ஸூரா இஃக்லாஸ் (112:2): "ஸமத் (Samad)" - இவ்வார்த்தையின் உண்மைப் பொருள் என்ன? இது ஏகத்துவத்திற்கு முரணா?

முன்னுரை:

குர்‍ஆனின் 112வது அத்தியாயம் இஸ்லாமிய இறையியலின் இதயம் என்றுச் சொல்லலாம்.  இந்த ஸூராவின் பெயர் "இஃக்லாஸ்" மேலும் இதற்கு  ஏகத்துவம் என்ற பெயரும் உள்ளது.

இதன் முதல் வசனத்தில் வரும் அஹத் என்ற வார்த்தையை ஆய்வு செய்து, நாம் வெளியிட்ட  கட்டுரைக்கு பதில் தருபவர்களுக்கு பரிசு தரப்படும் என்று முஸ்லிம் அறிஞர்கள் அறிக்கையிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் கொடுத்த பதிலுக்கு நாம் மறுப்பையும் எழுதினோம், அவைகளை கீழே கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் படிக்கலாம்.

  1. அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?" - 1
  2. பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு - 2
  3. அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு! - 3
  4. இலக்கண பிழையையே அரபியின் சிறப்பம்சம் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கே அடுக்காது - 4
  5. அஹத் ஓர் இலக்கணப்பிழை - 5

இந்த கட்டுரையில், இஃக்லாஸ் ஸூராவின் இரண்டாவது வசனத்தில் வரும் "ஸமத்" என்ற வார்த்தையை கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்வோம்.

  1. இஃக்லாஸ் (112) ஸூராவின் சிறப்பு (குர்‍ஆனின் 1/3க்கு  சமம்)
  2. ஏன் ஒரே ஸூராவை பல முறை அல்லாஹ் இறக்கினான்?
  3. ஸமத் - ஒரு வார்த்தை பல அர்த்தங்கள் (மொழியாக்கங்களில் புதுப்புது அர்த்தங்கள்).
  4. இஸ்லாமிய அறிஞர்களின் தஃப்ஸீர்/விளக்கவுரைகளில் ஸமத்
  5. தபரியின் விளக்கவுரை: எந்த அர்த்தம் சரியானது?
  6. குர்‍ஆனின் 1/3 வசனங்களுக்கு சமமான ஸூராவிற்கு ஏன் இந்த பரிதாப நிலை?
  7. ஸமத் என்பது பாகால்(பால்) என்ற விக்கிரத்தின் பெயரா?
  8. முடிவுரை

"ஸமத் (Samad)" - இவ்வார்த்தையின் உண்மைப் பொருள் என்ன?

இது ஏகத்துவத்திற்கு முரணா?

1) இஃக்லாஸ் (112) ஸூராவின் சிறப்பு (குர்‍ஆனின் 1/3க்கு  சமம்):

குர்‍ஆனின் 112வது ஸுராவான இஃக்லாஸ் அத்தியாயம் குர்‍ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது,  இதனை ஓதியவர் மூன்றில் ஒரு பகுதி குர்‍ஆனை ஓதுபவருக்கு சமம், மேலும்  இதனை அதிகமாக ஓதுபவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்றும் முஹம்மது கூறியுள்ளார். இந்த அத்தியாயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனித்தீர்களா? இந்த விவரங்களைச் சொல்லும் ஹதீஸ்களை இப்போது காண்போம். ஒரே விவரத்தை பல ஹதீஸ்களில் வருவதினால், ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு தருகிறோம். மீதமுள்ள ஹதீஸ்களின் எண்களை நீங்கள் இங்கு   சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளலாம்.

புகாரி நூல் எண்கள்: 5013 ( மேலும் பார்க்க: 5015, 6643, 7374 & 7375)

5013. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவியுற்றார்.

(இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று சொன்னார்கள்.

5015. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். அதைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,’அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.

7375. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தமது தொழுகை யில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து)வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும் போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பிவந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்” என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர்.

அவர், “ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஓரிறைப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்” என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள்.

முஸ்லிம் நூல்: எண்கள் 1478 (மேலும் பார்க்க: 1477, 1479, 1480 & 1481)

1478. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "அல்லாஹ் குர்ஆனை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். அவற்றில் "குல் ஹுவல்லாஹு அஹத்" (எனத் தொடங்கும்112ஆவது அத்தியாயத்)தை குர்ஆனின் ஒரு பகுதியாக ஆக்கினான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

2) ஏன் ஒரே ஸூராவை பல முறை அல்லாஹ் இறக்கினான்?

அதி முக்கியமான இந்த ஸூரா (அத்தியாயம்) எங்கு இறக்கப்பட்டது? மக்காவிலா? அல்லது மதினாவிலா? இதன் முக்கியத்துவத்தை பார்க்கும் போது, இந்த குழப்பத்திற்கே இடமிருக்கக்கூடாது. ஏனென்றால், எது அதிக முக்கியத்துவம் பெறுமோ, எதை மக்கள் தொடர்ந்து அதிகமான நன்மைகளைக் கருதி ஓதுவார்களோ, அதன் மூலம் பற்றி சந்தேகம் வந்திருக்கக்கூடாது, ஆனால் என்ன செய்யமுடியும்! குழப்பம் வந்துவிட்டது.

இந்த ஸுரா  இறக்கப்பட்ட பின்னணி பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் பல கருத்துக்களில் உள்ளார்கள்.

அவைகளை இப்போது காண்போம். 

எண்அறிவிப்பாளர்கள்எந்த சந்தர்ப்பத்தில் இறங்கியது
1

Tabarani 

தபரானி

Hadrat Abdullah bin Masud has reported that the Quraish said to the Holy Prophet (upon whom be be peace): "Tell us of the ancestry of your Lord." Thereupon this Surah was sent down.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸூத் அறிவித்தார்: குறைஷிகள் பரிசுத்த இறைத்தூதரிடம் (ஸல்) "உங்களுடைய இறைவனின் பூர்வீக வம்சத்தை  கூறுங்கள்" என்று கேட்டார்கள், அப்போது தான் இந்த ஸூரா இறங்கியது.

2

Musnad Ahmad, Ibn Abi Harim, Ibn Jarir, Tirmidhi, Bukhari in At-Tarikh, Ibn al-Mundhir, Hakim, Baihaqi

மஸ்நத் அஹமத், இப்னு அபி ஹரிம், இப்னு ஜரீர், திர்மிதி, புகாரி, இப்னு முந்தீர், ஹகீம், பைஹாகி  போன்றோர்களின் படி.

Abul Aliyah has related on the authority of Hadrat Ubayy bin Kab that the polytheists said to the Holy Prophet (upon whom be peace): “Tell us of your Lord's ancestry." Thereupon Allah sent down this Surah.

Tirmidhi has related a tradition on the same theme from Abul Aliyah, which does not contain any reference to Hadrat Ubayy bin Kab, and has declared it to be more authentic.

ஹஜ்ரத் பின் கஅப் அறிவித்ததாக அபுல் அலியாஹ் கூறியதாவது: பலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் “பரிசுத்த இறைத்தூதரிடம் (ஸல்) " உங்களுடைய இறைவனின் பூர்வீகத்தை கூறுங்கள்" என்று கேட்டார்கள், அப்போது தான் அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான்.

3

Abu Yala, Ibn Jarir, Ibn al-Mundhir, Tabarani in Al-Ausat, Baihaqi, Abu Nuaim in Al-Hilyah

அபூ யலா, இப்னு ஜரீர்,  இப்னு முதீர், தபரானி, பைஹாகி, அபூ நுஅயிம் போன்றோர்களின் படி

Hadrat Jabir bin Abdullah has stated that a bedouin (according to other traditions, some people) said to the Holy Prophet (upon whom be peace): "Tell us of your Lord's ancestry." Thereupon Allah sent down this Surah.

