"நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?

முன்னுரை: குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள் பற்றிய கீழ் கண்ட கட்டுரையை நான் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தேன்.

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an):
http://www.answering-islam.org/tamil/authors/newton/scribal.html
http://isakoran.blogspot.com/2008/08/scribal-errors-in-quran.html

இக்கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்த ஒரு விவரத்தை விளக்கும்படி கேட்டுள்ளார் அருமை நண்பர் அபூமுஹை அவர்கள். அவரின் வழக்கத்தின் படி எந்த கட்டுரைக்கு பதில் தருகிறாரோ அதன் தொடுப்பை தராமல் எழுதியிருந்தார். இப்படிப்பட்டவர்கள் அதாவது மூல தொடுப்பை தராமல் எழுதும் இப்படிப்பட்டவர்கள், இணையத்தில் எழுதுவதற்கே அடிப்படை தகுதியை அடைவார்களா? என்பதை இணையத்தில் உலாவரும் அன்பர்கள் முடிவு செய்யட்டும். நான் பல முறை சொல்லியாகிவிட்டது, எத்தனை முறை சொன்னாலும் எங்களுக்கு கேட்காது என்ற தோரணையில் மறுபடியும் அப்படியே செய்கிறார்கள், செய்யட்டும், அவர்களால் முடிவதை மட்டும் தானே அவர்களால் செய்யமுடியும்?!

அவர் என் தொடுப்பை தரவில்லையானாலும், நான் அவரது தளத்தின் தொடுப்பை தருகிறேன்.

அபூமுஹை அவர்களின் கட்டுரை: குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!
Source: abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html

என் கட்டுரையில் மேலோட்டமாக சொல்லியிருந்த விவரத்தை எல்லாருக்கும் புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

மெய் எழுத்து "நூன்" குர்‍ஆனி(21:88)ல் சொறுகப்பட்டது 

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து அவர் "குர்‍ஆன் 21:88ம்" வசனம் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார். 

மொழி எழுத்துக்களின் உருமாற்றம்: 

அபூமுஹை அவர்கள் "மொழி எழுத்துக்களில் உருமாற்றம்" என்பது எல்லா மொழிகளுக்கும் உண்டே, அது எனக்கு புரியவில்லையா என்று கேட்கிறார். அன்பான அபூமுஹை அவர்களே, என் கட்டுரையில் நீங்கள் மேற்கோள் காட்டிய குர்‍ஆன் 21:88ம் வசனம் பற்றிய‌ பிழை "அரபி மொழியில் ஏற்பட்ட எழுத்து உருமாற்றத்தினால் வந்த மாற்றமில்லை" அதற்கு பதிலாக குர்‍ஆனில் "நூன்" என்ற மெய் எழுத்து 21:88ம் வசனத்தில், இஸ்லாமியர்களினால் இடையில் சொறுகப்பட்டது/பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது. 

ஆனால், நீங்கள் என்னவோ, அது எழுத்து உருப்புக்களில் ஏற்பட்ட மாற்றமே என்று விளக்கமளித்து இருக்கிறீர்கள். நான் கொடுத்து இருந்த தொடுப்பை(http://www.answering-islam.org/PQ/ch13e1-index.html#CH13e1) முழுவதுமாக படித்து இருந்தால், இந்த கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கமாட்டீர்கள் (அப்படி படித்து இருந்தாலும், அரபி தெரியாத இவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது என்று தெரிந்தே கூட நீங்கள் எழுதியிருப்பீர்கள்). 

சரி, என் கட்டுரையில் நான் கொடுத்த தொடுப்பில் ஆங்கிலத்தில் என்ன உள்ளது என்பதை அப்படியே தருகிறேன், பிறகு அதன் கீழே உங்களுக்கு விளக்குகிறேன்.

3/ Nuns Missing/ ‘Added’

 (a) Another feature mentioned in the 1938’s Note IX and also raised by Hamidullah is that of a consonant nun missing’ in Q21:88. It is depicted in the Note IX just cited, at the left end of the bottom line, namely  (the word nUnji is formed by ‘correcting’ through ‘false vocalisation’).

