காஷ்மீரை விட்டுக்கொடுத்தால், இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் ஒழியுமா? (தீவிரவாதத்தின் ஆணிவேர் எது?)

தீவிரவாத வெறிச்செயல்களை கண்டு, கேட்டு சோர்வு வந்துவிட்டது. பன்றிக் காய்ச்சல் போல அவ்வப்போது வந்து சிலரின் உயிரை குடித்து சில மாதங்களில் மறைந்துப்போகிறது இந்த தீவிரவாதம். சில மாதங்களுக்கு பிறகு  மறுபடியும் வந்து முகத்தை காட்டிச் செல்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கண்டு இதர மதங்களில் உள்ள சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். அதாவது பழிக்கு பழி என்ற தோரணையில்  ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

ஒரு பேருந்து விபத்து நேரிட்டு, அனேகர் மரித்தார்கள் என்று செய்தியில் காணும் போது, காயப்பட்டவர்கள் மீது பரிதாபம் வருகிறது, அந்த பேருந்தை ஓட்டியர் மீது கோபம் வருகிறது. ஆனால், திட்டமிட்டு மனிதர்களை கொல்லும் இந்த தீவிரவாதிகளை நினைக்கும் போது நெஞ்சுக்குள் ஒரு வகையான வலி பரவுகிறது. மனிதர்களிலும் இப்படி காட்டுமிராண்டிகள் இருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.

கடந்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி அன்று, ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பானது, தீவிரவாதிகளால் அவ்வப்போது தாக்கப்படுகின்ற இந்தியாவிற்கு கிடைத்த இன்னொரு தோல்வியாகும். தீவிரவாதத்தை ஒடுக்கிவிடுவோம், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று வாக்குறுதிகளை அளித்த தலைவர்கள் மறுபடியும் தோல்வி அடைந்தார்கள். பதினைந்துக்கும் அதிகமான அப்பாவிகள் உடல் சிதரி மரித்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றனர். இன்னும் இந்த தீவிரவாதத்திற்கு யார் காரணம் என்று முழுவதுமாக கண்டுபிடிக்கப்படவில்லை, அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தீவிரவாதிகள் என்றால் நிச்சயமாக இஸ்லாமிய தீவிரவாதிகளாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும், பெரும்பான்மையான தீவிரவாத செயல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மூலமாக நடந்தேறியிருக்கிறது என்ற உண்மையை அனேகரால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக, உலக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களை கணக்கெடுத்துக்கொண்டால், நிச்சயமாக அவர்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான்முதலிடம் பிடிப்பார்கள், இதில் எந்த சந்தேகமும் இருக்காது.  இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் சிலர் அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை ஒரு புறம் இருந்தாலும், சதவிகிதத்தை கணக்கெடுத்தால், இஸ்லாம் இந்த விஷயத்தில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகின்றது. எனவே, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பை இப்போது காணலாம்.

ஏன் முஸ்லிம்களில் ஒரு சிலர் இப்படி நடந்துக்கொள்கின்றனர்:

(இந்த கட்டுரையில் நான் குறிப்பிடும் இந்த முஸ்லிம் தீவிரவாதிகள், இலட்சத்தில் ஒருசிலர் இருப்பார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்பதை கவனிக்கவும். விஷ்வரூபம் படம் பற்றிய விஷயத்தில் ஒரு இஸ்லாமிய அறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசும் போது, ஒரு தீவிரவாதி எப்படி இருப்பான் என்று சிறு பிள்ளையிடம் கேட்கும் போது, அவன் தாடி வைத்திருப்பான், தொப்பி அணிந்து இருப்பான் என்றுச் சொல்லும் அளவிற்கு இந்த சினிமா எங்களைப் பற்றி தவறாக சித்தரிக்கிறது என்றுச் சொல்லி வேதனை அடைந்தார். ஆனால், இந்திய முஜாஹிதீன்கள் என்றுச் சொல்லி சில புகைப்படங்களை தொலைக்காட்சி செய்தியில் வெளியிட்டார்கள், அதில் ஒரு சிலர் தாடி வைத்துக்கொண்டும், தொப்பி அணிந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்பு தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு என்பவரும் ஒரு சில புகைப்படங்களில் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாகத் தான் காட்சியளித்தார். (பக்தியுள்ள முஸ்லிம் என்றால் பொதுவாக தாடி வைத்திருப்பார் தொப்பி அணிந்திருப்பார் என்று எல்லாரும் நம்புகிறோம், இதனை இஸ்லாமியர்கள் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.) விஸ்வரூபம் படத்தை நாம் தடை செய்யமுடியும், ஆனால், அனுதினமும் நம் வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் வெளியாகும் தீவிரவாதிகளில் படங்களை எப்படி தடை செய்யப்போகிறோம்?)

