இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி - Joke of the Year

தமிழாக்க முன்னுரை: "இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. "இயேசுவிற்கு நெருக்கமாக இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்று முஹம்மதுவும் கூறியுள்ளார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், ”இயேசுவின் போதனையும், முஹம்மதுவின் போதனையும்” ஒன்றல்ல என்பதை நன்றாக புரிந்துக்கொள்வீர்கள். இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முஹம்மது போதித்தார் என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம். இக்கட்டுரையில் இயேசுவின் தெய்வீகத்தன்மையோடு முஹம்மதுவின் வாழ்க்கையை ஆசிரியர் ஒப்பிடவில்லை, மாறாக இவ்விருவரின் போதனைகள் ஒன்றல்ல என்பதை மட்டும் எடுத்துக் காட்டுகிறார். இதை படித்தபிறகு நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம், அது என்ன? இயேசு ஒரு இஸ்லாமிய நபியோ (அ) தீர்க்கதரிசியோ அல்ல. இயேசுவின் செய்தியும், முஹம்மதுவின் செய்தியும் வெவ்வேறானவை. இவர்கள் இருபெரும் நேர் எதிர் துருவங்கள், என்றும் ஒன்றாக சேராத இரயில் தண்டவாளங்கள். இப்போது நாம் யாரை தெரிந்தெடுக்கிறோம் என்பது தான் கேள்வி.

Jesus is a Muslim Prophet? 

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?

பைபிளின் சுவிசேஷங்களையும், குர்-ஆனையும் படித்துப் பாருங்கள். இயேசுவும், முஹம்மதுவும் தங்கள் செய்திகளை வெவ்வேறு மூலத்திலிருந்து பெற்றதாக அறிந்துக்கொள்ளலாம். இயேசுவின் போதனையும், வாழ்க்கையும் முஹம்மதுவின் வாழ்க்கைக்கு எதிர்மறையாக இருப்பதை காணமுடியும். இஸ்லாமிய அறிஞர்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி (தீர்க்கதரிசி) என்று சொல்கிறார்கள். சுவிசேஷங்களுக்கும், குர்-ஆனுக்கும் இடையே எந்த வித்தியாசங்கள் வந்தாலும், அந்த வித்தியாசத்திற்கு காரணம் "கிறிஸ்தவர்கள்" சுவிசேஷங்களை மாற்றி விட்டார்கள் என்று வாதாடுகிறார்கள். இஸ்லாமிய அறிஞர்களின் இந்த சந்தேகம், இஸ்லாமுக்கு நன்மையாக மாறுவதற்கு முன்பாகவும், இந்த இரண்டு புத்தகங்களையும் படிக்காதவர்களுக்காகவும் ஒரு சிறிய ஆய்வு செய்யலாம். குர்-ஆனையும், பைபிளையும் ஒப்பிட்டு, முஹம்மது எதை பிரச்சாரம் செய்தாரோ, அதற்கு நேர் எதிராக இயேசு செய்த போதனைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1. திருமணம் மற்றும் விபச்சாரம் (ADULTERY AND MARRIAGE) 

இயேசுவை பொருத்தவரையில், ஒருவன் ஒரு பெண்ணை காமத்தோடு பார்த்தாலே போதும், அது "விபச்சாரம்" செய்ததற்கு சமம் என்று சொல்கிறார். விவாகரத்து என்பது "இறைவனின் கட்டளை" அல்லது "இறைவன் விரும்பும் செயல்" அல்ல என்று இயேசு தெளிவாகச் சொன்னார். யுதர்கள் பல மனைவிகளை உடையவர்களாக இருந்தாலும், மனிதன் "ஒரு மனைவி உடையவனாக" இருக்கவேண்டும் என்று இயேசு அழுத்திச் சொன்னார்(அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்றார்). 

இந்த விஷயத்தில் முஹம்மது கொஞ்சம் அதிக சுதந்திரத்தை முஸ்லிம் ஆண்களுக்கு கொடுத்தார். மனைவி அல்லாத பெண்களோடு உடலுறவு(Sex) கொள்வது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது, மட்டுமல்ல அது ஒரு ஆசீர்வாதமானது என்றும் கருதப்பட்டது. முஹம்மதுவின் படி, இந்த பெண்கள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவர்களாக அதாவது அடிமைகளாக இருக்கவேண்டும் மற்றும் இவர்களின் அனுமதியில்லாமல் இவர்களிடம் உடலுறவு கொள்ளலாம் (கற்பழிப்பு). முஹம்மது நான்கு மனைவிகள் வரையில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று பலதாரமணத்திற்கு அனுமதியளித்தார். 

