இந்தியாவிற்கு தேவை மோடியின் ஜனநாயகமல்ல, இஸ்லாமின் நபிகள் நாயகம்

தம்பி: ஹலோ அண்ணா! எப்படி இருக்கீங்க?

உமர்: ஹாய் தம்பி, நான் பரவாயில்லை! நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: எனக்கு என்ன! இராஜா போல சௌதியில் இருக்கிறேன். என் பணத்தை எடுப்பதற்கு உங்களைப்போல நான் மணிக்கணக்கில் ஏடிஎம் கியூவில் நிற்கவேண்டிய அவசியமில்லை.

உமர்: ஏதோ பொடி வைத்து பேசுவதுபோல தெரியுது?

தம்பி: பொடி வைத்து பேசவேண்டிய அவசியமில்லை, நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். உங்க இந்திய பிரதமர், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்றுச் சொல்லி, உங்களையெல்லாம் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டார் இல்லையா!?!

உமர்: அது என்ன? ”உங்க பிரதமர்” என்றுச் சொல்கிறாய், ”நம்ம பிரதமர்” என்றுச் சொல். சௌதியில் வேலை செய்த மாத்திரத்தில், நீ இந்தியாவிற்கு அந்நியன் ஆகிவிடமாட்டாய். இங்கிருந்துச் சென்று சௌதியில் வேலை செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியன் தான், முதலில் இதை மனதில் வை.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் ஒரு திட்டத்தை போட்டது உண்மை தான், நடுத்தர மக்களாகிய நாங்கள் ஏடிஎம் கியூவில் நிற்பதும் உண்மை தான், இதற்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம் சொல்லு? நீ என்ன சொல்லவருகிறாய்? 

தம்பி: அடடே! நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை சீக்கிரமாகவே கண்டுபிடிச்சிட்டீங்களே! இஸ்லாம் பற்றி பிறகு பார்க்கலாம், முதலாவது இந்தியாவில் நடக்கும் நாடகம் பற்றி பார்ப்போம். மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையை நீங்க ஆதரிக்கிறீங்களா? அல்லது எதிர்க்கிறீங்களா?

உமர்: கருப்புப் பணப்பிரச்சனை நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. நவம்பர் மாத ஆரம்பத்தில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி திடீரென்று அறிவித்த போது, மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது. மக்களுக்கு சில நாட்கள் தொந்தரவுகள் இருக்கும் ஆனால், அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்பினேன். ஆனால், இன்னும் மக்கள் அவதிப்படுவதைப் பார்க்கும்போது, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல், நம் பிரதமர் பெரிய திட்டத்தில் கையை வைத்துவிட்டாரா? என்ற சந்தேகம் வருகிறது. மக்கள் இன்னும் அவதிக்குள்ளாக்கப்படாமல் சீக்கிரமாக இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டால் நன்றாக இருக்கும்.

தம்பி: மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டீர்கள். மோடிக்கு, அதாவது பிஜேபிக்கு உங்கள் ஆதரவு உண்டா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்?

உமர்: நான் ’பிஜேபி கட்சியின் மோடியை’ ஒரு கோணத்திலும், இந்த திட்டத்தை வெளியிட்ட ’இந்திய பிரதமர் மோடியை’ வேறு ஒரு கோணத்திலும் பார்க்கவிரும்புகிறேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பிரதமரின் இந்த ‘கருப்புப்பண ஒழிப்பு திட்டத்துக்கு என்னுடைய 100% ஆதரவு உண்டு’. அதே நேரத்தில் பிஜேபி கட்சியின் அங்கத்தினர் மோடிக்கு என்னுடைய ஆதரவு இல்லை, இதற்கு பல காரணங்கள் உண்டு, அதைப் பற்றி இப்போது பார்க்கவேண்டாம்.

