ஓவியர் டாவின்சியும், இயேசுவின் திருமணம் பற்றி பீஜே அவர்களின் பதிலும் – பாகம் 1

முன்னுரை:

இஸ்லாம் பற்றி கேள்விகள் கேட்கும் போது, பீஜே அவர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் பதில் அளிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சுலபமாக புரியும் விவரங்கள் அனைத்தும் ”உண்மையாக இருக்கும்” என்று சிலர் நினைத்துவிடுகிறார்கள், ஆனால், இது தவறாகும். விவரங்கள் சுலபமாக புரிகின்றதோ இல்லையோ, அவைகளில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதைத் தான் நாம் கவனிக்கவேண்டும். பீஜே அவர்கள் சொல்லும் பதில்களில் எவ்வளவு சதவிகிதம் உண்மை இருக்கும்? எந்த அளவிற்கு பொய்கள் இருக்கும்? என்பதை முஸ்லிம்கள் அறிவார்களா?

இயேசு ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்ற கேள்வியை ஒரு இஸ்லாமியர் கேட்டார். பீஜே அவர்கள் என்ன செய்து இருக்கவேண்டும்? குர்-ஆனின் படி இது தான் பதில் என்று சொல்லிவிட்டு சென்று இருக்கவேண்டும். இதை விட்டுவிட்டு அவர் ஓவியர் டாவின்சியின் ஓவியத்தை உதாரணம் காட்டி, டாவின்சி கோட் என்ற படத்தை உதாரணம் காட்டி பதில் சொல்லியுள்ளார். இப்போது, அவருடைய பதிலை படிக்கும் கிறிஸ்தவர்கள் அவரின் அறியாமையை அவருக்கே முதலாவது எடுத்துச் சொல்லவேண்டும், அதன் பிறகு இஸ்லாமிய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவருடைய பதிலினால் அவருக்கும், குர்-ஆனுக்கும் உண்டாகும் பிரச்சனைகளையும், சவால்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். இவருடைய பதிலை படிக்கும் போது, இவர் ஆய்வு செய்து தான் பதில் சொல்கிறாரா? அல்லது சொந்தமாக பதில் சொல்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது.

இந்த கட்டுரையை கீழ்கண்ட தலைப்புகளாக பிரித்து பதிலைக் காண்போம்:

பாகம் 1:

1) இயேசுவிற்கு திருமணம் ஆனதா? என்ற கேள்வியும், பீஜே அவர்களின் பதிலும்

2) ஓவியர்கள், நாவலாசிரியர்கள், படங்கள் - இவைகள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

3) பீஜே அவர்களின் பதில் ஆய்வு செய்து சொல்லப்பட்ட ஒன்றா? இயேசுவின் திருமணம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

4) முடிவுரை

பாகம் 2:

1) டாவின்சியின் ”லாஸ்ட் சப்பர்” படமும், பீஜே அவர்களின் பதிலும்

2) லாஸ்ட் சப்பர் படத்தில் மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? டாவின்சி ஓவியத்தில் உள்ள ஓட்டைகள்

3) டாவின்சி இஸ்லாம்/முஹம்மது பற்றி படம் வரைந்திருந்தால்…?

4) டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி பீஜே அவர்கள் என்ன சொல்வார்கள்?

5) இயேசுவின் திருமணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

6) மகதலேனா மரியாள் விஷயத்தில் “அல்லாஹ்வை பொய்யராக்கும்” பீஜே 

7) முடிவுரை


1. இயேசுவிற்கு திருமணம் ஆனதா? என்ற கேள்வியும், பீஜே அவர்களின் பதிலும்

பீஜே அவர்கள் தம்முடைய ஜீசஸ் இன்வைட்ஸ் என்ற தளத்தில் கீழ்கண்ட விதமாக பதில் அளித்துள்ளார்:

கேள்வி: நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்?

PJ அவர்களின் பதில்:

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.

மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,- மூலம்

மேற்கண்ட பதிலை படித்தவுடன், தமிழ் முஸ்லிம்கள் பீஜே அவர்களின் வார்த்தைகளுக்கு “ஆமீன்” என்று சொல்வார்கள். அவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நம்பிவிடுகிறார்கள். ஒருவர் கேள்வி கேட்டால், தனக்கு தெரிந்த விவரங்களிலிருந்து பதில் சொல்லவேண்டும். குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி இது தான் பதில் என்று சொல்லி கச்சிதமாக முடித்து இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, ஓவியர் டாவின்சியையும், அதைப் பற்றி வந்த படத்தையும் குறிப்பிட்டு, அதில் சொல்லப்பட்டவைகள் உண்மை என்ற தோரணையில் பதில் கொடுத்தபடியினால், அதன் விளைவை பீஜே அவர்கள் சந்தித்து ஆகவேண்டும்.

2. ஓவியர்கள், நாவலாசிரியர்கள், படங்கள் - இவைகள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

இஸ்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது. இஸ்லாம் பேச்சுரிமைக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என்பதை உலகச் செய்திகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிந்துக் கொள்வார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும், இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மார்க்கத்தார்கள் படும் அல்லல்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை காட்டும் கண்ணாடியாய் உள்ளது. முஸ்லிம்கள் சிறும்பான்மையாக வாழும் நாடுகளில் இதனை நாம் காணமுடியாது என்பதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

கடந்த பல ஆண்டுகளாக, உலகில் நடக்கும் பல மனித உரிமை மீறல்களுக்கு இஸ்லாம் காரணமாக உள்ளது, முக்கியமாக கலைஞர்களுக்கு எதிராக இஸ்லாம் தூக்கிய போர்க்கொடி தான் வன்முறையும், பயமுறுத்தல்களும். ஏன் இப்படி? என்று சந்தேகம் வந்தால், கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:

1) முஸ்லிம்களின் படி “ஓவியங்கள்” இஸ்லாமில் அனுமதிக்கப்படுவதில்லை. ஓவியங்களை வரைந்தவர் எவ்வளவு புகழ்பெற்றவராக இருந்தாலும் சரி, முஹம்மது, இஸ்லாமிய கொட்பாடுகள் பற்றிய ஓவியங்களுக்கு அனுமதியில்லை.

2) இதே போல, இஸ்லாமை விமர்சித்து எழுதப்படும் புத்தகங்கள், நாவல்கள் (புதினங்கள்) ஏற்றுக்கொள்ளப்படாது. எழுதினால் தலை உருளும்.

3) புத்தகங்கள் ஆய்வு செய்து எழுதப்பட்டிருந்தாலும், இஸ்லாமிய சரித்திர உண்மைகளை வெளியே சொல்வதாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களின் மனது புண்படும் என்பதால் அனுமதி இல்லை. (முஸ்லிம்களின் மனது எவைகளுக்கெல்லாம் புண்படும்? என்று ஆய்வு செய்து, முஸ்லிம்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வது நல்லது.)

4) இஸ்லாம் பற்றிய கேலிச்சித்திரங்கள், முஹம்மதுவின் உருவம் கொண்ட ஓவியங்களுக்கு அனுமதியில்லை. இப்படி வெளிப்படையாக இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன, சிலர் இப்படி கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்.

5) இது மட்டுமல்ல, நேர்மையான முஸ்லிம்கள் கூட தங்களுக்கு தெரியாமல், அறியாமையில் முஹம்மதுவை விமர்சித்துவிட்டால் கூட, அவர்கள் தண்டனைக்கு தப்புவதில்லை.

6) இஸ்லாமை விமர்சித்து எடுக்கப்படும் திரைப்படங்கள், ”இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்” என்று முஸ்லிம்கள் கருதும் திரைப்படங்களுக்கு அனுமதி இல்லை.

7) தம்மை விமர்சித்து கவிதை எழுதுபவர்களை கொன்று இருக்கின்றார் அமைதி மார்க்கத்தின் இறைத்தூதர் முஹம்மது.