ஹஜ்ரத் ஜபிர் பின் அப்துல்லாஹ் அறிவித்ததாவது: பாலைவன நாடோடிகள்  (சில பாரம்பரியங்களின் படி வேறு சிலர்) , “பரிசுத்த இறைத்தூதரிடம் (ஸல்) " உங்களுடைய இறைவனின் பூர்வீகத்தை கூறுங்கள்" என்று கேட்டார்கள், அப்போது தான் அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான்.

4

Ibn Abi Hatim, Ibn Adi, Baihaqi in Al-Asma was-Sifat

இப்னு அபீ ஹதிம், இப்னு அதி, பைஹாகி போன்றோர்களின் படி

Ikrimah has related a tradition form Ibn Abbas, saying that a group of the Jews, including Kab bin Ashraf, Huyayy bin Akhtab and other, came before the Holy Prophet (upon whom be peace) and said: "O Muhammad (upon whom be Allah's peace and blessings), tell us of the attributes of your Lord, who has sent you as a Prophet." Thereupon Allah sent down this Surah.

இப்னு அப்பாஸ் அறிவித்ததாக, இக்ரிமாஹ் கூறியது. ஒரு குறிப்பிட்ட யூத குழுவினரோடு கூட‌, கப் பின் அஷ்ரஃப், ஹுயாய் பின் அக்ஹ்தப் போன்றோர், பரிசுத்த இறைத்தூதரிடம் (ஸல்) "ஓ, முஹம்மதுவே (ஸல்), உங்களை இறைத்தூதராக அனுப்பிய உங்கள் இறைவனின் குணநலன்களைச் சொல்லுங்கள்" என்று கேட்டனர், அப்போது அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான்.

Cited by Ibn Taimiyyali in his commentary of Surah Al-Ikhlas.

இப்னு தய்மிய்யலி இஃக்லாஸ் ஸூராவிற்கு கொடுத்த விளக்கவுரையில் (தஃப்ஸீர்) மேற்கோள் காட்டிய விவரங்கள்

5

Hadrat Anas

ஹஜ்ரத் அனஸ்

Hadrat Anas has stated that some Jews of Khaiber came before the Holy Prophet (upon whom be peace) and they said: "O Abul Qasim, Allah created the angels from light, Adam from rotten clay, Iblis from the flame of fire, the sky from smoke, and the earth from the foam of water. Now tell us about your Lord (of what He is made)." The Holy Prophet (upon whom be peace) did not give any reply to this question. Then Gabriel came and he said: "O Muhammad, say to them: Huwa Allahu ahad."

ஹஜ்ரத் அனஸ் அறிவித்ததாவது: கைபர் ஊரிலிருந்து சில யூதர்கள் பரிசுத்த இறைத்தூதரிடம் (ஸல்) வந்து இவ்விதமாக கேள்வி கேட்டார்கள்: 'ஓ, அபுல் காசிம், அல்லாஹ் மலக்குகளை நெருப்பிலிருந்து படைத்தான்,  ஆதமை களிமண்ணிலிருந்து படைத்தான், இப்லீஷை நெருப்பின் தழலிலிருந்து படைத்தான், வானத்தை புகையிலிருந்து படைத்தான், தண்ணீரிலிருந்து பூமியை படைத்தான்.  இப்போது சொல்லுங்கள், உங்கள் இறைவன் எதனால் படைக்கப்பட்டான்". இந்த கேள்விக்கு பரிசுத்த இறைத்தூதர் எந்த ஒரு பதிலையும் தரவில்லை. அதன் பிறகு தான் ஜிப்ரீல் தூதர் வந்து "ஓ முஹம்மதுவே அவர்களிடம் சொல்லுங்கள்: ஹுவ அல்லாஹு அஹத்" என்று கூறினார்.

6

Amir bin at-Tufail

அமிர் பின் அத்துஃபைல்

Amir bin at-Tufail said to the Holy Prophet: "O Muhammad, what do you call us to?"The Holy Prophet replied: "To Allah." Amir said, "Then, tell us of what He is made, whether of gold, silver, or iron?" Thereupon this surah was sent down.

அமிர் பின் அத்துஃபைல் பரிசுத்த இறைத்தூதரிடம் "எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்கள்" என்று கேட்டான். அதற்கு பரிசுத்த இறைத்தூதர் "அல்லாஹ்வின் பக்கம்" என்று பதில் அளித்தார். அமிர் மறுபடியும் "அப்படியானால், அவன் எதனால் உண்டானவன் என்றுச் சொல்லுங்கள்? பொன்னால், வெள்ளியால், அல்லது இரும்பால் ஆனவனா?" என்று கேட்டான். அப்போது இந்த ஸூரா இறக்கப்பட்டது.

7

Dahhak, Qatadah and Muqatil

தஹ்ஹக், கதாதா, மற்றும் முகதில்

Dahhak, Qatadah and Muqatil have stated that some Jewish rabbis came before the Holy Prophet, and they said: "O Muhammad, tell us what is your Lord like, so that we may believe in you. Allah in the Torah has sent down His description. Kindly tell us of what He is made, what is His sex, whether He is made of gold, copper, brass, iron, or silver, and whether He eats and drinks. Also tell us from whom He has inherited the world, and who will inherit it after Him." Thereupon Allah sent down this Surah.

தஹ்ஹக், கதாதா, மற்றும் முகதில் போன்றோர்களின் அறிவிப்பின் படி,  பரிசுத்த இறைத்தூதரிடம் சில யூத ரபீக்கள் வந்து அவரிடம் இவ்விதமாக கேள்விகளை கேட்டார்கள்: "ஓ முஹம்மதுவே, உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்ளும்படியாக, உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்று எங்களிடம் சொல்லுங்கள். தவ்ராத்தில் இறைவன் எப்படிப்பட்டவன் என்று விவரித்துள்ளான். தயவு செய்து எங்களிடம் கூறுங்கள், இறைவன் எதனால் உண்டானவன், அவன் ஆணா பெண்ணா?  அவன் எதனால் உண்டானவன், பொன், தாமிரம், வெங்கலம், இரும்பு அல்லது வெள்ளியா? அவன் சாப்பிடுவானா? குடிப்பானா? மேலும், அவன் இந்த உலகை யாரிடமிருந்து வாரிசாக பெற்றுக்கொண்டான், அவனுக்கு பிறகு இவ்வுலகம் யாருக்கு வாரிசாகச் செல்லும்? என்று எங்களுக்குச் சொல்லுங்கள்". இந்த நேரத்தில் தான் இந்த ஸூரா இறக்கப்பட்டது.

8

Ibn Abbas

இப்னு அப்பாஸ்

Ibn Abbas has reported that a deputation of the Christians of Najran along with seven priests visited the Holy Prophet upon whom be peace), and they said: "O Muhammad, tell us what is your Lord like and of what substance He is made."The Holy Prophet replied, "My Lord is not made from any substance. He is unique and exalted above everything." Thereupon Allah sent down this Surah.

இப்னு அப்பாஸ் அறிவித்ததாவது. நஜ்ரன் என்ற நாட்டிலிருந்து சில கிறிஸ்தவ பிரதிநிதிகள், ஏழு போதகர்களோடு வந்து பரிசுத்த இறைத்தூதரை (ஸல்) சந்தித்தார்கள். அவர்கள் இறைத்தூதரிடம்: " ஓ, முஹம்மதுவே, உங்கள் இறைவன் எப்படி இருப்பான், எதனால் படைக்கப்பட்டான்? என்று கூறுங்கள்" என்று கேட்டனர். இதற்கு பரிசுத்த இறைத்தூதர் "என் இறைவன் எதனாலும் படைக்கப்பட்டவன் அல்ல, அவன் தனித்தன்மை வாய்ந்தவன், எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவன், சிறந்தவன்" என்று பதில் அளித்தார். இந்த நேரத்தில் தான் அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான்.