 Hamidullah

too writes of this. After writing about the extra consonant ya in biyyadin, he writes of what he terms this "one case" of a consonant missing in the Qur’an (!):

"In consonants also there is a case, but just the contrary one; the Qur’anic orthography  is for what one would expect ; and the want is supplied by an additional but small () as a vocalisation sign." (Orthographical..., p. 79; emphasis added)

In the 1924 Egyptian text one finds only a small ‘nun’ above the graphic form , while the Taj text (as in the Swahili) from Karachi includes a sukun above the nun.37 However, as the following indicate, the Turkish , Iranian  and Indian  texts ALL correct the error by inserting this nun into the graphic form. Here is yet another reason the Egyptians had to reject the Turkish text. We note that the Warsh also has  indicating that this nun was included in the Medinan manuscript.

Source: www.answering-islam.org/PQ/ch13e1-index.html

மெய் எழுத்து "நூன்" ஐ குர்‍ஆன் வசனம் 21:88ல் இடையில் சொறுகிய விவரங்கள்: 

அதாவது, இந்த குர்‍ஆன் வசனம் 21:88ல், "நூன்ஜி" என்ற வார்த்தையில் "நூன்" என்ற எழுத்து இரண்டாவதாக இல்லை, ஆனால், அதை அவ்வசனத்தில் சேர்த்து எழுதினார்கள். அதை சேர்த்து எழுதும் போது, அதே எழுத்தை சிறியதாக அவ்வசனத்தின் மேலே எழுதினார்கள், பிழையை திருத்தினார்கள். இது ஒன்றும் அரபி எழுத்துக்களில் ஏற்பட்ட "எழுத்து உருமாற்றம்" இல்லை, இது ஒரு குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழையாகும்(Scribal Error). 

இப்படி நூன் எழுத்தை சிறியதாக காட்டி சில குர்‍ஆன்களில் பதித்துள்ளார்கள். ஆனால், சில குர்‍ஆன்களில் அந்த "சொறுக‌ வேண்டிய நூன் எழுத்தை, மற்ற வார்த்தைகளோடு சேர்த்து, எழுதியுள்ளனர், பதித்துள்ளனர்". 

இந்த விவரங்களை கிறிஸ்தவர்கள் ஒன்றும் சொந்தமாக எழுதவில்லை, இதை இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்துள்ளனர், புத்தகங்கள் எழுதியுள்ளனர், மற்றும் குர்‍ஆனை பிரிண்ட் செய்யும் போது, இதனை கவனித்து பதிக்கிறார்கள்.

இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் ஹமீதுல்லா இந்த வசனத்தில் உள்ள பிழையைப் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை கவனிக்கவும்:

"In consonants also there is a case, but just the contrary one; the Qur’anic orthography  is for what one would expect ; and the want is supplied by an additional but small () as a vocalisation sign." (Orthographical..., p. 79; emphasis added) 

"மெய் எழுத்துக்களில் கூட இப்படிப்பட்ட ஒரு பிரச்சனை உள்ளது, ஆனால், இது மிகவும் முரண்பாடான ஒன்று. இந்த குறிப்பிட்ட குர்‍ஆனின் வசனம் என்று உள்ளது. ஆனால், இவ்வார்த்தை  இப்படியாக இருக்கவேண்டும். இதை சரி செய்ய, ஒரு அதிகபடியான நூன்( ) என்ற எழுத்தை சிறியதாக சேர்த்தார்கள்." 

Hamidullah, M., Orthographical Peculiarities in the text of the Qur’an; Islamic Order (Karachi), Vol. 3, no. 4, p. 72-86, 1981; copy obtained from Islamic Foudation UK, Leicester. 

