அம்மனிதர்களை பெற்றுக்கொள்கிறாரா (பார்க்க 15:23; 19:77-80) ?

குர்-ஆன் 19:40ல் சொல்லியது போல, எதிர்காலத்தில் அல்லாஹ் பூமியை வாரிசாக பெற்றுக்கொள்வார், அப்படியானால், தற்காலத்தில் பூமி அவருக்கு சொந்தமானதாக இல்லையா? அல்லாஹ பூமியை தனக்கு சொந்தமாக பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, அது யாருக்கு சொந்தமானதாக இருக்கிறது?

இதைப் பற்றி இன்னும் அனேக கேள்விகள் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளில் எழுப்பப்பட்டுள்ளது:

Allah – the Best of the Inheritors? and Allah – the Heir?

இந்த இஸ்லாமிய குளறுபடிகளை, முடிச்சுகளை அவிழ்க்கும் பொறுப்பை நான் பால் வில்லியம்ஸ் அவர்களிடமே ஒப்படைத்துவிடுகிறேன். அவர் முடிச்சுகளை அவிழ்க்கும் சமயத்திற்குள், விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட கட்டுரைகளை, மறுப்புக்களை படிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். இந்த கட்டுரைகள் அனைத்தும், அல்லாஹ் எப்படி வாரிசுகளை பெற்றுக்கொள்கிறார் என்ற தலைப்பு பற்றியதாகவே இருக்கிறது. மேலும் திரு பால் வில்லியம்ஸ் போன்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு எவ்விதமாக பிரச்சனைகளை இந்த தலைப்பு உருவாக்குகிறது என்பதையும் இக்கட்டுரைகள் அலசுகிறது.

ஆங்கில மூலம்: How can Allah be “given” an Inheritance?

பால் வில்லியம்ஸ் அவர்களுக்கு மறுப்புக்கள்