மனிதனாக பிறந்தவன் எப்படி இப்படி நடந்துக்கொள்ளமுடியும், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று சிந்திக்கும் போது கீழ்கண்ட விவரங்கள் மனதில் வந்துபோகின்றன, அவைகளை இப்போது பார்ப்போம். இந்த கட்டுரையை வாசிப்பவர் ஒரு வேளை முஸ்லிமாக இருந்தால், நான் இங்கு விவரிப்பது ஒரு சராசரி முஸ்லிமை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். வன்முறையில் ஈடுபட்டு, எப்படியாவது தான் சாதிக்க நினைப்பதை அடைய முற்படும் நபரைப் பற்றியே குறிப்பிடுகிறேன். ஒரு தீவிரவாதிக்கு இருக்கும் சில குண நலன்களை காண்போம்.

1) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, நாட்டுப்பற்று இருப்பதில்லை:

பொதுவாக தீவிரவாத செயல்களில், குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் நபர்களுக்கு தங்கள் நாடு மீது பற்று இருப்பதில்லை.  இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவனுக்கு நாட்டுப்பற்று இருக்கவாய்ப்பு இல்லை.  அதாவது அவன் பைபிளைப் படிக்கும் ஒரு கிறிஸ்தவனாகவும், கீதையை படிக்கும் ஒரு இந்துவாகவும் அல்லது முஹம்மதுவை நபியாக நம்பி, குர்-ஆனை பின்பற்றும் ஒரு முஸ்லிமாகவும் இருக்கலாம். அவன் யாராக இருந்தாலும் தன் சுய இலட்சியத்திற்காக (தவறான நோக்கத்திற்காக) அப்பாவி மனிதர்களை கொல்பவன் மனிதனே அல்ல, அவன் ஒரு மிருகம், இல்லை இல்லை, மிருகம் என்றுச் சொன்னால், தங்களை இப்படிப்பட்டனோடு ஒப்பிட்டதற்கு மிருகங்களுக்கு கோபம் வந்துவிடும், அவன் ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட கேவலமானவன் ஆவான்.  

ஒருவன் தன் நாட்டை நேசித்தால், எந்த காரணத்தைக் கொண்டும், அதற்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யமாட்டான்.

2) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, மனிதர்கள் மீது அன்பு இருப்பதில்லை

இப்படிப்பட்ட தீய செயல்களால், "தான் வணங்கும் இறைவன் மகிழுவான்" என்று இவன் நினைத்துக்கொள்கிறான். ஆனால், உண்மை இறைவன் இப்படிப்பட்டவன் முகத்தில் காறிதுப்பிவிடுவார். அப்பாவி மக்களை கொல்பவன் மனிதனே இல்லை. இவன் தன் சொந்த குடும்பத்தை மட்டும் நேசிக்கிறான், சக இந்தியனை நேசிப்பதில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், இப்படிப்பட்டவன் தன் குடும்ப நபர்களையும் நேசிப்பதில்லை, பெற்றோர்களையும் நேசிப்பதில்லை. தன்னுடைய இந்த தீவிரவாத செயலுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களை கொல்வது தான் இவனுடைய முதல் வேலையாக இருக்கும்.

சில இஸ்லாமிய திவிரவாதிகளிடம் பேட்டி எடுக்கும் போது அவர்கள் சொல்லும் விவரம் என்னவென்றால், தன்னை பெற்ற தாயே தனக்கு தடையாக இருந்தால், அவளையும் கொல்ல தயங்கமாட்டேன் என்பதாக இருக்கும்.