Source: https://www.searchtruth.com/tafsir/Quran/112/index.html

எட்டு சூழ்நிலைகளில்(பின்னணிகளில்) இந்த ஸூரா இறங்கியதா?

மேற்கண்ட எட்டு சூழ்நிலையில் இந்த ஸூரா இறங்கியதாக இஸ்லாமிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் ஏதோ ஒரே ஒரு சூழலில் தான் இந்த அத்தியாயம் இறங்கியிருக்கக்கூடும்.   ஒவ்வொரு நிகழ்ச்சியை சொல்லிவிட்டு, இந்த நேரத்தில் தான் இந்த ஸூராவை அல்லாஹ் இறக்கினான் என்று மேற்கண்ட விவரங்கள் சொல்வதினால், ஒன்று மட்டுமே உண்மை, மீதமுள்ள 7 விவரங்கள் இட்டுக்கட்டப்பட்டவைகளாக(பொய்களாக) இருக்கவேண்டும். இவைகள் உண்மையான ஹதீஸ்களிலிருந்து வந்தவைகள் என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அவர்கள் அல்லாஹ்வை குற்றப்படுத்துபவர்களாகவும், கேலி செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பொருள்.

வெறும் வயிற்றில் எத்தனை இட்லி உங்களால் சாப்பிடமுடியும்?

நான் மேலே கொடுத்த ஆங்கில மூல தொடுப்பிலேயே, மேற்கண்ட எட்டு விவரங்களை கொடுத்துவிட்டு, முஸ்லிம்கள் ஒரு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அதாவது, ஒவ்வொரு சூழ்நிலையிலும், அல்லாஹ் அந்த ஸூராவை இறக்கினான் என்றுச் சொல்கிறார்கள். இது நடைமுறைக்கும் அறிவுடமைக்கும் ஏற்காத கூற்றாக உள்ளது.

இது எப்படி உள்ளதென்றால், வெறும் வயிற்றில் எத்தனை இட்லி உங்களால் சாப்பிடமுடியும் என்று கேட்டால், என்னால் "எட்டு இட்லி சாப்பிடமுடியும்" என்று பதில் சொல்வது போன்று உள்ளது.  வெறும் வயிற்றில் அதாவது காலியான வயிற்றில் முதல் இட்லி சாப்பிட்டவுடன், அது காலியான வயிறு இல்லையே! என்று ஒரு கடி ஜோக் சொல்லுவார்கள் நண்பர்கள். இது ஒரு வேடிக்கையாகச் சொல்லப்பட்டதென்றாலும், இதில் ஒரு உண்மையும், லாஜிக்கும் இருக்கின்றதல்லவா? இந்த 112வது ஸுராவிற்கு இது சரியாக பொறுந்தும்.

ஏதாவது ஒரு பின்னணியில் (சூழ்நிலையில்) இந்த ஸூரா இறக்கப்பட்டு விட்டால், முடிந்தது கதை. அதற்கு பிறகு வேறு நபர்கள் அதே கேள்விகளை கேட்கும் போது, முஹம்மது அந்த ஸூராவை ஞாபகப்படுத்தி 'அதே பதிலை சொல்லவேண்டியது தான்'.   இதை செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும்,  "இந்த நேரத்தில் தான் இந்த ஸூரா இறங்கியது' என்று ஹதீஸ்களும், இஸ்லாமிய  நூல்களும் சொல்வது 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவதற்கு சமமான பதிலாகும்'. ஹதீஸ்கள் என்பது, முஹம்மது மரித்த பிறகு 150 ஆண்டுகள் கழித்து எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்ட நூல்களாகும். சன்னி முஸ்லிம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் பற்றிய ஆண்டு விவரங்களை அறிய‌ இந்த கட்டுரையை (https://www.answering-islam.org/tamil/images_lessons/hadith_corrupted_images.html) படிக்கவும். 

150 ஆண்டுகள் முஹம்மது பற்றிய கதைகள் வாய்வழியாக பரவும் போது, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றாற்போல பல விவரங்களைச் சேர்த்து பொய்யான ஹதீஸ்களை பரப்பினார்கள். முஹம்மது மரித்தவுடன், அடுத்த 100 ஆண்டுகள் கலிஃபா பதவிக்கு சஹாபாக்களும், முஸ்லிம்களும் போட்டுக்கொண்ட சண்டையிருக்கின்றதே, அதனை இந்திய அரசியல் நாடகங்களோடு ஒப்பிட்டால், இந்திய அரசியல் வாதிகள், டெபாசிட் கூட பெறமாட்டார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தில் முஹம்மது மீதும், அல்லாஹ் மீதும், குர்‍‍ஆன் மீதும் பலப்பல பொய்கள் சேர்த்து சொல்லப்பட்டன. இதனை முஸ்லிம்கள் மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்? இதனால் இலட்சக்கணக்கான பொய்யான ஹதிஸ்களை மத்திய காலத்தில் ஹதீஸ் கலை வளர்ந்த போது முஸ்லிம்கள் தூக்கி எறிந்தார்கள், இன்னும் அந்த வேலையை செய்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். இஃக்லாஸ் என்ற ஸூரா மிகவும் முக்கியமானது என்று முஹம்மது சொல்லிவிட்டார், எனவே பலவகையான சூழலில் இந்த ஸூரா இறங்கியதாக முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டார்கள், கடைசியாக ஒரே ஸூரா இத்தனை முறை இறங்கியதாக விவரங்கள் கிடைத்துள்ளன.  முஸ்லிம்கள் மறுத்த ஹதீஸ்களில், இந்த எட்டு ஹதீஸ்கள்/விவரங்கள் எப்படியோ தப்பிவிட்டது, இனியாவது முஸ்லிம்கள் இவைகளை ஆய்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று. நான்கு வசனங்கள் கொண்ட ஒரு அத்தியாயத்தை மனப்பாடம் செய்யமுடியாத அளவிற்கு முஹம்மது அவ்வளவு திறமை இல்லாதவர் என்று நாம் சொல்லமுடியாது. பல முறை ஒரே ஸூராவை இறக்குவதற்கு அல்லாஹ்விற்கு ஞாபகமறதி இருந்தது என்றுச் சொல்வது தகுதியானதாக இருக்காது. 

3) ஸமத்: ஒரு வார்த்தை பல அர்த்தங்கள் (மொழியாக்கங்களில் புதுப்புது அர்த்தங்கள்)

இப்பொழுது " ஸூரா 112:2ம்" வசனத்தில் வரும் ஸமத் என்ற வார்த்தையைப்  பற்றி ஆய்வு செய்வோம்.

ஆறு தமிழாக்கங்களில் ஸூரா 112:2

அரபி மற்றும் தமிழில் ஒலிப்பெயர்ப்பு

اَللّٰهُ الصَّمَدُ

அல்லாஹூ அ(ல்அ)ஸ்ஸமது
முஹம்மது ஜான்112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அப்துல் ஹமீது பாகவி112:2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)112:2. அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!)
பீஜே112:2. அல்லாஹ் தேவைகளற்றவன்
சிராஜுத்தீன் நூரி112:2 அல்லாஹ் (யாவற்றை விட்டு) தேவையற்றவன்

தமிழாக்கங்கள் அனைத்திலும் “ஸமத்” என்ற வார்த்தைக்கு "தேவையற்றவன்" என்று பொருள் கூறியுள்ளார்கள்.

இவ்வார்த்தைக்கு 'தேவையற்றவன்' என்பது தான் பொருளா? சில ஆங்கில மொழியாக்கங்களில் இவ்வசனத்தை பார்த்துவிட்டு, அதன் பிறகு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகளுக்குச் செல்வோம்.