இயேசு: 

மத்தேயு 5: 

27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று

மாற்கு 10:

4. அதற்கு அவர்கள், தள்ளுதற் சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றார்கள். 5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, உங்கள் இருதய கடினத்தினிமித்தம்இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். 6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். 7. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன்மனைவியோடே இசைந்திருப்பான்; 8. அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். 9. ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்என்றார்.

முஹம்மது: 

குர்-ஆன் 4:3,

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3) 

குர்-ஆன் 4:24 

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (4:24) 

2. மரணத்தின் பின் வாழ்க்கை (AFTERLIFE)

இயேசு மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை உடலுறவு இல்லாத ஒரு "ஆவிக்குரிய" வாழ்க்கை என்றுச் சொன்னார், அங்கு திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்றுச் சொன்னார். ஆனால், முஹம்மதுவின் போதனைப்படி சொர்க்கம் என்பது ஒரு உடல் சம்மந்தப்பட்ட இடம், அங்கு இளவயது கன்னிகள்(பெண்கள்) இருப்பார்கள். முஹம்மது இவ்வசனங்களிலும் - குர்-ஆன் 37:40-48; 44:51-55; 52:17-20,  இன்னும் பல இதர வசனங்களிலும் சொர்க்கத்தைப் பற்றி விவரிக்கிறார். அங்கு மிகவும் அழகான மெத்தைகள், விருப்புகள் இருப்பதாகச் சொல்கிறார், இங்கும் உடலுறவிற்கு தடையில்லை. 

இயேசு யூத சதுசேயர்கள் "உயிர்த்தெழுதல், மற்றும் சொர்க்கத்தில் திருமண வாழ்வு பற்றி" கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார் 

மத்தேயு 22:

29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். 30. உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; 

முஹம்மது சொர்க்க தோட்டத்தைப் பற்றி விவரிக்கிறார்:

குர்-ஆன் 55:70-76

70: அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். 71: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? 72: ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். 73: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? 74: அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. 75: ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? 76: (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

3. எதிரிகளை எப்படி சமாளித்தார்கள்: (HOW TO DEAL WITH ENEMIES) 

தன்னை பின்பற்றுபவர்கள் "சமாதானம் செய்கிறவர்களாக - peacemakers" இருக்கவேண்டும் என்று இயேசு மலை பிரசங்கத்தில் சொல்கிறார். ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள் தான் "தேவனுடைய குமாரர்கள் ஆவார்கள்" என்றுச் சொல்கிறார் (மத்தேயு 5:9). இயேசு மன்னிக்கும் சுபாவத்தை அதிகமாக புகழ்ந்தார், உட்சாகப்படுத்தினார், ஏனென்றால், மன்னிக்கும் சுபாவம் மூலம் தான் "சமாதானத்தை" தர இயலும். இயேசு உங்கள் விரோதிகளையும் நேசியுங்கள் என்று போதித்தார், மற்றும் எல்லாரும் இறைவனைப் போல மிகவும் கருணை உடையவர்களாக வேண்டும் என்று விரும்பினார். 

முஹம்மது மிகவும் 'சுலபமான' வழிமுறையை பின்பற்றினார், "உங்கள் எதிரிகளை கொல்லுங்கள், அவர்கள் மீது ஆளுகை செலுத்துங்கள்". இவருடைய எண்ணம் என்னவென்றால், உன் எதிரி உன் கைக்குள் அடங்கவில்லையானால்(Surrender), அல்லது மரிக்கவில்லையானால்(dead) உனக்கு "சமாதானம்" இல்லை. முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "அவர்களை கொல்லுங்கள்" அவர்களோடு போர் புரியுங்கள் என்றுச் சொன்னார், ஒரு வேளை அவர்களுக்கு போர் புரிவது பிடிக்கவில்லையானாலும், அதை செய்யவேண்டும் காரணம், அல்லாஹ்வைப் பொருத்தவரையில் சண்டையிடுவது ஒரு நல்ல செயல். 