8) முஹம்மதுவை விமர்சிப்பவர் அவர் யாராக இருந்தாலும் சரி (போப்பாக இருந்தாலும் சரி), அவர் இஸ்லாமிய வன்முறையிலிருந்து தப்பமுடியாது. இதனால், உலகளாவிய வன்முறைகள் வெடிக்கும்.

மேற்கண்ட ஒவ்வொன்றிற்கும் அனேக எடுத்துக்காட்டுகளை நாம் செய்திகளில் படிக்கலாம், சரித்திரத்தை திருப்பிப் பார்த்தால் புரிந்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட அனைத்தையும் அறிந்த பீஜே அவர்கள்,

• மற்றவர்களின் மார்க்க விஷயங்களுக்கு வரும்போது மட்டும், ஓவியர் டாவின்சியை வக்காளத்துக்கு அழைப்பது ஏன்?

• கிறிஸ்தவத்தை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்தையும், திரைப்படத்தையும் ஆதரித்து அல்லது அதில் சொல்லப்பட்டவைகள் உண்மை தான் என்ற தோரணையில் பதில் சொல்வது ஏன்?

மேற்கண்ட இரண்டு காரியங்களை பீஜே அவர்கள் செய்துள்ளார்கள், அதற்கான விளைவை அவர் சந்தித்தே ஆகவேண்டும். அடுத்த தலைப்பில் நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். தற்கால உலக நிகழ்வுகளை பார்க்கும் போது, இப்படியாக சொல்லத் தோன்றுகிறது:

”சீக்கிரமாக புகழ்பெற்று, பணம் பெறவேண்டுமென்றால், இயேசுவை விமர்சித்து புத்தகம் எழுது, திரைப்படம் எடு”.
”சீக்கிரமான புகழ்பெற்று, பிணமாகவேண்டுமென்றால், முஹம்மதுவை விமர்சித்து புத்தகம் எழுது, திரைப்படம் எடு”.

3. பீஜே அவர்களின் பதில் ஆய்வு செய்து சொல்லப்பட்ட ஒன்றா? இஸ்லாம் இயேசுவின் திருமணம் பற்றி என்ன சொல்கிறது?

இப்போது பீஜே அவர்கள் எழுதிய வரிகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்வோம். இவரது அறியாமை எப்படி இஸ்லாமுக்கு தலைவலியாக மாறுகின்றது என்பதைக் காண்போம். இவைகளை படிக்கும் முஸ்லிம்கள் நடுநிலையோடு சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.

அ) பீஜே அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: நபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை?. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா?. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்? இந்த கேள்வியைக் கேட்ட சகோதரர் ஒரு முஸ்லிம் ஆவார்.

இவரின் கேள்வியிலிருந்து தெரியவரும் விவரங்கள்:

1) எல்லா தீர்க்கதரிசிகளும் கட்டாயம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று இவர் நம்புகிறார்.

2) முஹம்மதுவுக்கு 12 மனைவிகள் இருந்திருக்கிறார்கள் என்று இவர் அறிந்திருக்கிறார். (ஆனால், முஹம்மதுவிற்கு வைப்பாட்டிகள் இருந்ததை இவர் அறிவாரா? முஸ்லிம்கள் 4 மனைவிகளோடு கூட எத்தனை அடிமைகளை வேண்டுமானாலும் வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளலாம் என்று குர்-ஆன் சொல்வதை இவர் அறிவாரா?)

3) இயேசு மட்டும் பிரம்மச்சாரி என்று சொல்கிறார்களே, இது எப்படி சாத்தியம்? என்று சந்தேகம் இவருக்கு வருகிறது.

4) குர்-ஆனில் அல்லாஹ் “எல்ல நபிமார்களையும் திருமணமானவர்களாகவே நாம் அனுப்பினோம்” என்று படிக்கிறோமே, இயேசு மட்டும் திருமணமாகாதவர் என்று சொன்னால், இது குர்-ஆனுக்கு முரண்படுகின்றதே!

5) இயேசு திருமணமானவராக இருக்கவேண்டும், அல்லது குர்-ஆன் சொல்வது பொய்யாக இருக்கவேண்டும்? இதில் எது உண்மை எது பொய்?