No.English TranslatorTranslation
Eternal - நித்தியமானவன்
1Yusuf AliGod, the Eternal, Absolute
2PickthallAllah, the eternally Besought of all!
3M.A.S. Abdel HaleemGod the eternal
4Muhammad AsadGod the Eternal, the Uncaused Cause of All Being
5N.J. Dawoodthe Eternal God
6RodwellGod the eternal!
Independent - சுதந்திரமானவன்
7DaryabadiAllah, the Independent
8ShakirAllah is He on Whom all depend
9Sher AliALLAH the Independent and Besought of all
10Ahmatul Rahman ‘OmarAllah is that Supreme Being Who is the Independent and Besought of all and Unique in all His attributes
11F. MalikAllah is the Self-Sufficient (independent of all, while all are dependent on Him)
Absolute - அறுதியானவன்/முழுமையானவன்
12T.B. IrvingGod is the Source [for everything]
13KhalifaThe Absolute GOD
14Muhammad SarwarGod is Absolute
Neither Eats nor Drinks - சாப்பிட/குடிக்கமாட்டான்
15Hilali-KhanAllah-us-Samad (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks)

மேற்கண்ட 15 ஆங்கில மொழியாக்கங்களில் கவனிக்கும் போது, நித்தியமானவன், சுதந்திரமானவன், முழுமையானவன் (அறுதியானவன்) மற்றும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டான் என்ற பொருளில் 'ஸமத்' வார்த்தையை மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட "தேவையற்றவன்" என்பது வேறு, ஆங்கிலத்தில் பயன்படுத்திய "நித்தியமானவன் (Eternal)" என்பது வேறு.  

அரபியில் நித்தியமானவன்/அழிவில்லாதவன்/மரணமில்லாதவன், என்பதற்கு “க்ஹாலித்” (khā lām dāl) (خ ل د) என்ற வார்த்தை குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை வரும் குர்‍ஆன் வசனங்களை இங்கு சொடுக்கி பார்த்துக்கொள்ளலாம்

ஆனால், குர்‍ஆனில் எந்த இடத்திலும் ஸமத் என்ற வார்த்தை நித்தியமானவன் என்பதற்கு பயன்படுத்தப்படவில்லை.

அதே போன்று "அறுதியானவன்/முழுமையானவன்/சாப்பிடவும் குடிக்கவும் மாட்டான்" என்பதற்கும், தமிழில் பயன்படுத்திய "தேவையற்றவன்"  என்பதற்கும் சம்மந்தமில்லை. ஆங்கிலத்தில் 'சுதந்திரமானவன்(Independent)' என்பது மட்டும் தமிழில் பயன்படுத்திய 'தேவையற்றவன் (non-dependent)' என்பதற்கு ஒத்துப்போகிறது எனலாம்.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பதில் தவறில்லை. தமிழிலிலும் இப்படி அனேக வார்த்தைகள் உள்ளன. ஆனால், இந்த ஸமத் என்ற வார்த்தைக்கு ஏன் இப்படி பல மொழியாக்கங்களில் பலவாறு பொருள் கூறுகிறார்கள்?  ஸமத் என்பதின் உண்மை பொருள் என்ன? தேவையற்றவனா? நித்தியமானவனா? முழுமையானவனா? உணவு உட்கொள்ளாதவனா?

இதில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது, சில முஸ்லிம் அறிஞர்கள் "குடல் இல்லாதவன்" என்றும் விளக்கம் அளித்துள்ளார்கள், அதாவது "அவன் சாப்பிடவும், குடிக்கவும் மாட்டான்" என்பதை இவர்கள் வேறு வார்த்தைகளைக் கொண்டுச் சொல்லவேண்டும் என்பதற்காக, குடல் இல்லாதவன் என்றும் பொருள் கொடுத்துள்ளார்கள், இதனை  கீழே தபரின் தஃப்ஸீரில் நாம் காணலாம்.

இதில் ஏதோ சூட்சமம் இருக்கிறது?

4) இஸ்லாமிய அறிஞர்களின் தஃப்ஸீர்/விளக்கவுரைகளில் ஸமத்:

இந்த வார்த்தையை குர்‍ஆன் மொழிப்பெயர்ப்பாளர்கள் பலவகையில் அர்த்தம் கொள்வதற்கு  காரணம் என்ன? இந்த வார்த்தையில் அப்படி என்ன உள்ளது?

A) ஒரு வார்த்தையில் பொருள் கூறமுடியாது

புகழ்பெற்ற ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கத்தின் சொந்தக்காரர் யூசுஃப் அலி (Yusuf Ali). நேரடியாக விளக்காமல், சுற்றி வளைத்து பொருள் கொடுக்க முயன்றுள்ளார் இவர்.

அப்துல்லாஹ் யூசுஃப் அலியின் விளக்கவுரை: 

ஸமத் என்ற அரபி வார்த்தையை ஒரே வார்த்தையில் மொழியாக்கம் செய்வது கடினமானது. இதனால் நான் "நித்தியமானவன் (Eternal)", "முழுமையானவன் (Absolute)" என்ற இரண்டு வார்த்தைகளைக் கொண்டு மொழியாக்கம் செய்துள்ளேன்.  முழுமையானவன்: அவன் மட்டும் நிரந்தரமாக முழுமையானவன், மற்றவர்கள் தற்காலிகமானவர்கள் அல்லது ஒரு காலவரைக்குட்பட்டவர்கள். நித்தியமானவன்: அவன் யார் மீதும் சார்ந்து இருக்கமாட்டான். ஆனால் உலகிலுள்ள அனைத்தும் மனிதர்களும் அவன் மீதே சார்ந்துள்ளார்கள். மேலும் மனிதர்கள் படைக்கும் உணவுகளை உட்கொள்கின்ற குடிக்கின்ற போலி தெய்வங்களை விட்டு இவன் வேறுபட்டவன்.

Samad is difficult to translate by one word. I have used two, "Eternal" and "Absolute". The latter implies: (1) that absolute existence can only be predicated of Him; all other existence is temporal or conditional; (2) that He is dependent on no person or things, but all persons or things are dependent on Him, thus negativing the idea of gods and goddesses who ate and drank, wrangled and plotted, depended on the gifts of worshippers, etc. (Y. Ali, The Quran: Text, Translation and Commentary, fn. 6298, p. 1806)

B) 100% விழுக்காடு சரியான் பொருள் தரமுடியாது

இந்த இஸ்லாமிய அறிஞர் "இறைவன் என்பவனுக்கு என்னவென்ல்லாம் குணங்கள் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்போமோ, அவைகள் அனைத்தையும் சொல்லி தீர்த்துவிட்டார்". ஏனென்றால் அரபியில் ஸமத் என்ற வார்த்தையின் பொருள் யாருக்குமே தெரியாது. இப்படிப்பட்ட வார்த்தை அரபியில் இருந்தால் தானே! அதன் அர்த்தம் தெரிவதற்கு? 

முஹம்மது அஸத் விளக்கவுரை;

ஸமத் என்ற வார்த்தைக்கு நாம் கொடுக்கும் விளக்கங்கள் 100 விழுக்காடு சரியான பொருள் அல்ல, ஓரளவிற்குத் தான் அதன் அர்த்தத்தை கொடுக்கமுடியும். இவ்வார்த்தை குர்‍ஆனில் ஒரே ஒரு முறை வருகின்றது, மேலும் இதனால் இறைவனுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தமுடியும். இதன் பொருள்: இவனே முதன்மைக் காரணம் மற்றும் நித்தியமானவன். அவன் யார் மீதும் சார்ந்து இருப்பவன் அல்ல, இருப்பவைகளும், கற்பனைக்கு எட்டும் அனைத்தும் அவனிடமே சென்று முடிவடைகின்றன. எல்லாவற்றிற்கும் அவனே முலம் மேலும், அவைகள் நிலைநிற்பதற்கும் வாழுவதற்கும் இவனே காரணம்.

This rendering gives no more than an approximate meaning of the term as-samad, which occurs in the Qur'an only once, and is applied to God alone. It comprises the concepts of Primary Cause and eternal, independent Being, combined with the idea that everything existing or conceivable goes back to Him as its source and is therefore, dependent on Him for its beginning as well as for its continued existence. (Muhammad Asad, source)

C) உணவு உட்கொள்ளாதவன், எல்லோராலும் விரும்பப்படுபவன், . .