Source: www.answering-islam.org/PQ/ch13e1-index.html

வார்த்தையின் மேலே சிறிய நூன் அல்லது வார்த்தையோடு சேர்த்து எழுதிய நூன்:

இப்படி குர்‍ஆனில் உள்ள எழுத்து பிழையை திருத்தும் போது, அந்த புதிய எழுத்தை/அல்லது சரியான எழுத்தை அவ்வார்த்தையின் மேலே ஒரு சிறிய எழுத்தாக எழுதி வைப்பார்கள். இதன் மூலம், எது மூல குர்‍ஆனில் இருந்தது, எது மனிதர்கள் திருத்தி சரி செய்தது என்பதை காட்ட உதவியாக இருக்கும். ஆனால், சிலர் அந்த திருத்தப்பட்ட எழுத்தை மேலே குறிப்பிடாமல், மற்ற எழுத்துக்கள் போலவே, அரபி வார்த்தைகளோடு சேர்த்து பிரிண்ட் செய்துவிடுகின்றனர். இப்படி செய்வது தவறானது என்றுச் சொல்லி, சிலர் மற்றவர்களின் குர்‍ஆனை ஏற்றுக்கொள்வதில்லை. 

உதாரணத்திற்கு, எகிப்து நாட்டினர், துருக்கி நாட்டினரின் குர்‍ஆனை ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் இது தான்.

In the 1924 Egyptian text one finds only a small ‘nun’ above the graphic form , while the Taj text (as in the Swahili) from Karachi includes a sukun above the nun.37 However, as the following indicate, the Turkish , Iranian   and Indian  texts ALL correct the error by inserting this nun into the graphic form. Here is yet another reason the Egyptians had to reject the Turkish text. We note that the Warsh also has  indicating that this nun was included in the Medinan manuscript

1924ல் பதிக்கப்பட்ட எகிப்து குர்‍ஆனில், அந்த வசனத்தின் மேலே ஒரு சிறிய நூன் என்ற எழுத்தை பிரிண்ட் செய்துள்ளனர், அதே போல, கராச்சியில் வெளியிடப்பட்ட தாஜ் குர்‍ஆனில்(ஸ்வாஹிலி) இதே போல சிறிய நூனை எழுதி  அதன் மேலே sukun என்ற குறியையும் எழுதியுள்ளனர். ஆனால், துருக்கி  , ஈரான்  மற்றும் இந்தியாவில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்‍ஆன்களில், அந்த சிறியை நூனை, மற்ற எழுத்துக்களோடு சேர்த்து எழுதியுள்ளனர். இப்படி துருக்கி குர்‍ஆனில் வார்த்தையின் மேலே சிறிய நூனை எழுதாமல், வார்த்தையோடு சேர்த்து எழுதியதால், தான் எகிப்தியர்கள், துருக்க் குர்‍ஆனை ஏற்பதில்லை. வர்ஷ் என்பவரும் இந்த நூனை சேர்த்தே எழுதியுள்ளார் , காரணம் மதினா பிரதிகளில் இவ்வெழுத்து இருந்ததாகச் சொல்கிறார். Source: www.answering-islam.org/PQ/ch13e1-index.html

அபூமுஹை அவர்களே, உங்களுக்கு நான் ஒரு விவரத்தைச் சொல்ல விரும்புகிறேன், இந்த விவரங்கள் அனைத்தும், நான் என் கட்டுரையிலேயே கொடுத்து இருந்தேன், ஆனால், அதை படிக்காமல், வேறுவிதமாக நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு, ஏதோ பதில் என்று எழுதவேண்டும் என்று எழுதுகிறீர்கள். போகட்டும், ஒரு குர்‍ஆனின் எழுத்துப் பிழையைப் பற்றி சிறிது விளக்கமாக, தமிழ் முஸ்லீம்களுக்கு தெரியவர உதவி புரிந்துள்ளீர்கள், உங்களுக்கு என் நன்றிகள். 