மேற்கண்ட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, அந்த இஸ்லாமிய சகோதரர் பீஜே அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பீஜே என்ன பதில் சொன்னார்? முதலில் அவரது பதிலை படிப்போம், அதன் பிறகு நம் கேள்விகளை முன் வைப்போம்:

PJ அவர்களின் பதில்:

ஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது. மோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்ஸிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,

ஆ) குர்-ஆன் 13:38 எல்லா நபிமார்களும் திருமணமானவர்கள் என்று சொல்கின்றதா?

இவ்வசனம் பற்றி ஜலலைன், இப்னு அப்பாஸ், வஹிதி மற்றும் இபின் கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதைக் காண்போம்.

இந்த வசனம் இயேசுவிற்கு திருமணமானது என்று சொல்லவில்லை. மேலும், எல்லா நபிகளும் திருமணமானவர்கள் தான், பிள்ளைகள் பெற்றவர்கள் தான் என்றும் இந்த வசனம் சொல்லவில்லை. இந்த வசனத்தின் பின்னணியை கவனித்தால், யூதர்களின் குற்றச்சாட்டிற்கு அல்லாஹ் பதில் அளிப்பதாக உள்ளது. முஹம்மது அனேக பெண்களை திருமணம் செய்துள்ளார், இது நபிமார்களுக்கு ஏற்புடையது இல்லை என்று யூதர்கள் குற்றப்படுத்தும் போது, “இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்பு அனுப்பப்பட்ட நபிமார்கள் திருமணமானவர்கள் தான், பிள்ளைகள் பெற்றவர்கள் தான், எல்லாரும் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்கள், இதனால் அவர்களின் ஊழியம் தடைபடவில்லை” என்ற பொருளில் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியதாக, அனேக குர்-ஆன் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள். இதனை பீஜே அவர்கள் படித்ததில்லையா?

இங்கு நான்கு விரிவுரையாளர்களின் விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்: இவர்களில் யாரும் இந்த வசனத்தின் அடிப்படையில், “எல்லா நபிமார்கள் திருமணமானவர்கள், பிள்ளைகள் பெற்றவர்கள்” என்ற பொருளை எடுக்கலாம் என்று சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்.

Tafsir al-Jalalayn:

And when they derided him for having many wives, the following was revealed: And indeed We sent messengers before you, and We assigned to them wives and seed, children — and you are like them; and it was not for any Messenger, from among them, that he should bring a sign, save by God’s leave, because they are servants enthralled [by Him]. For every term, period, there is a Book, wherein is inscribed its delimitation. மூலம்

Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘ Abbas:

(And verily We sent messengers (to mankind) before thee) just as We have sent you, (and We appointed for them wives) more than you have of wives, such as David and Solomon (and offspring) more than your offspring, such was the case with Abraham, Isaac and Jacob. This verse was revealed about the Jews because they said: Had Muhammad been a prophet, he would have been too preoccupied to get married, (and it was not (given) to any messenger that he should bring a portent) a sign (save by Allah's leave) save by Allah's command. (For everything there is a time prescribed) an appointed time. மூலம்

Asbab Al-Nuzul by Al-Wahidi :

(And verily We sent messengers (to mankind) before thee, and We appointed for them wives and offspring…) [13:38]. Said al-Kalbi: “The Jews insulted the Messenger of Allah, Allah bless him and give him peace, saying: ‘This man has no aspiration except for women and marriage. If he was really a prophet, as he claims to be, the matter of prophethood would have preoccupied him from women’, and so Allah, exalted is He, revealed this verse”. மூலம்

Ibn Kathir:

Allah says, `Just as We have sent you O Muhammad, a Prophet and a human, We sent the Messengers before you from among mankind, that eat food, walk in the markets, and We gave them wives and offspring.' Allah said to the most honorable and Final Messenger, மூலம்

இ) இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்கள்:

இயேசுவிற்கு திருமணமானதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்று பதில் அளித்துள்ளார் ஒரு இஸ்லாமிய அறிஞர்.

