கொரோனாவும் முஹம்மதுவின் பொய்யான தீர்க்கதரிசனமும்: மதினாவில் கொள்ளை நோய் வராது

முஹம்மது மதினா என்ற ஊரை தேவதூதர்கள் பாதுகாப்பார்கள், எனவே மதினாவில் கொள்ளை நோய் பரவாது என்றார்.

ஸஹீஹ் புகாரி எண்: 1880

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களின் படி முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர், இவர் கடைசி இறைத்தூதர். இவர் முஸ்லிம்களின் வழிகாட்டி. 

1) முஹம்மதுவின் முன்னறிவிப்பு பொய்யானதா?

இன்றைய (6 மே 2020) நிலவரப்படி, சௌதி அரேபியாவில் 30250 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது, இவர்களில் 200 பேர் இதுவரை மரணித்துள்ளார்கள்.

இதில் கவனிக்கவேண்டிய விவரம் என்னவென்றால், எந்த ஊருக்கு கொள்ளை நோய் நுழையாது என்று முஹம்மது முன்னறிவித்தாரோ, அதே ஊரில் தான் முதல் மரணம் நடந்துள்ளது. ஆம், மதினாவில் தான் கொரோனாவினால் உண்டான முதல் மரணம் ஏற்பட்டுள்ளது: பார்க்க அரப் நியூஸ் தொடுப்பு 

The warning came as the Kingdom reported its first death from the virus – a 51-year-old Afghan resident in Madinah – and 205 new cases of infection, the biggest single daily jump since the start of the outbreak.

  • மதினாவைப் பற்றி முஹம்மது சொன்ன தீர்க்கதரிசனம் என்னவானது?
  • இப்படிப்பட்ட முன்னறிப்பை முஹம்மது சொல்லியுள்ளார் என்று சௌதி அரேபியாவிற்குத் தெரியாதா? மதினாவில் முழூ அடைப்பை நாடு அறிவித்துள்ளது.
  • ஒரு நபி ஒரு செய்திய முன்னறிவித்தால், அது நடக்கவில்லையென்றால் அவர் பொய் நபி என்று நிரூபனமாகிவிடுகிறதல்லவா?
  • முஹம்மது சொன்னது வேறு வகையான கொள்ளை நோய், கொரோனா வேறுவகையான கொள்ளை நோய் என்று சொல்லப்போகிறார்களா முஸ்லிம்களே?
  • முஹம்மது ஒரு குறிப்பிட்ட கொள்ளை நோயின் பெயரைச் சொல்லவில்லை என்று சொல்கிறீர்களா?  மேலும் மதினாவை பாதுகாக்கும் மலக்குகளிடம் அல்லாஹ் "பாருங்கள் கொள்ளை நோய்களில் பல வகைகள் உண்டு, அவைகளில் இன்ன இன்ன நோய் வந்தால் தடை செய்யுங்கள், இன்ன இன்ன (கொரோனா) நோய் வந்தால் தடை செய்யவேண்டாம், அது மதினாவில் பரவட்டும், மக்கள் சாகட்டும்" என்று கட்டளையிட்டு இருப்பான் என்று நம்புகிறீர்களா? இப்படி அல்லாஹ் மலக்குகளிடம் சொல்லியிருப்பான் என்று கற்பனைச் செய்தால், இன்னும் நிலைமை கேவலமாக இருக்கும்.
  • கடைசியாக, புகாரி ஹதீஸில் வந்த இந்த செய்தி பொய்யானது என்று சொல்லமுடியுமா? முடியாது ஏனென்றால், புகாரி ஹதீஸ் "ஸஹீஹ் -  உண்மையானது" என்று முஸ்லிம்களால் நம்பப்படுகின்றது.

2) கொரோனாவினால் மரிப்பவர்களும் உயிர்த்தியாகிகள்? அப்படியா!

யார் உயிர்த்தியாகிகள்? இஸ்லாமுக்காக மரித்தவர்கள் தானே உயிர்த்தியாகிகள். ஆனால், முஹம்மதுவின் கூற்றின்படி, கொரோனாவினால் மரித்தவர்களும் உயிர்த்தியாகிகள் ஆவார்கள்.

நூல் புகாரி  எண்  2829. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்: 

1. பிளேக் நோயால் இறந்தவர் 

2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர் 

3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 

4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் 

5. இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் புகாரி  எண் 2830. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நூல் புகாரி  எண் 3474. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

இஸ்லாமிய உயிர்த்தியாகிகள் பற்றிய கேள்விகள்:

முஹம்மதுவின் கூற்றுக்களில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை, ஒரு அறிவுடமையான கூற்றாகவும் அது தெரியவில்லை.

  • கொள்ளை நோயினால் மரிப்பவர் உயிர்த்தியாகி என்றால், புற்றுநோய் மற்ற நோய்கள் மூலம் மரிக்கும் முஸ்லிம்களுக்கு உயித்தியாகிகள் என்ற அந்தஸ்து ஏன் கொடுக்கக்கூடாது?
  • கொள்ளை நோயினால் உண்டான மரணம், எப்படி மற்ற நோயினால் உண்டாகும் மரணத்தைவிட சிறந்தது?
  • மேலும் வயிற்றுப்போக்கில், தண்ணீரில் மூழ்கி மற்றும் கட்டிடம் இடிந்து இறந்தவர்கள் எந்த வகையில் உயிர்த்தியாகிகள் ஆகமுடியும்? இதில் ஏதாவது லாஜிக்கோ, நியாயமோ இருக்கிறதா? 

ஒரு ஏழாம் நூற்றாண்டு மனிதரால் இப்படிப்பட்ட அறிவுடமைக்கு ஏற்காத வழிகாட்டுதல் தான் கொடுக்கமுடியும், என்பதற்கு முஹம்மதுவின் கூற்று ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தேதி: 6th May 2020


இதர தலைப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்