மூளைச் சலவை செய்யப்பட்ட இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை நேசிக்கமாட்டார்கள் என்ற நிலை இருக்கும், போது தன் சக குடிமகன் பற்றி இவனுக்கு என்ன கவலை?

ஆனால், இங்கு சிந்திக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரே மண்ணில் வளரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ வாலிபர்களில் அதிபடியான தீவிரவாதிகள் ஏன் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பது தான். இவர்களை தீவிரவாதிகளாக மாற்றுபவர்கள் யார்? இவர்களின்  "மனிதத்தன்மையை" அழித்து விடும் அந்த சக்தி தான் என்ன? வாசகர்களே இதைப் பற்றி சிந்தியுங்கள்.

3) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, தன் மதம் தான் முக்கியம், உண்மையும், நேர்மையும் ஒழுக்கமும் அல்ல:

"மதத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் கொடுமைகள் அதிக சேதத்தை விளைவிக்கும்" என்று எங்கேயோ படித்த ஞாபகம் எனக்கு வருகிறது.

மதம் பிடித்த யானைப் போல,  மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டால், அவனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். அதுபோல, இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மூளைகள் மத அறிஞர்களால் சலவை செய்யப்படுகின்றது. இவர்களுக்கு வேறு ஒன்றும் கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்கள் தங்களை சுதந்திரத்திற்காக போராடும் தியாகிகளோடு ஒப்பிட்டுக்கொண்டு தாங்களும் தியாகிகள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள் ஒருவகையான மனநோயாளிகள் ஆவார்கள். இவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதில்லை. இவர்களின் உள்ளத்தில் இருக்கும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் யாரோ சிலர் சிதைத்துவிடுகின்றனர். எங்கேயோ இருந்துக்கொண்டு ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யும் பொம்மைகள் போல தங்கள் மத தலைவர்கள் சொல்வதை கேட்டு இந்த தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். மத  தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு, வன்முறையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மனிதர்களே அல்ல.

4) இஸ்லாமியர்களில் இப்படிப்பட்ட சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு காரணம் காஷ்மீராக இருக்குமோ?

இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி கேள்வி எழுப்பும் போது அனேக இஸ்லாமியர்கள் அனேக பதில்களை அளிக்கிறார்கள், அதாவது:

அ) இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாதிகளாக மாறுவதற்கு, ஏழ்மை தான் காரணம்.

ஆ) இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாதிகளாக மாறுவதற்கு படிப்பறிவு இல்லாமை காரணம்.

இ) இந்தியா காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டால், இந்த தீவிரவாத தாக்குதல்கள் இருக்காது.

ஈ) சில இஸ்லாமிய அறிஞர்கள்  குர்-ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து, இஸ்லாமிய வாலிபர்களை வழிகெடுக்கிறார்கள்.

மேற்கண்டது போல, அனேகர் இந்த தீவிரவாதத்திற்கு பல காரணங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த காரணங்கள் தான் இந்திய மண் சிகப்பாக மாறுவதற்கு காரணிகளாக இருக்கின்றனவா?

காஷ்மீர் தான் இந்தியாவில் தீவிரவாத செயல்கள் நடப்பதற்கு காரணம் என்றால்? பாகிஸ்தானில் உள்நாட்டிலேயே அனேக தீவிரவாத செயல்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தேறுகிறதே அதற்கு எந்த காஷ்மீர் காரணியாக இருக்கிறது?

இதர இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை பொழிகிறார்களே, இதற்கு எந்த காஷ்மீர் காரணமாக இருக்கிறது?

நன்கு படித்தவனும், பணம் படைத்தவனும் இஸ்லாமிய தீவிரவாதியாக இருக்கிறானே இதற்கு ஏழ்மையும், படிப்பின்மையும் காரணம் என்று சொல்லமுடியுமா?

ஷியாக்களின் மசூதிகளில் சுன்னி இஸ்லாமியர்கள் குண்டு வைக்கிறார்கள், அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கும் போதே குண்டு வெடிக்கிறது! இதற்கு எந்த காஷ்மீர் காரணம்?