Your Question-1. Did Jesus (pbuh) ever marry and have children? if he did marry who was he married to and where are the children? The Prophet Isa (a.s.) was only about 32-33 years of age when Allah Subhanah raised him to the heavens. He neither married nor did he have any children. மூலம்

ஈ) ஹதீஸ் திர்மிதி – இயேசு திருமணம் செய்வார், பிள்ளைகள் பெறுவார்

இயேசு கடைசிக் காலத்தில் வருவார் என்றும், அவர் இஸ்லாமுக்குச் சாதகமாக யுத்தம் செய்வார் என்றும், அதன் பிறகு திருமணம் செய்துக்கொண்டு, பிள்ளைகள் பெறுவார் என்றும் பல இஸ்லாமிய அறிஞர்கள் திர்மிதி ஹதீஸை ஆதாரமாகக் காட்டி எழுதியுள்ளார்கள். கீழ்கண்ட நான்கு தொடுப்புகளில் இவ்விவரங்கள் தரப்பட்டுள்ளது.

His Marriage, Death and Deputies After his descension on earth, Hadhrat Isa (A.S.) will marry. He will have children, and he will remain on earth 19 years after marriage. He will pass away and Muslims will perform his Janaza Salaat and bury him net to Rasulullah (Sallallahu Alayhi Wasallam). (Tirmidhi) மூலம்

After his descent on earth, Hadhrat Isa (A.S.) will marry. He will have children, and he will remain on earth 19 years after marriage. He will pass away and Muslims will perform his Janaza Salaat (funeral prayers) and bury him next to Rasulullah (SAW). (Tirmidhi) மூலம்

Those who do believe Jesus will come again, see him in a subordinate role to that of the Prophet of Islam. Jesus will be under a Muslim Amir, leader, showing his complete adherence to Islam. Some Ahadith indicate that on his arrival Jesus will kill an impostor Messiah (i.e. the antichrist). He will live for forty years during which he will marry, have children, and perform Hajj (pilgrimage). After his death, he will be buried beside the grave of the Prophet Muhammad (Wali ad-Din, Miskat Al-Masabih, (tr. James Robson), Vol.II, p.1159; Sahih Muslim, Vol.1, p.92). மூலம்

 …Jesus عليه السلام will perform Hajj (pilgrimage), marry, begets children, and die after living on Earth. His death will signal the beginning of the last days for humanity before the Day of Judgment… மூலம்

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

இஸ்லாமின் படி, இயேசுவின் முதல் வருகையில் அவருடைய ஊழியம் தோல்வி அடைந்தது, அவரை சிலுவையில் அறைவதற்கு முன்பாக அல்லாஹ் உயிரோடு இயேசுவை தன்னளவில் எடுத்துக்கொண்டார். கடைசி காலத்தில் இயேசு மறுபடியும் வருவார், பல காரியங்களை இஸ்லாமுக்காக செய்வார், மேலும் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெறுவார். இதன் படி பார்த்தால், இயேசுவின் முதல் வருகையில் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிகின்றது. ஒரு வேளை பீஜே அவர்கள் ”இயேசுவிற்கு முதல் முறையும் திருமணமும் ஆனது, பிள்ளைகளும் பிறந்தார்கள்”, இரண்டாவது முறையும் அதே போல திருமணமும் நடக்கும் பிள்ளைகளும் பிறப்பார்கள் என்று சொன்னால், அவருடைய கருத்தில் காணப்படும் பிழைகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

1. எதன் அடிப்படையில் மேற்கண்ட பதிலைச் சொல்வீர்கள்? ஆதாரம் ஏதாவது உண்டா?

2. இயேசுவின் முதல் வருகையில் அவருக்கு மனைவி மக்கள் இருந்ததாக குர்-ஆன் சொல்கின்றதா? ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா?

3. குர்-ஆன் 13:38ம் படி, அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கின்ற அனைத்து தீர்க்கதரிசிகளும் திருமணமானவர்கள் என்றோ, பிள்ளைகள் பெற்றவர்கள் என்றோ பொருள் கொள்ளமுடியாது.

