தமிழ் முஸ்லீம் தளமும் "அல்லேலூயா" வார்த்தையும்

முன்னுரை: தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல், இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள். 

என்னுடைய இந்த கட்டுரை, கிறிஸ்தவ மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு இவர்கள் புது அர்த்தத்தை கொடுத்துள்ளதைப் பற்றி அலசுகிறது. இந்த வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் உள்ளது. கிறிஸ்தவர்களை மாற்றுமத நண்பர்கள் "அல்லேலூயா கூட்டம்" என்று கூடச் சொல்வார்கள்.

இக்கட்டுரையில் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "தமிழ் முஸ்லீம்" தளம் என்ன பொருள் சொல்கிறது என்றும், உண்மையில் இவ்வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றும், இப்படி இஸ்லாமியர்கள் மாற்றுமத வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கற்பிப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் பார்க்கப்போகிறோம்.

1. தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரை: 

கீழ் கண்ட தொடுப்பில், தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரையை படிக்கலாம். 

பிற மத வேதங்களில் இஸ்லாம் தொடர் 3

இக்கட்டுரையில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நான் இக்கட்டுரையில் "கிறிஸ்தவ வேதத்தில் காணப்படும் அல்லேலூயா" என்ற வார்த்தையைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி மட்டும் சொல்லப்போகிறேன். மற்ற விவரங்களைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால், தனி கட்டுரையாக பார்க்கலாம். இக்கட்டுரையில் தமிழ் முஸ்லீம் தளம் எழுதிய வரிகள் பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது 

அல்லேலூயா என்ற வார்த்தையைப் பற்றி தமிழ் முஸ்லீம் தளம் கூறியது : 

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது: 

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம். 

அல்லேலுயா! 

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது. 

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை. 

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள் 

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள் 

அவ்வளவு தான் வித்தியாசம்! 

இனி இவ்வார்த்தைக்கு உள்ள உண்மை பொருளைப்பற்றி பார்க்கலாம்.

2. Hallelujah, Halleluyah, or Alleluia (அல்லேலூயா) வார்த்தையின் பொருள் என்ன? 

அல்லேலுயா(Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது: 

1. Halelu -- அல்லேலு 

2. Yah -- யா

"Halelu" என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise) என்று பொருளாகும். 
"Yah" or "Jah" என்றால் "யேகோவா" என்பதாகும். பைபிளின் தேவனுக்கு “யேகோவா” என்று பெயர். "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்பது. 

இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh" என்பதாகும். 

[இயேசுவின் (Yehoshua) பெயரிலும் "Yah" இருப்பதை கவனிக்கலாம். இயேசு என்றால், "யேகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். Source: http://en.wikipedia.org/wiki/Jesus

இந்த விவரங்களோடும் இன்னும் மேலதிக விவரங்களுக்கு "விகிபீடியா" என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள். Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah

Hallelujah, Halleluyah, or Alleluia , is a transliteration of the Hebrew word הַלְלוּיָהּ (Standard Halləluya, Tiberian Halləlûyāh) meaning "[Let us] praise (הַלְּלוּ)." It is found mainly in the book of Psalms. The word is used in Judaism as part of the Hallel prayers, and in Christian praise. It has been accepted into the English language, but its Latin form Alleluia is used by many English-speaking Christians in preference to Hallelujah. 

The word hallelujah mentioned in Psalms is the Hebrew word for requesting a congregation to join in praise. "Hallel" means to recite praise, "hallelu" is the plural form. The grammatical extension "yah" is a way of expressing magnanimity[1], hence halleluyah means "a great praise." 

There are other ways of interpreting this word, as the Hebrew language does include the possibility for many meanings in the same word; thus it can also be understood to mean " Praise (הַלְּלוּ) the LORD (יָהּ) or God ." This interpretation comes from the idea that the suffix "-yah" could be a shortened form of the name "Yahweh/Jehovah," although this would make it an exception, and not typical of standard Hebrew.[2] 

For most Christians, "Hallelujah" is considered the most joyful word of praise to God, rather than an injunction to praise Him. In many denominations, the Alleluia, along with the Gloria in Excelsis Deo, is not spoken or sung in liturgy during the season of Lent, instead being replaced by a Lenten acclamation. 

The term is used 24 times in the Hebrew Bible (mainly in the book of Psalms (e.g. 111-117, 145-150, where it starts and concludes a number of Psalms) and four times in Greek transliteration in Revelation. (emphasis mine)

எபிரேய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் கூறமுடியும், அதன்படி பார்த்தால், "Yah" என்ற வார்த்தைக்கு "Great" என்ற பொருளும் உள்ளது. அதன் படி இவ்வார்த்தையை "A Great Praise": என்று கூடச் சொல்லலாம் என்று விகிபீடியா சொல்கிறது. 

3. தமிழ் முஸ்லீம் தள பொருளில் உள்ள குறைபாடு: 

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது : 

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம். 

அல்லேலுயா! 

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது .

இவர்களின் கருத்துப்படி, "அல்லேலூ யா – Hallelu yah" என்ற வார்த்தையில் உள்ள "யா - Yah " என்பது ஒரு விளி வேற்றுமைச் சொல்லாகும். இது இவர்களின் சொந்தக்கருத்து, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆனால், உண்மையில், "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லாஹ்" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும். 

தமிழ் முஸ்லிம் அறிஞர்களே! இவ்வார்த்தை ஒரு எபிரேய(ஹிப்ரு) மொழி வார்த்தை என்று தெரிந்த உங்களுக்கு, இதன் பொருள் என்ன என்று தெரியாமல் போனதென்ன? அல்லது பொருள் தெரிந்துக்கொண்டே "யார் நம்மை" கேள்வி கேட்கப்போகிறார்கள் என்று நினைத்தீர்களா? 