எழுபது ஆண்டுகளாக தீர்க்கப்படாத வியாதியாக இருந்த இந்த கருப்புப்பணப் பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரதமர் திட்டம் தீட்டியது ஒரு சந்தோஷமான விஷயமாகும். ஒரு பக்கம் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை, இன்னொரு பக்கம் சரியாக திட்டமிடாமல் பிரதமர் களத்தில் இறங்கிவிட்டாரா என்ற கோபம். 

முடிவாக,  அரசியலை இந்த ‘கருப்புப்பண ஒழிப்பு திட்டத்தில்’ நுழைக்க நான் விரும்பவில்லை. 

தம்பி: ஒரு சின்ன பிரச்சனைக்காக இவ்வளவு அடாவடி நடவடிக்கை தேவையா? இந்த கருப்புப்பண பிரச்சனைக்கும், இன்னுமுள்ள இதர பிரச்சனைகளுக்கும் என்னிடம் ஒரு சரியான தீர்வு இருக்கிறது, சொல்லட்டுமா?

உமர்: அடப்பாவி, ஒரு பெரிய பிரச்சனையை தீர்க்கும் வழி என்னிடமுள்ளது என்று இவ்வளவு நிதானமாகச் சொல்கிறாயே!  இந்திய தலைவர்கள், அரசியல்வாதிகள்  மற்றும் மேதாவிகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து நாடு எப்போது விடுதலையாகும்? என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  உன்னிடம் உள்ள ஐடியாவை சீக்கிரம் சொல்லு.

தம்பி: இந்தியாவில் நாம் காணும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு, மோடியின் ஜனநாயகத்தில் கிடைக்காது, அது இஸ்லாமின் நபிகள் நாயகத்திடம் கிடைக்கும். இஸ்லாமிய ஆட்சி கருப்புப்பணமில்லாத ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி எல்லா மக்களுக்கும் நன்மை தரும் ஆட்சி. 

இஸ்லாமுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள், ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிவிடுவோம். 

உமர்: ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவை சுடுகாடாக மாற்றிவிடுவீர்களா?

தம்பி: விளையாடாதீங்க! நான் ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: நானும் சீரியஸாகத் தான் சொன்னேன் தம்பி. 

தம்பி: இஸ்லாமிய ஆட்சி நடந்தால், அந்த நாட்டில் கருப்புப்பண பிரச்சனை இருக்காது, நாடு முன்னேறும், அரசியல் தலைவர்கள் தப்பு செய்யமாட்டார்கள், நம் தலைவர்கள் செய்வது போல நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கமாட்டார்கள் கடைசியாக  மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.  இவைகள் தேவையென்றால், அங்கு இஸ்லாமிய ஆட்சி வரவேண்டும். 

உமர்: உன் கருத்துப்படி, இன்று இந்தியா சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் பிஜேபி அரசா? அல்லது யார் ஆட்சி செய்தாலும் இது தான் நிலையா?

தம்பி: பிஜேபி தான் இவைகளுக்கு காரணம் என்று நான் சொல்லவில்லை, யார் ஆட்சி செய்தாலும் இந்த பிரச்சனைகள் இருக்கும், அதாவது ஜனநாயக ஆட்சி புரியும் நாடுகளில் இந்த பிரச்சனைகள் கண்டிப்பாக இருக்கும்.

உமர்: அப்படியானால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்தால், அப்போது இவ்விதமான பிரச்சனைகள் இருக்காது என்பது உன் கருத்து, சரி தானே!

தம்பி: எஸ், சரியாகச் சொன்னீர்கள். 

உமர்: இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. உலகில் பல நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக இருக்கின்றன. உன்னுடைய கூற்று உண்மையானால், உலகில் இப்போது இருக்கும் இஸ்லாமிய நாடுகளில், எந்த நாட்டில் நம் இந்தியாவில் தற்போது நாம் காணும் பிரச்சனைகள் இல்லாமல் முன்னேறி இருக்கிறது என்றுச் சொல் பார்ப்போம்.

உனக்கு உதவியாக இருக்கும்படி சில நாடுகளின் பெயர்களைச் சொல்கிறேன்: பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாங்களாதேஷ், துபாய், மலேசியா என்று சொல்லிக்கொண்டு போகலாம்.