4. முதல் வருகையில் இயேசுவிற்கு திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்தார்கள் என்று ஹதீஸ்களிலிருந்து தெளிவான ஆதாரங்களை பீஜே அவர்கள் காட்டமுடியுமா?

5. குர்-ஆனின் படி, இயேசுவை யாருக்கும் தெரியாமல் அல்லாஹ் தன்னிடம் எடுத்துக்கொண்டது உண்மையானால், இயேசுவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக அல்லாஹ் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்? ஏதாவது ஆதாரங்களை பீஜே அவர்கள் காட்டமுடியுமா? (பைபிளின் படி இயேசு தம் சீடனிடம் தம் தாயை பார்த்துக்கொள்ளும் படி பொறுப்புக்களைக் கொடுத்தார். மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்திருப்பார், ஆனால், பைபிளின் படி இயேசுவிற்கு திருமணம் அவசியமில்லை. இதனை இரண்டாம் பாகத்தில் தெளிவாக விளக்குகிறேன்.)

6. இயேசுவை எடுத்துக்கொண்ட பிறகு, அல்லாஹ் சீடர்கள் பற்றி ஒரு சில விவரங்களைச் சொல்கிறார். ஆனால், உண்மையாக இயேசுவிற்கு திருமணம் ஆகியிருந்தால், நிச்சயமாக ஒரு சில விவரங்களையாவது அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றி அல்லாஹ் சொல்லியிருக்கவேண்டாமா?

7. இயேசுவின் பிறப்பு மற்றும் அற்புதம் செய்யும் செயல்களில் இயேசுவின் மேன்மையை உயர்த்திச் சொல்லும் குர்-ஆன், அவரது குடும்பம் பற்றி ஒருசில வசனங்களையாவது சொல்லியிருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் ஒரு சில ஹதீஸ்களை இறக்கியிருக்கவேண்டாமா? (ஹதீஸ்களும் ஒருவகையான அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).

8. இயேசுவின் இரண்டாம் வருகையின் போது, இயேசு ஒரு புதிய தீர்க்கதரிசியாக (நபியாக) வராமல், ஏற்கனவே வந்த இயேசுவாகவே வருகிறார் என்பது தான் இஸ்லாம் மூலமாக நாம் அறிவது. அதாவது, இரண்டாம் முறை வரும் போது, இயேசு குழந்தையாகப் பிறக்கப்போவதில்லை, வானத்திலிருந்து அல்லாஹ்விடமிருந்து அப்படியே வரப்போகிறார். முஹம்மது கடைசி நபி என்று இஸ்லாம் சொல்வதினால், இன்னொரு புதிய தீர்க்கதரிசியாக இயேசு வராமல், முஹம்மதுவிற்கு முந்தி வந்த இயேசுவாகவே திரும்பி வரப்போகிறார். எனவே இந்த முறை இயேசு வரும் போது திருமணம் முடிப்பார், பிள்ளைகளைப் பெறுவார் என்பது தான் இஸ்லாமிய நூல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ளக்கூடிய விவரங்களாக உள்ளது. இஸ்லாமின் படி இந்த பதிலைத் தான் பீஜே அவர்கள் சொல்லியிருக்கவேண்டும். ஆனால், தனக்கு வேண்டாத வேலையை பீஜே அவர்கள் செய்து இப்படி மாட்டிக்கொண்டார்.

மேற்கண்ட விவரங்களையெல்லாம் பார்க்கும் போது, இஸ்லாமின் படியே இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை என்பது தெளிவாக புரிகின்றது. பீஜே அவர்களுக்கு இஸ்லாம் முழுவதுமாகத் தெரியுமா? (அல்லாஹ் எப்படி தன் வசனங்களை தள்ளுபடி செய்கிறாரோ அது போல பீஜே அவர்களும் நெற்று சொன்னதை இன்று தள்ளுபடி செய்வார், காரணம் இவரும் ஒரு சாதாரண மனிதர் பாருங்கள். இதை நான் சொல்லவில்லை, பீஜே அவர்களே சொல்லியுள்ளார்கள்.)