'ஸமத்' வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் கொடுக்கவேண்டுமே! என்று எண்ணி, முஸ்லிம் அறிஞர்கள் தங்கள் கற்பனைக்கு எட்டிய அர்த்தத்தை கொடுக்கிறார்கள். 

இப்னு அப்பாஸ் தஃப்ஸீரிலிருந்து (இவர் சஹாபாவாக இருந்தவர்):

(அல்லாஹ், எல்லோராலும் நித்தியமாக விரும்பப்படுபவர்) மகிமை உச்சியில் இருக்கும் ஒரு எஜமானன், இவனுடைய தேவையே அனைவருக்கும் உள்ளது. மேலும் ஸமத் என்றால், குடிக்காதவன், உண்ணாதவன்; உள்ளே வெற்றிடமில்லாதவன்; நித்தியமானவன்; போதுமானவன், பரிபூரணமானவன்; மேலும் ஆரம்பமும்  முடிவும் இல்லாதவன்.

எந்த முஸ்லிம் அறிஞரின் விளக்கவுரையை எடுத்துக்கொண்டாலும், புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். எல்லோரும் ஒரே அர்த்தத்தை கொடுப்பதில்லை. இவர்களில் சிலர் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இவ்வார்த்தையின் உண்மையான பொருள் தெரிவதில்லை என்பதிலிருந்து, நாம் புரிந்துக்கொள்ளலாம், ஸமத் வார்த்தையின் உண்மை முகம்.

கடைசியாக தபரி தஃப்ஸீரில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு ஆய்வை முடித்துக் கொள்வோம்.

5) தபரியின் விளக்கவுரை: எந்த அர்த்தம் சரியானது?

தபரி தமது தஃப்ஸீரில், ஸுரா 112:2ம் வசனத்தின் ஸமத் வார்த்தைக்கு கொடுக்கும் நீண்ட விளக்கத்தைப் பாருங்கள், உண்மை விளங்கும்.

அல்லாஹுஸ்ஸமத் வார்த்தையின் பொருள்: யார் தொழுகைக்கு உரியவனோ அவன் தான் ஸமத். அவனைத் தவிர வேறு யாரும் தொழுகைக்கு/ஆராதனைக்கு உரியவன் அல்ல.  இந்த ஸமத் வார்த்தையின் பொருள் பற்றி குர்‍ஆன் விளக்கவுரையாளர்கள், ஒருமித்த கருத்தைச் சொல்வதில்லை. ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்றுக்கொள்வதில்லை.

And His word: Allahu s-samad expresses (the idea): The One who is worshiped, He the samad, nobody except Him can be properly worshiped. The Qur’an commentators disagree as to the meaning of as-samad.

(I) கீழ்கண்ட அறிஞர்களின் விளக்கம்: ஸமத் என்பவன் வெற்றிடம் (hollow) இல்லாதவன், மேலும்  சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பவன். இந்த கருத்தை கீழ்கண்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அறிவித்தவர்கள்

ஸமத் வார்த்தைக்கு கொடுத்த விளக்கம்

(1) ‘Abd-ar-Rahman b. al-Aswad <Muhammad b. Rabi‘ah <Salamah b. Sabur <Atiyah <Ibn <‘Abbas: 

As-samad is he (that) who (which) is not hollow.

வெற்றிடம் இல்லாதவன்

(2) Ibn Bassar <‘Abd-ar-Rahman <Sufyan <Mansur <Mujahid:

is the solid one (musmat) who has no hollowness. வெற்றிடம் இல்லாதவன்

(3) Abu Kurayb <Waki‘ <Sufyan <Mansur <Mujahid:

மேலே சொன்ன அதே விளக்கம்.

(4) Al-Harit <al-Hasan <Warqa, all together <Ibn Abi Najih <Mujahid:

மேலே சொன்ன அதே விளக்கம்.

(5) Ibn Bassar <‘Abd-ar-Rahman and Waki‘ <Sufyan <Ibn Abi Najih <Mujahid:

is the one who has no hollowness.

வெற்றிடம் இல்லாதவன்

(6) Abu Kurayb <Waki‘, also Ibn Humayd <Mithran, all together <Sufyan <Ibn Abi Najih <Mujahid:

மேலே சொன்ன அதே விளக்கம்.

(7) Ibn Bassar <‘Abd-ar-Rahman <ar-Rabi‘ b. Muslim <al-Hasan: 

As-samad is the one who has no hollowness. He said: Ar-Rabi‘ b. a Muslim told us on the authority of Ibrahim b. Maysarah who said Mujahid sent me to Sa‘id b. Jubayr to ask him about as-samad. He said: He who has no hollowness.

வெற்றிடம் இல்லாதவன்

(8) Ibn Bassar <Yahya <Isma‘il b. Abi Halid <as-Sa‘bi: 

As-samad is the one who does not taste food. சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பவன்

(9) Ya‘qub <Husaym <Isma‘il b. Abi Halid <as-Sa‘bi who said: 

As-samad is the one who does not eat food and does not drink. சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பவன்

(10) Abu Kurayb and Ibn Bassar <Waki‘ <Salamah b. Nubayt <ad-Dahhak: 

As-samad is the one who has no hollowness. வெற்றிடம் இல்லாதவன்

(11) Abu Kurayb <Ibn Abi Za’idah <Isma‘il <Amir:

As-samad is the one who does not eat food. சாப்பிடாமலும் குடிக்காமலும் இருப்பவன்

(12) Ibn Bassar and Zayd b. Ahzam <Ibn Dawud <(al-)Mustaqim b. ‘Abd-al-Malik <Sa‘id b. al-Mussayyib: 

As-samad is the one who has no stuffing (intestines).  குடல் இல்லாதவன்

(13) I was told on the authority of al-Husayn who said:

I heard Abu Mu‘ad say: ‘Ubayd told me: I heard ad-Dahhak say concerning His expression as-samad: He who has no hollowness. வெற்றிடம் இல்லாதவன்

(14) Al-‘Abbas b. Abi Talib <‘Umar b. Rumi <Ubaydallah b. Sa‘id, the guide of al-A‘mas <Salih b. Hayyan < ‘Abdallah b. Buraydah <Abdallah’s father –He said:

I do not know (anything about) it (?) except that he led it back to the Prophet-who said: As-samad is the one who has no hollowness. வெற்றிடம் இல்லாதவன்

(15) Ibn ‘Abd-al-‘Ala <Bisr b. al-Mufaddal <ar-Rabi‘ b. Muslim: I heard al-Hasan say:

வெற்றிடம் இல்லாதவன்

 

(16) Ibn Abd-al-A‘la <Ibn Tawr < Mu‘ammar (Ma‘mar) <‘Ikrimah

வெற்றிடம் இல்லாதவன்

(II) கீழ்கண்ட அறிஞர்களின் விளக்கம்: யாரிடமிருந்து எதுவுமே வராதோ, அவன் தான் ஸமத்

அறிவித்தவர்கள்

ஸமத் வார்த்தைக்கு கொடுத்த விளக்கம்

(1) Ya‘qub <Ibn ‘Ulayyah <Abu Raja:

I heard ‘Ikrimah say concerning His expression as-samad: He from whom nothing comes out and who did not beget and was not begotten.