தம்பி: இப்போது உலகில் ‘முஸ்லிம் நாடுகள்’ என்று அறியப்பட்டு இருக்கும் நாடுகளில் ஒரு நாட்டையும் நாம் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி 100% நடக்கும் நாடு என்றுச் சொல்லமுடியாது.  எனவே, இந்த நாடுகளில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். 

உமர்: ஆச்சரியமாக இருக்கிறதே! 1400 ஆண்டுகள் ஆகியும், இஸ்லாமினால் ஒரு நாட்டையும் முழுவதுவாக ஆளமுடியவில்லையா?

இஸ்லாமிய ஷரியா சட்டம் இருக்கும் நாடுகள், பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகள் இருக்கும் போதும் ஒரு நாட்டில் கூடவா 100% இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை?

தம்பி: நீங்கள் சொன்ன மேற்கண்ட நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய சட்டத்தை மீறிய நாடுகள் தான், எனவே, அவைகளில் கண்டிப்பாக பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். 

உமர்: நீ எவ்வளவு பெரிய நயவஞ்சகன் என்பது இப்போது தான் புரிகின்றது?

தம்பி: ஏன் இப்படி என்னை நயவஞ்சகன் என்றுச் சொல்கிறீர்கள்?

உமர்: அதாவது இஸ்லாம் உருவாகி 1400 ஆண்டுகள் ஆகியும், உங்களால் ஒரு முழுமையான இஸ்லாமிய நாட்டை உருவாக்க முடியவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்கள் இருந்தாலும், அந்த நாடுகளில் 100% ஷரியாவை பின்பற்றமுடியவில்லை, இதனை நீயே ஒப்புக்கொண்டாய். இந்த இலட்சனத்தில், பெரும்பான்மை இந்துக்கள் இருக்கும் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடந்தால், எல்லா பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாய், உனக்கு வெட்கமாகத் தோன்றவில்லையா?

முதலில் நீ சொல்வது போல, முழுவதுமாக இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கின்ற மேலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் ஒரு இஸ்லாமிய நாட்டை நீ உதாரணமாக காட்டவேண்டும்.  அதன் பிறகு, அந்த நாட்டை உதாரணம் காட்டி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லலாம். அதை விட்டுவிட்டு, வாயில் கூழ் காய்ச்சுவது என்றுச் சொல்வார்களே அது போல நீ பேசிக்கொண்டு இருக்கிறாய். இதனால் தான் உன்னை நயவஞ்சகன் என்றுச் சொன்னேன்.

 • மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும் உலக நாடுகளின் பட்டியலில், இஸ்லாமிய நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதை கவனி. பட்டியலின் ஆரம்பத்தில் உள்ளனவா, அல்லது கடைசியில் உள்ளனவா என்பதை கவனி  - Quality of Life Index for Country 2016 Mid Year
 • உலகத்தில் சுற்றுலா செல்பவர்களுக்கு அறிவுரை கூறும்வகையில், உலகின் மிகவும் 10 ஆபத்தான நாடுகளில், 8 நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்று Frontpage Magazineல் உள்ள இந்த கட்டுரை சொல்கிறது - 8 OUT OF 10 MOST DANGEROUS COUNTRIES IN THE WORLD ARE MUSLIM
 • உலகத்தில் அதிகமாக வன்முறைகள் நடக்கும் 27 பட்டணங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பட்டணங்களாகும் - The world’s 27 most violent and worst cities are dominated by Islam
 • பிரான்ஸ் நாட்டில் 30-40 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழும் பட்டணம் மிகவும் ஆபத்தான பட்டணமாகும் - The French city of Marseille has an estimated 30 to 40 percent Muslim population and has been ranked as the most dangerous city in Europe.
 • உலகத்தின் 10 பாதுகாப்பான மற்றும் ஆபத்தான நாடுகள் - The ten safest and ten most dangerous countries in the world

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இஸ்லாமிய நாடுகளை வைத்துக்கொண்டு நீ, இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறாய்? ஜனநாயகம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

தம்பி: தற்கால நாடுகள் பற்றி பேசவேண்டாம், அவைகளில் நடக்கும் ஆட்சி குர்-ஆனின் படி, ஹதீஸ்களின் படி நடக்கும் ஆட்சி அல்ல. உண்மையான இஸ்லாமிய ஆட்சி இறைத்தூதர் முஹம்மது அவர்கள் நடத்திய ஆட்சியாகும், அவரது நான்கு கலிஃபாக்கள் நடத்திய ஆட்சி ஆகும். 