பீஜே அவர்கள் மேற்கண்ட விவரங்களுக்கு பதில்களைச் சொல்வாரா? கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும் ஏதாவது சொல்லியாகவேண்டும் என்ற வெறியோடு சொல்லப்பட்டதாக பீஜே அவர்களின் பதில் காணப்படுகின்றது (ஒரு வேளை இஸ்லாமுக்கு எதிராக அது இருந்தாலும் சரி).

பாகம் 1ன் முடிவுரை:

இதுவரை இயேசுவின் திருமணம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன? பீஜே அவர்களின் பதில் எப்படி இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றது என்பதைக் கண்டோம். இக்கட்டுரையில் டாவின்சி ஓவியத்தைப் பற்றி பீஜே அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு நான் மறுப்பை எழுதவில்லை.

இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில், டாவின்சி ஓவியத்தைப் பற்றி பீஜே அவர்கள் சொன்னவற்றில் உள்ள பொய்கள் என்ன? இயேசுவின் கடைசி விருந்து ஓவியத்தில் உண்மையாகவே மகதலேனா மரியாள் இருக்கிறார்களா? அந்த ஓவியத்தில் உள்ள வெளிப்படையாகத் தெரியும் ஓட்டைகள் என்ன? மற்றும் ஓவியர்கள் போன்ற கலைஞர்களை இஸ்லாமுக்கு சாதகமாக அழைக்கும் பீஜே அவர்கள், அதே டாவின்சியின் இதர ஓவியங்கள் பற்றி என்ன சொல்லப்போகிறார்? இப்படிப்பட்ட ஓவியர்கள் 1400 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாம் பற்றி வரைந்தால், ஆசிரியர்கள் புத்தகங்களை எழுதினால், அதனை பீஜே அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? போன்ற விவரங்களை இரண்டாம் பாகத்தில் வாசிப்போம்.

கிறிஸ்தவர்களுக்கு:

பீஜே போன்ற இஸ்லாமியர்களிடம் சிறிது எச்சரிக்கையாக இருங்கள் என்று கிறிஸ்தவர்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாமல், நீங்களே சுயமாக சிறிது ஆய்வு செய்து பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம்களுக்கு:

முஸ்லிம்களே, கிறிஸ்தவத்தையும், பைபிளையும் அதிகமாக தொடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். எந்த அளவு பைபிளை நீங்கள் விமர்சிக்கிறீர்களோ, அதை விட ஆழமாக இஸ்லாம் கிறிஸ்தவர்களால் ஆய்வு செய்யப்படும். அப்போது பைபிள் சொல்லும் விவரங்களுக்கு முன்பாக குர்-ஆன் தோற்றுப்போவதை நீங்கள் காண்பீர்கள். நான் மேலே முன்வைத்த விவரங்களை நீங்கள் ஆய்வு செய்து பாருங்கள், சிந்தியுங்கள். நீங்கள் நடுநிலையோடு சிந்தித்தாலும் சரி, இஸ்லாமின் பக்கம் அதிகமாக சாய்ந்து சிந்தித்தாலும் சரி, ஒரு காலம் வரும் அப்போது நீங்கள் உண்மை இஸ்லாமை சுயமாக அறிந்துக் கொள்வீர்கள், சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியம் இஸ்லாமின் பிடியிலிருந்து உங்களை விடுதலையாக்கும்.

உங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் அறியாமை இதோடு முடியவில்லை, அடுத்த பாகத்திலும் அது தொடரும். சும்மா தூங்கிக்கொண்டு இருந்த டாவின்சியை வம்புக்கு பீஜே அவர்கள் இழுத்தப்படியினால், பாவம் அவரது ஓவியம் அடுத்த பாகத்தில் மிகவும் ஆழமாக விமர்சிக்கப்படப் போகின்றது.

திருச்சபையின் மணவாளனாம் இயேசுக் கிறிஸ்து இதன் மூலம் மகிமைப்படுவாராக. ஆமென்.

பீஜே அவர்களுக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்