அபூ முஹை அவர்கள் பதித்த படங்களில் குர்‍ஆனை பிரிண்ட் செய்யும் போது ஏன் வித்தியாசம் காட்டியுள்ளார்கள்: 

அபூ முஹை அவர்கள், என் கட்டுரையில் குறிப்பட்ட குர்‍ஆன் எழுத்துபிழை என்பது, மொழியின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் தான் என்பதை விளக்க, மற்றும் காலம் செல்லச்செல்ல எழுத்துக்களின் வடிவங்கள் மாற்றமடையும் என்பதைக் காட்ட மூன்று எடுத்துக்காட்டுக்களை (குர்ஆன் 010:103, குர்ஆன் 019:72, குர்ஆன் 021:088) கொடுத்தார். அதில், ஒன்று நாம் இந்த கட்டுரையில் அலசிக்கொண்டு இருக்கும், குர்‍ஆன் 21:88ம் வசனமாகும். அபூமுஹை அவர்களின் கட்டுரையில் பெரிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது, அதையும் பாருங்கள்.


திருக்குர்ஆன், 010:103வது வசனம்



திருக்குர்ஆன் 019:072வது வசனம்



திருக்குர்ஆன் 021:088வது வசனம்



*****

திருக்குர்ஆன் 010:103



திருக்குர்ஆன் 019:72



திருக்குர்ஆன் 021:088


source: abumuhai.blogspot.com/2008/09/blog-post_05.html

இந்த வசனங்கள் அனைத்தும் ஒரே குர்‍ஆனிலிருந்து எடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுத்த படங்களில்(வசனங்களில்) உள்ள அந்த குறிப்பிட்ட வார்த்தை இரண்டு இடத்தில்(10:103 & 19:72) வசனத்தோடு சேர்த்து எழுதியுள்ளது(பிரிண்ட் செய்துள்ளார்கள்), ஆனால், ஒரு வசனத்தில் மட்டும்(21:88) நான் மேலே குறிப்பிட்டது போல, சிறிய நூன் வசனத்தின் மேலே பிரிண்ட் செய்துள்ளார்கள் (நாம் சொல்வது சுலபமாக புரிய தேவையான படங்களை அபூமுஹை அவர்களே கொடுத்துவிட்டதால், அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.) 

அதாவது, நீங்கள் மேற்கோள் எடுத்த குர்‍ஆன் பதிப்பாளருக்கு, எது மூல குர்‍ஆன் வசனமாக இருக்கிறது என்றும், எது குர்‍ஆன் பிழை திருத்த சொறுகப்பட்ட வசனம் என்று தெரிந்திருக்கிறது. அதனால், தான் இரண்டு இடத்தில்(நீங்கள் குறிப்பட்ட எடுத்துக்காட்டுக்களில்) வசனத்தோடு சேர்த்து எழுதியுள்ளனர், ஆனால்,குர்‍ஆன் 21:88ல் மட்டும் இது மனிதர்களால் சேர்க்கப்பட்ட எழுத்து என்பதை காட்ட மேலே சிறியதாக‌ குறிப்பிட்டுள்ளார்கள். 

நீங்கள் சொல்வது போல, இது ஒரு "எழுத்து மாற்றத்தில் ஏற்பட்ட வித்தியாசமாக இருந்தால்" நீங்கள் எடுத்துக்காட்டு காட்டிய ஒரே குர்‍ஆனில், ஏன் சில இடங்களில் சேர்த்து எழுதுகிறார்கள், ஒரு இடத்தில் மேலே சிறியதாக எழுதுகிறார்கள். 

எனவே, என் கட்டுரையின் தலைப்பை நீங்கள் திசைத் திருப்பியது போதும், அதே நேரத்தில், நான் என் யோக்கியதையை நிருபித்துக் கொண்டேன், ஆனால், உங்களுக்கு உண்மைத் தெரிந்தே இப்படி மக்களை திசைத் திருப்ப, மாற்றி எழுதியதால், யார் யோக்கியதை உள்ளவர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

பிஜே அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கத்திலிருந்து ஒரு சில விவரங்கள்:

மூல குர்‍ஆனில் பிழையே இல்லை, ஒவ்வொரு எழுத்தும் சரியாக உள்ளது என்று உங்களால் சொல்லமுடியாது, இப்போது நம் கையில் இருக்கும் குர்‍ஆனுக்கும், மூல குர்‍ஆனுக்கும் இடையே பல எழுத்து வித்தியாசங்கள் உள்ளன. 

