எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?

கேள்வி 513: எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?

பதில் 513:  யூதர்களானாலும் சரி முஸ்லிம்களானாலும் சரி, இன்னும் யாராக(கிறிஸ்தவர்களாக) இருந்தாலும் சரி "ஜெருசலேம் எங்களுக்குத் தான் சொந்தம்" என்றுச் சொல்வதைப் பார்த்தால், என்ன தோன்றுகிறதென்றால்? கடந்த 4000 ஆயிரம் ஆண்டுகளாக, இவர்கள் மட்டுமே ஜெருசலேமை இடைவிடாமல் ஆண்டுக்கொண்டு இருப்பதாகவும், மற்றவர்கள் திடீரென்று இன்று வந்து இவர்களை துரத்திவிட்டு, கைப்பற்றிக்கொண்டதாகவும், “அதனால் தான் இந்த அங்கலாய்ப்பும் சண்டையும்” என்று சொல்வதைப்போன்று தெரிகின்றது.  இது வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் சரித்திரம் என்ன சொல்கிறது? கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்?

  1. யூதர்கள் மொத்தம் 591 (518+73) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  2. கிறிஸ்தவர்கள் 417 ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
  3. முஸ்லிம்கள் மொத்தம் 1191 (461+730) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள். 

எருசலேமை கடந்த காலங்களில் யார் ஆண்டார்கள் என்ற பட்டியலை கிழ்கண்ட இரண்டு தொடுப்புக்கள் தெளிவாக விவரிக்கின்றன, இவைகளை சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக விக்கிபீடியா தளத்தின் தொடுப்பில் இதைப் பற்றிய ஒரு கால வரைபடம் உள்ளது, அதில் இன்னும் தெளிவாக இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்? சரித்திரத்தின் படி முஸ்லிம்கள்  தானே! ஆம் முஸ்லிம் அரசாட்சி தான் 1191 ஆண்டுகள் ஆண்டது. இது  எதனை நிருபிக்கின்றது? இது எதையும் நிருபிக்கவில்லை, வலிமையுள்ளவர்களே வெல்வார்கள் என்பது தான் உலகத்தில் காணப்படும் நிலை. அதிக ஆண்டுகள் முஸ்லிம் அரசர்கள் எருசலேமை ஆண்டதால், இன்று எருசலேம் அவர்களுக்கு சொந்தமாகுமா?

தாவீது ராஜாவாக இருந்தாலும் சரி, இரண்டாம் கலிஃபா உமர் அவர்களானாலும் சரி, அதே போன்று மற்ற கிறிஸ்தவ ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் "போர் முனையில் ஆட்சியை பிடித்து மக்களை கொன்று எருசலேமை கைப்பற்றியவர்கள் தானே!, இதில் யாருமே இந்த விஷயத்தில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல.

போர் புரிந்து, மக்களைக் கொன்று ஆட்சி செய்தவர்கள் சிறந்தவர்கள் என்று கருதினால், உலக சரித்திரத்தில் பாபிலோனியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் (மகா அலேக்சாண்டர்), மற்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என்று நாம் ஓட்டு போடவேண்டியிருக்கும், இதனை தற்காலத்தில் யாராவது ஒப்புக்கொள்வார்களா?

கி.மு. 1000 அல்லது 1004ம் ஆண்டில், தாவீது ராஜா எருசலேமை கைப்பற்றிய விவரத்தை கீழ்கண்ட வசனத்தில் காணலாம்:

II சாமுவேல் 5:6-7

6. தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7. ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

கலிஃபா உமர் எப்படி எருசலேமை கைப்பற்றினார்? இந்த தமிழ் கட்டுரையை படிங்கள்.

தாவீது ராஜாவானலும் சரி, கலிஃபா உமரானாலும் சரி யாரும் சமாதான புறாக்கள் அல்ல. எனவே யார் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்ற விவரம், எந்த நியாயமான முடிவு எடுக்கவும் பயன்படாது.

சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால், எருசலேம் 52 முறை தாக்கப்பட்டுள்ளது, 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,  23 முறை முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் கடைசியாக இரண்டு முறை அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், இதனால் உலகின் பழைய நகரங்களில் எருசலேமும் ஒன்றாகும்(https://en.wikipedia.org/wiki/Kingdom_of_Jerusalem).

Source: சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: தலைப்பு எருசலேம், கேள்விகள் 511 - 520 வரை - (பாகம் 23)


இதர தலைப்புகளில் உமரின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்