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாத செயல்கள் நடைப்பெற காஷ்மீர் ஒரு காரணமே ஒழிய, அது மட்டுமே 100 சதவிகித காரணமல்ல. காஷ்மீரை கொடுத்துவிட்டாலும் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதம் அரங்கேறிக் கொண்டேஇருக்கும்.

ஒருவேளை காஷ்மீர் தான் உண்மை காரணம் என்று சிலர் அடம்பிடித்தால், நேரடியாக இந்தியாவோடு போர் புரிந்து வெற்றி பெறவேண்டியது தானே!  காஷ்மீர் பாகிஸ்தானுக்குத் தான் சொந்தமாகவேண்டும் என்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நம்பினால், முதலாவது பாகிஸ்தானுக்கு நீங்கள் சென்றுவிடுங்கள், அதன் பிறகு பாகிஸ்தானின் இராணுவத்தில் சேர்ந்து, சண்டையிடுங்கள், இது தான் வீரம் எனப்படும், அதை விட்டுவிட்டு, இந்திய மண்ணில் தீவிரவாத கைவரிசையை காட்டினால், ஆபத்து உங்களுக்கு அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

தீவிரவாதத்திற்கு  ஏழ்மையும் படிப்பறிவின்மையும் காரணமல்ல. இஸ்லாமை விட்டு, இதர மார்க்கங்களை பார்க்கும் போது அவர்களின் மத்தியிலும் ஏழ்மை உண்டு, படிப்பறிவின்மை உண்டு, இதை காரணம் காட்டி யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இல்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால், ஏழ்மையும், படிப்பறிவின்மையும் சிலரை திருடர்களாக மாற்றுகிறது, ஏமாற்றுகாரர்களாக மாற்றுகிறது, ஆனால் தீவிரவாதிகளாக மாற்றுவதில்லை.

சதவிகிதத்தை பார்க்கும் போது, உலகிலே உள்ள எந்த ஒரு மார்க்கத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாமிலே தீவிரவாதிகள் உண்டு. எந்த ஒரு மதத்தின் பெயராலும் செய்யமுடியாத அளவிற்கு இஸ்லாமியர்களால் அனேக குண்டுவெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்கள் நடந்தேறியுள்ளது.  அப்படியானால், இஸ்லாமியர்களை ஆட்டிப்படைக்கும் அந்த தீய சக்தி என்ன? மற்ற மதங்களில் உள்ளவர்களைக் காட்டிலும், அதிக அளவில் இஸ்லாமில் மட்டும் தீவிரவாதம் இருப்பதற்கு காரணமென்ன? வாசகர்கள் சிந்திக்கட்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக, இஸ்லாமியர்களால உலக அளவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கையை தேதிவாரியாக தெரிந்துக்கொள்ள இந்த தொடுப்பை சொடுக்கி பாருங்கள்:

http://www.thereligionofpeace.com/   and http://www.thereligionofpeace.com/index.html#Attacks 

இந்திய அரசால் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களே அதிகம் இருக்கின்றன. அதாவது 35 தடை செய்யப்பட்ட இயக்கங்களில், 14 இயக்கங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாகும்.  இந்த பட்டியலில் இஸ்லாம் அல்லாத திவிரவாத குழுக்களும் இடம்பெற்று இருக்கிறார்கள், ஆனால் முதலிடம் வகிப்பது இஸ்லாமிய இயக்கங்களாகவே இருக்கிறது.