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது: 

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

உண்மை தான், இவ்வார்த்தைக்கு எபிரேய மொழியின் பொருள் "யோகோவாவை துதி - Praise Yahweh" என்று இருக்கும் வரை, இதை திருப்பிப்போட்டாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால், பிரச்சனை "யா " என்ற வார்த்தை ஒரு நபரை(Yahweh) குறிக்கும் போது, அதை ஒரு "விளி வேற்றுமை" என்று சொல்கிறீரே அது தான். 

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது: 

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள் 

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள் 

அவ்வளவுதான் வித்தியாசம்! 

உண்மையில் இந்த இரண்டு வரிகளை படிக்கும் பாமர கிறிஸ்தவன் "அடடா என்ன அருமையாக சொல்லியிருக்கிறார்கள் முஸ்லீம் சகோதரர்கள், இது அல்(ல)வா ஒற்றுமை என்பது" என்று மெய் மறந்துப்போவான். 

இவ்வளவு அருமையான ஒற்றுமை அல்லது சின்ன வேற்றுமையை இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் அல்லது மக்கள் காட்டுவார்களானால், நான் 1008 "சலாம்" சொல்வேன். 

சரி விஷயத்திற்கு வருகிறேன்:

"யா அல்லாஹ் " என்ற சொற்றொடரில், முஸ்லிம்களின் படி:

  • யா = விளி வேற்றுமை (உங்கள் கருத்துப்படி) 
  • அல்லாஹ் = பெயர்ச் சொல் 

உண்மையில் "யா அல்லேலு" என்ற சொற்றொடரில் : 

  • யா = பெயர்ச் சொல் (Yah, or Yahweh) 
  • அல்லேலு = துதித்தல், Praise (வினைச்சொல்) 

எவ்வளவு அழகாக "அல்லாஹ்" மற்றும் "அல்லேலு" என்ற வார்த்தைகளில் சில எழுத்துக்கள் (உச்சரிப்பு) கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வருவதால், இவைகளை ஒன்றாக இணைத்து "இஸ்லாமிய முறையில்" தவறான ஒரு பொருளை கொடுத்து, மக்களை (உங்கள் தளத்தில் படிக்கும் வாசகர்களை, என்னோடும் சேர்த்து) முட்டாளாக்கியுள்ளீர்கள். முஸ்லிம்களை விட்டால் யாருக்கு வரும் இந்த கலை. 

4. சில கேள்விகள்: 

முஸ்லிம்களே! உங்கள் வழிக்கே வருகிறேன். அல்லேலூயா என்றால், "யா அல்லாஹ்" என்பதற்கு சமம் அல்லது அதற்கு இணையானது (கடைசி சில எழுத்துக்கள் தான் வித்தியாசம்) என்று சொல்கிறீர்களே, அப்படி நீங்கள் சொல்வதை "நடைமுறையில்" கொண்டுவரமுடியுமா? 

அதாவது, 

1. உங்கள் மசூதிகளில், அல்லது நீங்கள் எங்கேயெல்லாம் "யா அல்லாஹ்" என்றுச் சொல்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "அல்லேலு யா" என்றோ அல்லது "யா அல்லேலூ" என்றோ சொல்லவேண்டும் என்று உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு கட்டளையிட முடியுமா? 

2. "அல்லேலுயா – Praise to God " என்ற வார்த்தைக்கு இணையான அரபி வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - Alhamdulillah " என்று விகிபீடியா சொல்கிறது. முஸ்லீம்கள் பல செயல்களின் போதும், இன்ன பிற நேரங்களிலும் "அல் ஹம்து லில் லாஹ்" என்றுச் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் "அல் ஹம்து லில் லாஹ்" என்று சொல்வதற்கு பதிலாகவாவது, "அல்லேலூயா" என்று சொல்லமுடியுமா ? 

Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning "Praise to God" or "All praise belongs to God," similar to the Hebrew phrase Halelu Yah. In everyday speech it simply means "Thank God!" It is used by Muslims as well as Arabic-speaking Jews and Christians , but primarily by Muslims due to centrality of this specific phrase within the texts of the Quran and the speech/sayings of Muhammad. 

3. அரபி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் "அல்(the) ஹம்து(Praise) லில்(Preposition for, to etc..) லாஹ்(God or Allah)" என்று சொல்கிறார்களாம், ஏனென்றால், அரபி பைபிளில் "தேவன்" என்ற இடத்திலே "அல்லாஹ்" என்று மொழிபெயர்த்து விட்டார்கள். எனவே, அரபி பேசும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள முஸ்லீமகள் (குறைந்தது உங்கள் தளத்தை படிக்கும் முஸ்லீம்களாவது) "அல்லேலூயா" என்று சொல்லுங்கள் என்று உங்களால் உங்கள் தளத்தில் எழுதமுடியுமா ? 

5. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள்: 

அன்பு சகோதர, சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், (கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி) உடனே அதில் சொல்லப்பட்டது "உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரி, முதலில் அதை படித்து, ஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்து, உங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள் . 

முடிவுரை: இனியாவது மாற்றுமத கட்டுரைகளை எழுதும் போது, சிறிது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்துக்கள் வேதங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்கள், அதில் இன்னும் என்னென்ன குழப்படிகள் செய்துள்ளீர்களோ? இறைவனுக்குத் தான் வெளிச்சம் "யா அல்லேலு". 

மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/10/blog-post_29.html

தமிழ் முஸ்லிம் தளத்திற்கு கொடுத்த இதர அறுப்புக்கள்