இயேசு: 

லூக்கா 6: 

35 . உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே, 36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்

முஹம்மது: 

குர்-ஆன் 2:190-191, 216 

190: உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 191: (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். 216: போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 

4. தங்கள் செய்தியை பரப்பிய விதம் (PROSELYTIZING): 

இயேசு மற்றும் முஹம்மது இருவரும் "தங்கள் செய்தி" மக்களுக்கு சென்று அடையவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வித்தியாசமான வழிமுறைகளை கையாண்டனர். இயேசு நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள், அற்புதங்கள் செய்வதின் மூலமாக, இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டு மக்களுக்கு தன் செய்தியைச் சொன்னார் ஒரு வேளை மக்கள் இவருடைய செய்தியை கேட்கவில்லையானால், அவர்களை அப்படியே விட்டுவிடும்படி இயேசு சொன்னார், ஏனென்றால், அந்த மக்களோடு இறைவன் இடைபடுவார் என்று விட்டுவிட்டார். 

வெளிப்படையாக சொல்லவேண்டுமானால், ஆரம்ப காலத்தில் தன் மக்களுக்கு முஹம்மது தன் செய்தியை அமைதியான முறையில் பரப்பினார், ஆனால் அவருக்கு வெற்றி இல்லை. முஹம்மதுவின் செய்தியை கேட்டவர்கள் அவரை எதிர்த்தார்கள், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவர் தன் கையில் வாளை எடுத்தார். இவர் சில யுத்தவீரர்களின், திருடர்களின், கொல்லையடிப்பவர்களின் உதவியுடன், தன் செய்தியை நம்பும் பல மக்களை சம்பாதித்தார். இவர்களுக்கு உவ்வுலகத்தில் செல்வ செழிப்பையும், மறு உலகத்தில் பெண்களையும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தார். இஸ்லாமுக்கு மாறாத மக்களை கொன்றார் அல்லது "ஜிஸ்யா" என்ற வரி கட்ட கட்டாயப்படுத்தினார் .

இயேசு:

லூக்கா 10:

3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது, இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். 6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன்கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான. வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, 9. அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய், 11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.

முஹம்மது: 

குர்-ஆன் 9

28: ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 29: வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

5. பிள்ளைகள் அல்லது குழந்தைகள் (CHILDREN) 

இயேசுவும் முஹம்மதுவும் குழந்தைகளை நேசித்தார்கள், ஆனால், வித்தியாசமான வழியிலே. இயேசு தன் சீடர்களுக்கு "குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களாகவும், தாழ்மையாகவும் இருக்கும்படியாக" போதித்தார். ஏனென்றால், தேவனுடைய அரசு (இறைவன் இருக்கும் இடம்) இப்படிப்பட்டவர்களுடையது என்றுச் சொன்னார். இயேசு தன் கைகளை பிள்ளைகள் மீது வைத்தார் மற்றும் அவர்களை ஆசீர்வதித்தார். 

முஹம்மது கூட சின்ன குழந்தைகளை நேசித்தார், முக்கியமாக சிறுமிகளை. குர்-ஆன் 65:4ம் வசனத்தை அரபி மொழியில் மிகவும் சரியாக புரிந்துக்கொள்ளலாம். ஏனென்றால், வேறு மொழியில் மொழிபெயர்ப்பவர்கள், இந்த வசனத்தின் உண்மை பொருளை கூறாமல், மழுப்பி மாற்றி மொழி பெயர்க்கிறார்கள். இந்த வசனத்தில் "மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும்," என்ற சொற்றொடருக்கு சரியான பொருள், "இதுவரை ருதுவு எய்தாத(வயதுக்கு வராத) சின்ன சிறுமிகள்" ஆகும். அரபி தெரிந்தவர்களுக்கு இதோ அந்த சொற்றொடர்: 

وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا 

இந்த வசன வெளிப்பாடு முஹம்மதுவிற்கு ஒரு வாய்ப்பை தருகிறது, அதாவது முஹம்மது ஆயிஷா என்ற சிறுமிக்கு 6 வயதாகும் போது, திருமணம் (Marry) செய்துக்கொண்டார், மற்றும் 9 வயதாகும் போது தாம்பத்தியத்தில் ஈடுபட்டார். (இவைகள் பற்றி இந்த ஹதீஸ்கள் மூலமாக அறிந்துக்கொள்ளலாம் Sahih Muslim 8:3310; Bukhari 5:58:234, 8:73:151, Tabari IX: 131) 

இயேசு:

மாற்கு 10:

13. அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களைஅவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள்அதட்டினார்கள். 14. இயேசு அதைக்கண்டு விசனமடைந்து, சிறு பிள்ளைகள் என்னிடத்தில்வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்;தேவனுடையராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது. 15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தைஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து,அவர்களை ஆசீர்வதித்தார். 