BANNED ORGANISATIONS
LIST OF ORGANISATIONS DECLARED AS TERRORIST ORGANISATIONS UNDER THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 196

1.           Al Badr 

2.           Al-Qaida

3.           Al-Umar-Mujahideen

4.           Deendar Anjuman

5.           Dukhtaran-e-Millat (DEM) 

6.           Harkat-ul-Mujahideen / Harkat-ul-Ansar / Harkat-ul-Jehad-e-Islami 

7.           Hizb-ul-Mujahideen / Hizb-ul-Mujahideen Pir Panjal Regiment]]

8.           Indian Mujahideen and all its formations and front organizations

9.           Jaish-e-Mohammad / Tahrik-e-Furqan 

10.        Jamiat-ul-Mujahideen

11.        Jammu and Kashmir Islamic Front

12.        Lashkar-e-Taiba/ Pasban-e-Ahle Hadis 

13.        Students Islamic Movement of India

14.        Organisations listed in the Schedule to the United Nationals Prevention and Suppression of Terrorism (Implementation of Security Council Resolutions) Order, 2007 made under section 2 of the United Nations (Security Council) Act, 1947 (43 of 1947)

மூலம்: http://www.mha.gov.in/uniquepage.asp?Id_Pk=292

5) இந்தியாவில் வாழும் சில நம்பிக்கை துரோகிகள்

இந்திய குடிமகன்களாக இருந்துக்கொண்டு, இந்தியாவிற்கே குழி வெட்டும் சிலர், தீவிரவாதிகளுக்கு உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வீடுகளில் இடம் கொடுத்து பாதுகாக்கிறார்கள். மேற்கண்ட பட்டியலில் இருக்கும்  தீவிரவாத குழுக்களுக்கு உதவி செய்ய இந்தியாவில் சிலர் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். அந்த தீவிரவாத சண்டாளர்கள்,  இந்த நம்பிக்கை துரோகிகளின் உதவியினால், நாச வேலையில் ஈடுபடுகிறார்கள். அப்பாவிகளின் உயிரை குடிக்கிறார்கள்.

இந்திய அரசாங்கம் முதலாவது இந்த நம்பிக்கை துரோகிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கவேண்டும். மும்பை தாக்குதலில் உயிரோடு சிக்கியவனை தூக்கில் போட்டது போல, இந்த நம்பிக்கை துரோகிகளுக்கும் ஒரு சரியான பாடத்தை புகட்ட வேண்டும். இந்திய மண்ணில் தீவிரவாதத்தை பரப்புபவனுக்கு பயமுண்டாகவேண்டும். இதனை இந்திய அரசாங்கம் சீக்கிரமாக செய்யவேண்டும்.

இதுவரை நாம் கண்டது இந்திய அரசாங்கம் தடை செய்த விவரங்கள் தான், ஆனால், உலக அளவில் எடுத்துக்கொண்டால், இஸ்லாமியரல்லாத நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. கணக்கெடுத்து பார்த்தால், ஏதோ ஒரு தவறான கோட்பாட்டினால், சிலர் தாக்கப்பட்டு அதற்கு அடிமைகளாக வாழ்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

முடிவுரை: காஷ்மீரை கொடுத்துவிட்டால் இந்தியாவில் தீவிரவாதம் ஒழியுமா? என்று கேள்வி கேட்டால், இல்லை என்பது தான் உண்மையான பதிலாக இருக்கமுடியும். இஸ்லாமிய தீவிரவாதிகள் செயல்பட அவர்களுக்கு காஷ்மீர் தேவையில்லை, இன்னொரு மனிதன் இருந்தாலே போதும்.

உலக அளவில் ஏன் இஸ்லாமில் மட்டும் அதிக தீவிரவாத செயல்கள் நடைப்பெறுகிறது, அதிகமான தீவிரவாத இயக்கங்கள் இருக்கிறது என்ற கேள்வி ஒருவருக்கு எழும்பினால் அது நியாயமான கேள்வியாகும். இதற்கான பதிலை தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட நூல்களை படிக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

1) இஸ்லாமிய புனித நூல் – குர்-ஆன் (http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/ )  and (http://www.tamilquran.in/w2.php)

2) இஸ்லாமிய ஸ்தாபவர் முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு

3) குர்-ஆனுக்கு அடுத்த இஸ்லாமிய அடிப்படை நூல்கள் (ஹதீஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய, முஹம்மதுவின் சொல்லும் செயலும்)  - http://www.tamililquran.com/bukhariindex.asp  and http://www.tamililquran.com/sahih-muslim.asp )

மூலம்: http://isakoran.blogspot.in/2013/03/blog-post.html

உமரின் இதர கட்டுரைகள்