யாரிடமிருந்து எதுவுமே வராதோ, அவன் தான் ஸமத் மேலும் அவன் யாரையும் பெறவும் மாட்டான், யாராலும் பெறப்படவும் மாட்டான்

(2) Ibn Bassar <Muhammad b. Ja‘far <Su‘bah <Abu Raja’ Muhammad b. Yusuf (leg. Sayf): 

As-samad is the one from whom nothing comes out. யாரிடமிருந்து எதுவுமே வராதோ, அவன் தான் ஸமத்

(III) கீழ்கண்ட அறிஞர்களின் விளக்கம்: யாரையும் பெறவும் மாட்டான், யாராலும் பெறப்படவும் மாட்டான், அவன் தான் ஸமத்

அறிவித்தவர்கள்

ஸமத் வார்த்தைக்கு கொடுத்த விளக்கம்

(1) Ibn Humayd <Mihran <Abu Ja‘far <ar-Rabi‘ <Abu l-‘Aliyah: 

As-samad is the one who did not beget and was not begotten. For nothing begets which is not going to leave an heir. And nothing is begotten which is not going to die. Thus, He informed them that He would not leave an heir and would not die.

மரிக்கிறவர்களை அவன் பெறமாட்டான், அதே போன்று வம்சமும் அவனுக்கு இருக்காது. இறைவன் மரிக்கமாட்டான், அவனுக்கு சந்ததிகளும் இல்லை.

(2) Ahmad b. Mani‘ and Mahmud b. Hidas <Abu Sa‘id as-San‘ani:

The polytheists said to the Prophet: Give us the genealogy of your Lord. Whereupon God revealed Surah 112…. For nothing is begotten which is not going to die, and nothing dies which is not going to leave an heir. God does not die and leaves no heir. "And He has no equal." And He has nobody who is like Him or equal to Him, and nothing is comparable to Him.

பலதெய்வ வழிப்பாட்டுக்காரர்கள் இறைத்துதரிட இப்படி கேட்டார்கள்: உங்களுடைய இறைவனுடைய வம்சாவழியை சொல்லுங்கள். இந்த நேரத்தில் இந்த 112வது ஸூரா இறக்கப்பட்டது. மரிக்கிறவர்களை அவன் பெறமாட்டான், அதே போன்று வம்சமும் அவனுக்கு இருக்காது. இறைவன் மரிக்கமாட்டான், அவனுக்கு சந்ததிகளும் இல்லை. அவனுக்கு சமம் யாருமில்லை. அவனைப்போல யாருமே இல்லை, அவனோடு யாரையும் ஒப்பிடமுடியாது.

(3) Abu Kurayb <Waki‘ <Abu Ma‘sar <Muhammad b. Ka‘b: 

As-samad is the one who did not beget and was not begotten and did not have an equal.

ஸமத் என்பவன் யாரையும் பெறமாட்டான், யாராலும் பெறப்படவும் மாட்டான், அவனுக்கு சமமாக யாருமே இருக்கமாட்டார்கள்

(IV) கீழ்கண்ட அறிஞர்களின் விளக்கம்: அவனே ஆண்டவன், அவனுடைய இறையாண்மை உச்சியை அடைந்துள்ளது.

அறிவித்தவர்கள்

ஸமத் வார்த்தைக்கு கொடுத்த விளக்கம்

(1) Abu s-Sa’ib <Abu Mu‘awiyah <al-A‘mas <Saqiq: 

As-samad means the lord whose lordship has reached its peak.

அவனுடைய இறையாண்மை உச்சியை அடைந்துள்ளது.

(2) Abu Kurayb, Ibn Bassar, Ibn ‘Abd-al-A‘la <Waki‘ <al-A‘mas <Abu Wa’il:

(Ditto) Abu Kurayb and Ibn ‘Abd-al-A‘la omitted "lordship."

முந்தைய விளக்கமே இங்கும் கொடுக்கப்பட்டடுள்ளது. மேலும் அபூ குரைய்ப் மற்றும் அப்துல் அலா "ஆண்டவர்" என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை.

(3) Ibn Humayd <Mihran <Sufyan <al-A‘mas <Abu Wa‘il:

முந்தைய விளக்கமே இங்கும் கொடுக்கப்பட்டடுள்ளது.

(4) ‘Ali <Abu Salih <Mu‘awiyah <‘Ali <Ibn ‘Abbas, with regard to His expression as-samad:

It means the lord whose lordship is perfect; the noble one whose nobility is perfect; the great one whose greatness is perfect; the kind one whose kindness is perfect; the rich one whose richness is perfect; the mighty one whose might is perfect; the knowing one whose knowledge is perfect; the wise one whose wisdom is perfect. He is the one who is perfect in every aspect of nobility and lordship. He is God, Praised be He. This is His attribute, applicable only to Him.

அவனுடைய இறைத்தன்மை முழுமையானது; அவனுடைய உன்னதம் சிறந்தது; அவருடைய சிறப்பு உயர்ந்தது; அவனுடைய இரக்கம் சிறந்தது; அவனுடைய ஐசுவரியம் உயர்ந்தது; அவனுடைய பெலன் சிறந்தது; அவனுடைய அறிவு உயர்ந்தது; அவனுடைய ஞானம் சிறந்தது; எல்லா வகையிலும் அவனே சிறந்தவன்; அவன் தான் இறைவன்; தொழுகைக்கு உரியவன்; அவனுடைய இலக்கணங்கள் அவனுக்கே உரியவையாகும்.

(V) கீழ்கண்ட அறிஞர்களின் விளக்கம்: எவன் மறையாமல் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருப்பானோ, அவனே ஸமத்

அறிவித்தவர்கள்

ஸமத் வார்த்தைக்கு கொடுத்த விளக்கம்

(1) Bisr <Yazid <Sa‘id <Qatadah, with regard to Surah 112:

Al-Hasan and Qatadah used to say: He who endures after His creation. He said: This is a pure (halisahsurah. Nothing is mentioned in it about matters of this world and the other world.

அல் ஹஸன் மற்றும் கதாதா இப்படி கூறியுள்ளார்கள்:  அவன் உருவாக்கப்பட்ட பிறகு நிரந்தரமாக இருப்பவன்.இது ஹலிசாஹ் ஸூராவாகும். இதில் இவ்வுலம் மற்றும் அவ்வுலகம் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

(2) Ibn ‘Abd-al-A‘la <Ibn Tawr <Mu‘ammar (Ma‘mar) <Qatadah: 

As-samad is the lasting one.

ஸமத்: நிரந்தரமாக இருப்பவன்

(VI) அபூ ஜாஃபர் தபரின் விளக்கம்: எவன் மறையாமல் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருப்பானோ, அவனே ஸமத்

தபரின் விளக்கம்:

With the Arabs (Bedouins), as-samad means the lord to whom recourse is had and above whom there is nobody. It is used with reference to their noble men. Thus, the poet says:

There came in the morning a herald of the

death of the two best ones of the Banu Asad,

Of ‘Amr b. Mas‘ud and the samad lord.

And as-Zibriqan says:

There is no guarantee but (better than) a samad lord.

நாடோடிகளாக இருந்த அரபியர்களின் படி ஸமத் வார்த்தையின் விளக்கமாவது: யாரிடம் தஞ்சம் இருக்கிறதோ, யாருக்குமேலே யாருமே இல்லையோ. சில சிறந்த மனிதர்களின் உதவியோடு இந்த விளக்கம் கொடுக்கப்பட்டது; அந்த சிறந்த கவிஞர்கள் கூறுகிறார்கள்:

காலையில் ஒரு அறிவிப்பாளர் வந்தார்

பானு ஆசாத்தின் இரண்டு நபர்களின் மரணம் பற்றிய செய்தி,

'அம்ர் பி. மஸூத் மற்றும் ஸமத் இறைவன்.

ஜிப்ரிகன் கூறினார்:

ஸமத் இறைவனைத் தவிர வேறு யாரிடமிருந்தும் நல்ல உத்தரவாதம் இல்லை

தபரியின் முடிவுரை:

இதுவரை பலரின் விளக்கங்களை பார்த்தோம். ஆக, யாருடைய மொழி வழக்கத்தில் குர்‍ஆன் இறக்கப்பட்டதோ, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் விளக்கத்தை  ஏற்றுக்கொள்ளலாம். மேலே முதல் பிரிவில் (14வது அறிஞர்களின் விளக்கம்) உள்ள இப்னு புரைதா அவர்களின் தகப்பனார் சொன்ன விளக்கம் சரியானதாக இருந்தால், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம் (As-samad is the one who has no hollowness. வெற்றிடம் இல்லாதவன்) என்ற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

6) குர்‍ஆனின் 1/3 வசனங்களுக்கு சமமான ஸூராவிற்கு ஏன் இந்த பரிதாப நிலை?