முஹம்மது:

குர்-ஆன் 65: 

4 மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (65:4) 

6. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் இவர்கள் கையாண்ட முறை (PREJUDICE)

இயேசுவும், முஹம்மதுவும் தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி அதிகமாக வேதனைப்பட்டனர். ஆனால், இவர்கள் இதற்காக வித்தியாசமாக செயல்பட்டார்கள். இயேசு தன்னையும் தன் செய்தியையும் ஏற்றுக்கொள்ளாத மக்களின் இச்செயலுக்காக, அவர் தன்னுடைய செய்தியை இஸ்ரவேல் இல்லாத மக்களுக்கு (அன்னிய மக்களுக்கு) சொல்ல ஆரம்பித்தார். 

முஹம்மதுவோ, கிறிஸ்தவர்களிடமும், யூதர்களிடமும், விக்கிர ஆராதனைக்காரர்களிடமும், மற்றும் தன் செய்தியை நம்பாதவர்களிடமும் நட்பு (நண்பர்களாக) இருக்கக்கூடாது என்று மிகவும் கண்டிப்பாக கட்டளையிட்டார்.  

இயேசு:

யோவான் 3 

16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில்அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்

யோவான் 4: 

7. அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளைநோக்கி, தாகத்துக்குத்தா என்றார். 9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி, நீர்யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம்என்றாள். 10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்றுஉன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தயானால், நீயே அவரிடத்தில்கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11. அதற்கு அந்த ஸ்திரீ, ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும்ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர்பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும்தாகமுண்டாகும். 14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். 

முஹம்மது: 

குர்-ஆன் 5: 

41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு

44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். 

51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். 

முடிவுரை: (CONCLUSION) 

இயேசு மற்றும் முஹம்மது இருவரும் ஒரே செய்தியை போதிக்கவில்லை என்பதை, எழுத்தறிவில்லாத பாமரன் கூட தெளிவாக புரிந்துக்கொள்வான். இந்த கட்டுரையின் நோக்கமானது, கிறிஸ்தவத்தையும், இஸ்லாமையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல. அதற்கு மாறாக, இவ்விரண்டும் வித்தியாசமானவை என்பதை சொல்வதற்காகவே. இந்த சரித்திர நபர்களின் போதனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம். இப்போது நாம் பார்த்த இந்த வித்தியாசங்கள் நமக்கு "இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் போதனைகள்" வித்தியாசமானவை என்பதை காட்டுகிறது. 

முஹம்மதுவின் கருத்துப்படி "இயேசுவின் சீடர்கள் சுவிசேஷங்களை மாற்றியதாகவும், அதை, தான் சரி செய்வதாகவும்" நினைத்திருந்தார். அதனால் தான், இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இவ்வளவு வித்தியாசங்கள். 

முஹம்மது கொண்டு வந்த மாற்றங்கள் உண்மையிலேயே தேவையா அல்லது இவைகள் ஆன்மீக நல்ல வாழ்விற்கு எதிரானவையா என்று முடிவு செய்யவேண்டியது, இவைகளை படிக்கும் உங்கள் கையில் உள்ளது. எந்த வகையில் பார்த்தாலும் சரி, இயேசுவின் போதனைகளை முஹம்மது மதிக்கவில்லை என்பது புரியும். இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக இருக்கும் செய்தியை முஹம்மது போதித்தார். இயேசு போதித்த ஒவ்வொரு செய்திக்கும் எதிராக போதித்து, இயேசு வாழ்ந்த வாழ்விற்கு எதிராக போதித்துவிட்டு, "இயேசு ஒரு முஸ்லீம் தீர்க்கதரிசி(நபி)" என்றுச் சொல்வது, வெறும் "உதடுகளால் செய்யும் புகழாரமே ஒழிய வேறில்லை.

ஆங்கில மூலம்:  http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1400

தமிழ் மூலம்: http://www.isakoran.blogspot.in/2007/10/joke-of-year.html

உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்