இந்த கட்டுரைக்கு சம்மந்தப்பட்டு பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பிழைகளை மட்டுமே உங்களுக்காக தருகிறேன், அதாவது குர்‍ஆனில் இருக்கும் எழுத்து பிழைகளை சரி செய்ய, சரியான எழுத்தை சிறிய அளவில் பிழையான எழுத்துக்கு மேலே குறிப்பிட்டு உள்ளனர். இதனை பிஜே அவர்கள் தன் மொழிப்பெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பிஜே அவர்கள் கீழே உள்ள விவரங்களில் குறிப்பிட்டு இருப்பது, அரபி எழுத்துக்களில் ஏற்பட்ட வளர்ச்சி சம்மந்தப்பட்ட பிழைகள் இல்லை, அவைகள், எழுத்துப்பிழைகள் ஆகும். குர்‍ஆன் பிரதியை எடுக்கும் போது தவறுதலாக மனிதர்களால் செய்யப்பட்ட பிழைகள்(Scribal Errors) ஆகும்.

குர்‍ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு, எழுத்துப் பிழைகள்

…இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245 வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளார்கள். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்கு பதிலாக "ஸாத்" என்ற எழுத்தை எழுதியுள்ளனர்.ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே எழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்….

Source: www.onlinepj.com/qvaralaru/vralaru24.htm

Bold and underline added

முடிவுரை: இனி முஸ்லீம்கள், முகமதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆனில் எப்படி ஒவ்வொரு எழுத்தும், அதன் உறுப்பும் இருந்ததோ, அதே போல இன்று நம்முடைய கைகளில் உள்ள குர்‍ஆனும் உள்ளது என்றுச் சொல்வதை நிறுத்திவிடுங்கள். உலகமனைத்திலும் உள்ள முஸ்லீம்கள் எழுத்துப் பிழைகள் (Scribal Errors) உள்ள அரபி குர்‍ஆனையே தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 

ஒரு சிறிய குறிப்பை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து பதிக்கிறேன், அதே நேரத்தில் நானும் தனியாக ஒரு சில கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன், ஆனால், என் தள பெயரோ அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள பெயரோ குறிப்பிடாமல், ஏன் சத்தியவான் என்று வெறு ஒரு தளத்தின் பெயரை குறிப்பிடுகிறீர்கள். பல கிறிஸ்தவர்கள் என் கட்டுரைகளை தங்கள் தளத்தில் பதிக்கிறார்கள். அப்படி இவரும் செய்கிறார், அவ்வளவு தான். நான் எழுதும் கட்டுரைகளை அவர் தளத்தில் பதிக்கும் படி நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் பதிக்கிறார். எனவே, நான் எழுதும் கட்டுரைகளுக்கு மொழிபெயர்ப்பிற்கு கேள்விகள் என்னிடம் நேரடியாக கேட்கவும். நான் வேறு அவர் வேறு. என் எழுத்துக்களையும், அவர் எழுதும் எழுத்துக்களையும் சோதித்துப் பார்த்து, இரண்டு பேரும் ஒருவர் அல்ல என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி நடை இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு சில வார்த்தைகளை அதிகமாக ஒரே விதத்தில் பயன்படுத்துவார்கள், இதைக் கொண்டு நீங்கள் கண்டுபிடிக்கலாம். என்னுடைய மற்றும் அவருடைய ஒரு சில கட்டுரைகளின் மொழிநடையை ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

குர்‍ஆன் சம்மந்தப்பட்ட இதர கட்டுரைகள்: 

குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?) 
பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? 
ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?!) 
குர்‍ஆனில் உள்ள எழுத்துப்பிழைகள் (Scribal Errors in the Quran) 
பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN) 
சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு)


அபூ முஹைக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்