ஸமத் என்ற வார்த்தைக்கு இஸ்லாமிய அறிஞர்கள், கொடுத்த பல விளக்கங்களைக் கண்டோம். இஃக்லாஸ் ஸூரா இஸ்லாமின் ஏகத்துவத்தின் சிகரம் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள், முஹம்மதுவின் படி, மூன்றில் ஒரு பாக  குர்‍ஆனுக்கு சமமானது இந்த நான்கு வசனங்கள்.

அதிக‌ முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸூரா ஏன் முஸ்லிம் அறிஞர்களிடையே இவ்வளவு பெரிய குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.   எல்லோரும் ஒரே பொருளை அர்த்தத்தை கொடுக்கவில்லை, காரண‌ம் என்ன? மேலும் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கே இதன் பொருள் தெரியவில்லையென்றால், இதன் அர்த்தமென்ன?   அரபி மொழியில் இல்லாத வார்த்தையையே அல்லாஹ் ஸூரா 112ல் பயன்படுத்தியது தானே!

உண்மையாகவே, முஸ்லிம்கள் ஏகத்துவம் பற்றி நல்ல சிறந்த விளக்கத்தை  அல்லாஹ் கொடுக்க விரும்பியிருந்தால், அவன் இந்த ஸூராவை இன்னும் தெளிவாக இறக்கியிருக்கலாம் அல்லவா?

ஒவ்வொரு இஸ்லாமிய அறிஞரும் தனக்கு தோன்றியபடி, பொருள் கூறுகிறார்கள். ஒரு சிலரோ, இறைவன் பற்றிய அனைத்து  பொதுவான குணங்களை  சொல்லியுள்ளார்கள். 

குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவர்கள், ஸமத் வார்த்தையை சரியாக மொழியாக்கம் செய்ய விரும்பி மிகப்பெரிய  மல்யுத்தத்தையே செய்துள்ளார்கள்.  தபரி தஃப்ஸீரின்படி, யாருடைய் மொழி அரபி தாய்மொழியாக உள்ளதோ, யாருடைய மொழி வழக்கு (குறைஷி வட்டார வழக்கு) குர்‍ஆனின் வட்டார மொழி வழக்காக உள்ளதோ, அவருடைய பொருளை ஏற்கலாம் என்று கூறுகின்றார்(இதுவும் இவருடைய சொந்த கருத்து தான்).  

இதன் படி பார்த்தால், யாரிடம் வெற்றிடம் இல்லையோ, அவன் தான் ஸமத், ஆனால் நம் தமிழ் குர்‍ஆன் மொழியாக்கங்களில் "தேவையற்றவன்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த ஆய்வு கட்டுரையை சரியாக நீங்கள் கூர்ந்து கவனித்து இருந்திருப்பீர்களென்றால், கீழ்கண்டவைகள் உங்களுக்கு விளங்கியிருக்கும்:

1) ஸமத் என்ற வார்த்தை அரபியில் இஸ்லாமுக்கு முன்பாக பயன்படுத்தப்படாத வார்த்தையாக இருந்துள்ளது. இதனால் தான் மிகச்சிறந்த முஸ்லிம் அறிஞர்களுக்கும், சஹாபாக்களுக்கும் இதன் பொருள் புரியவில்லை.

2) குர்‍ஆன் வந்த பிறகு இவ்வசனம் இறக்கப்பட்ட பிறகு,  முஸ்லிம்கள் அறிஞர்கள் இதன் விளக்கத்திற்காக பலபாடுகளை பட்டுள்ளார்கள். இதன் விளக்கத்திற்காக தங்கள் மூளையை பிழிந்து எடுத்துள்ளார்கள்.

3) கடைசியாக, தங்கள் ஆய்வுக்கும், புத்திக்கும் ஏற்ற விளக்கத்தை கொடுக்க முயன்றுள்ளார்கள்.

4) எல்லா அறிஞர்களும் ஒருமித்த கருத்தை 'ஸமத்' வார்த்தைக்கு கொடுக்கவில்லை.

5) ஸமத் வார்த்தையில் உள்ள இந்த குழப்பம், சரித்திர ஆசிரியரான‌ குர்‍ஆன் தஃப்ஸீர் அறிஞர் தபரி காலத்திற்கு முன்புலிருந்தே இருந்துள்ளது. நமக்கு ஏன் தலைவலி, அனைவரும் கொடுத்த விளக்கத்தையும் கொடுத்துவிடுவோம் என்று எண்ணி, அவர் அனைவரின் கருத்துக்களை ஒரு பட்டியலிட்டு கொடுத்துள்ளார்.

6) அரபியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே ஸமத் வார்த்தையின் பொருள் எட்டவில்லையென்றால், எப்படி மற்றவர்களுக்கு அது எட்டும்?

7) குர்‍ஆனில் எல்லாம் தெளிவாக உள்ளது என்று பெருமையடித்துக்கொண்டால், குர்‍ஆன் ஒரு தெளிவான அரபி மொழியிலுள்ளது என்று சொல்லும் போது, ஏன் அரபியை தாய்மொழியாக கொண்ட அறிஞர்களே, குழப்பமான வித்தியாசமான விளக்கங்களை கொடுத்துள்ளார்கள்?

8) இஸ்லாமின் இறையியலுக்கு அஸ்திபாரமாக இருக்கும் இந்த இஃக்லாஸ் ஸூராவே, இப்படி தெளிவில்லாமல் இருந்தால், எப்படி இஸ்லாமின் இறையியலை சரியாக புரிந்துக்கொள்ள முடியும்?

9) அவ்வளவு ஏன், முஹம்மதுவின் சஹாபாக்களுக்கே(இப்னு அப்பாஸ் போன்றவர்களுக்கே) ஸமத் வார்த்தையின் விளக்கம் தெரியாது என்றால் இஸ்லாமிய ஏகத்துவத்தின் நிலைப்பாடு என்ன பாடுபடுகின்றது என்பது விளங்கும்.

10) தபரி போன்ற இஸ்லாமிய சரித்திர ஆசிரியர், குர்‍ஆனுக்கு தஃப்ஸீர் எழுதியவர், ஒரு மிகப்பெரிய பட்டியல் கொடுத்துள்ளார் என்றால், என்ன பொருள்? அவருக்கே சரியான விளக்கம் தெரியவில்லை என்பதால் தானே! அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

11) ஸமத் என்ற வார்த்தைக்கு அரபியில் பொருள் இல்லை. ஆனால், குர்‍ஆனில் இவ்வார்த்தை வந்துவிட்டதே, அதனால் ஒரு பொருளை கொடுத்தே ஆகவேண்டுமே என்ற தர்மசங்கடத்தில் முஸ்லிம் அறிஞர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட விவரங்கள், குர்‍ஆன் மொழியாக்கங்கள் நமக்கு காட்டுகின்றன.

12) எல்லா  அறிஞர்களும் தங்கள் சுய ஞானத்திற்கு எட்டிய பொருளை கொடுத்துள்ளார்கள், ஆனால் அதுவே சரியான பதில் அல்லது அர்த்தம் என்றுச் சொல்லும் தைரியமும் சான்றும் யாரிடமும் இல்லை! காரணம் 'ஸமத்' என்ற வார்த்தையே ஒரு 'இட்டுக்கட்டப்பட்ட வார்த்தை' என்பது தான் உண்மை.

7. ஸமத் என்பது பாகால்(பால்) என்ற விக்கிரத்தின் பெயரா?

பிரச்சனை இதோடு முடிந்துவிட்டதா? அல்லது இன்னும் உள்ளதா? ஆம், இன்னும் கதை தொடருகிறது. இஸ்லாமுக்கு வெளியே உள்ள கல்வெட்டுக்களில் அகழ்வாராய்ச்சியில் ஸமத் என்ற வார்த்தை (ஸ ம த என்ற மூல வார்த்தை) பற்றி பார்க்கும் போது, பாகால் என்ற விக்கிரத்திற்கு 'பாகால் ஸமத் - b'l smd ' என்ற பெயர் இருப்பதாக தெரிகிறது.

Kilammu inscription, line 15, - b'l smd (கிலம்மு கல்வெட்டு)

கி.மு. 10ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு கானானியர்கள் வணங்கிக்கொண்டு இருந்த பாகால் ( ஆங்கிலத்தில் Baal) என்ற பெண் தெய்வம் பற்றி கிலம்மு கல்வெட்டில் 15வது வரியில் 'பால் ஸமத் (b'l smd)' என்ற பெயர் வருகிறது.

இஸ்ரவேலர்கள் கூட பாகால் தெய்வத்தை வணங்கி, தேவனால் தண்டிக்கப்பட்டார்கள் என்று எண்ணாகமம்  & சங்கீத புத்தகத்திலும் படிக்கலாம்.  

எண்ணாகமம் 25: 3

3. இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

சங்கீதம் 106:28-29

28. அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, 29. தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.

இந்த பாகாலுக்குத் தான் 'பாகால் ஸமத்' என்ற பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது, இது இஸ்லாமுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்டாகும்.

இதைப் பற்றிய ஆராய்ச்சியை "Franz Rosenthal" என்பவர் செய்துள்ளார், அவரது மேற்கோளை இங்கு காண்போம்.

… There is enough room for suspicion to permit us having a look at some outside evidence.

There, we encounter a noteworthy phenomenon: the not infrequent religious connotation of the root smd.

In Ugaritic, smd appears as a stick or club that is wielded by Ba'l. In the Kilammu inscription, line 15, we find b'l smd, apparently, b'l as the owner of his divine club. In the Bible, the adherence of the Israelites to Baal of Peor is expressed by the nip'al of the root smd. The verb is translated by the Septuagint heteleuse (Numeri 25:3, 5; Ps. 106:28). The use of the verb doubtlessly reflects North Canaanite religious terminology.

From Arabic sources, we learn that an idol of 'Ad was allegedly called samud, which brings us rather close to the environment of Muhammad...

In view of this material, the suggestion may be made that as-samad in the Qur'an is a survival of an ancient Northwest Semitic religious term, which may no longer have been understood by Muhammad himself, nor by the old poets (if the sawahid should be genuine). This suggestion would well account for the presence of the article with the word in the Qur'an, and it would especially well account for the hesitation of the commentators vis-a-vis so prominent a passage. Such hesitation is what we would expect if we are dealing with a pagan survival from the early period of the revelation. (What the Koran Really Says: Language, Text, & Commentary, "Some Minor Problems in the Qur'an", edited with translation by Ibn Warraq [Prometheus Books, October, 2002, Hardcover; ISBN: 157392945X], part 5.2, pp. 336-337; underline emphasis ours)

ஸமத் என்ற வார்த்தை அரபி வார்த்தையாக இல்லாமல் இருப்பதினால் தான், எந்த இஸ்லாமிய அறிஞராலும் சரியான பொருள் கொடுக்கமுடிவதில்லை என்று நாம் கருதுவதற்கு மேற்கண்ட அகழ்வாராச்சியும், கல்வெட்டும் சான்றுகளாக இருக்கின்றன.

பாகால் என்ற தெய்வத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர் 'ஸமத்' என்ற ஆய்வை நாம் ஏற்பதாக இருந்தால், முஸ்லிம்கள் இஸ்லாமை குழி தொண்டி புதைக்கவேண்டும் ஏனென்றால், 'ஏகத்துவம் என்று வெளியே சொல்லிக்கொண்டு, பாகால் போன்ற பல தெய்வ வழிப்பாட்டு சாமிக்கு கொடுத்திருந்த ஸமத்' என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்துவது பெரும் குற்றமாகாதா? மேலும்  ‘ஆது கூட்டத்தார்கள்’ வணங்கிக் கொண்டு இருந்த ஒரு தெய்வத்திற்கு 'ஸமூத்' என்ற பெயர் இருந்ததாக அரேபிய மூல நூல்களிலிருந்தும் அறியமுடிகின்றது. இதனால் இஸ்லாமிய ஏகத்துவ ஸூராவின் கழுத்தில் போடப்பட்ட கயிற்றின் அழுத்தம் இன்னும் அதிகரித்துள்ளது எனலாம்.

ஒரு வகையில் பார்த்தால் ஸமத் என்ற வார்த்தை இஸ்லாமுக்கு முன்பாக பாகால் என்ற தெய்வத்திற்கும், ஆது சமுகத்தார்களின் தெய்வங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது, இன்னொரு வகையில் பார்த்தால், எந்த  ஒரு இஸ்லாமிய அறிஞரும், முஹம்மதுவின் சஹாபாக்கள் முதற்கொன்டு யாருக்குமே இதன் சரியான அர்த்தம் தெரியவில்லை. இதிலிருந்து அறிவது என்ன? காதுகளுக்கு கேட்பதற்கு சுவையாக இருக்கவேண்டுமே என்பதற்காக, அஹத் என்ற வார்த்தையும், ஸமத் என்ற வார்த்தையையும் ஒரு ஸூராவில் (112:1,2) சேர்த்துள்ளதாக தெரிகிறது.

முஸ்லிம்களே, சிந்தியுங்கள்.

8. முடிவுரை:

குர்‍ஆனின் 112வது ஸூராவின் முதல் வசனத்தில் வரும் அஹத் என்ற வார்த்தையை முந்தைய கட்டுரைகளில் ஆய்வு செய்தோம் (அவைகளை இக்கட்டுரையின் முன்னுரையில் கொடுத்துள்ளோம்), இந்த கட்டுரையில் இரண்டாவது வசனத்தில் வரும் 'ஸமத்' வார்த்தையை ஆய்வு செய்துள்ளோம்.

குர்‍ஆனின் மூன்று  பாகத்திற்கு சமமான இஃக்லாஸ் (112) என்ற அத்தியாயத்தின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

  • அஹத் என்ற வார்த்தை ஒரு இலக்கண பிழை என்பதை சான்றுகளோடு நிருபித்தோம்.
  • ஸமத் என்பது ஒரு கற்பனை, முஸ்லிம் அறிஞர்களுக்கு குழப்பம் தரும் வார்த்தை என்பதை இந்த கட்டுரையில் கண்டோம்.

ஏகத்துவத்தை நிலைநாட்டும் ஸூரா என்று போற்றப்படும் இந்த அத்தியாயம், ஏகமாய் இப்படி பிரச்சனைக்கு உள்ளாகுமா? என்று முஸ்லிம்கள் கற்பனையும் செய்திருக்கமாட்டார்கள்.

இக்கட்டுரைகள் பற்றி யாராவது கேள்விகள் கேட்டால், பதில் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மூலம்: https://www.answering-islam.org/Shamoun/samad.htm 

அடிக்குறிப்புக்கள்:

[1] விக்ஷ்னரி ஸமத் - இவ்வார்த்தையின் அர்த்தம் ஐயத்திற்கு இடமுள்ளதாகும்.

صَمَد • (ṣamad)

1. (Qur'anic hapax) The meaning of this term is uncertain. Possibilities include: eternal, everlasting (epithet of God).

‏اَلصَّمَد‎ ― aṣ-ṣamad ― the Everlasting

[2] An Arabic-English Lexicon – by Edward  William Lane -  நாம் இந்த கட்டுரையில் கண்ட இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தையே இவர் கொடுத்துள்ளார். 

தேதி: 2nd Aug 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்