நபித்தோழர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலி அவர்களின் ஆட்சி தான் சிறந்த இஸ்லாமிய ஆட்சிகள் ஆகும். இவர்கள் ஆண்ட காலத்தை இஸ்லாமின் பொற்காலம் என்றுச் சொல்வார்கள்.  இவர்களின் ஆட்சி காலத்தில் கருப்புப்பணமில்லை, அரசியல் பிரச்சனைகள் இல்லை, மக்கள் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்கவில்லை. இவர்கள் ஒரு சிறந்த நேர்மையான ஆட்சி செய்தார்கள்.  இவர்களின் ஆட்சியை மனதில் வைத்து தான் நான் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: இவர்களின் ஆட்சி நேர்மையான ஆட்சி என்று நீ சொல்கிறாயா? 

தம்பி: ஆமாம், இதில் என்ன சந்தேகம். அரசியல் தலைவர்களென்றால் இவர்களைப்போல இருக்கவேண்டும்!

உமர்: உணமையாகவா!?! அப்படியானால், 

 1. உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான் அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்? 
 2. அவரைக் கொன்றவர்கள் யார்? 
 3. அவர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டாரா? அல்லது 
 4. முஸ்லிமல்லாதவர்களால் கொல்லப்பட்டாரா? 
 5. அவரின் கொலைக்கு முக்கியமான காரணம் என்ன? 

என்று சிறிது விளக்கமுடியுமா?

தம்பி: கலிஃபா உஸ்மான் அவர்கள் முஹம்மதுவின் மருமகன் ஆவார். அவர் ஒரு நல்ல ஆட்சியை, நேர்மையான ஆட்சியைச் செய்தார். அவர் மூலமாகத் தான் குர்-ஆன் அதிகாரபூர்வமான பிரதிகள் தொகுக்கப்பட்டது. அவர் மீது நீங்கள் குற்றம் சுமத்துவதை நான் கண்டிக்கின்றேன்.

உமர்: வாயை மூடு. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தை படி, உஸ்மான் எப்படி  ஆட்சி செய்தார? யாரால் ஏன் கொல்லப்பட்டார்? என்பதை படித்து புரிந்துக்கொள். 

முஹம்மதுவின் மருமகன் ஆகிவிட்ட காரணத்தினால் அவர் நேர்மையாக வாழ்ந்து இருந்திருப்பார், நல்ல ஆட்சி செய்து இருந்திருப்பார் என்று நீ கற்பனை செய்யாதே. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தை படி, அதன் பிறகு பேசு.

கலிஃபா உஸ்மான் எப்படி ஆட்சி செய்தார் என்பதை சுருக்கமாக இங்கு தருகிறேன்:

 • இன்றைய அரசியல் தலைவர்கள் போல தன் சொந்த பந்தங்களுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்து, இதர மக்களுக்கு பெரிய பதவிகளை கொடுக்காமல் ஏமாற்றியவர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான்.
 • தன் அதிகாரத்தை தன் ஜாதிமக்களுக்காக பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்த ஒரு ஆட்சியாளர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா உஸ்மான். 
 • இதனால் கொதித்து எழுந்த மக்கள் நியாயம் கேட்கும் போது, தன் தவறை உணராமல், ஆட்சியை அலிக்கு விட்டுக்கொடுக்காமல் இருந்த பதவி ஆசை பிடித்தவர் தான் உஸ்மான்.
 • முஹம்மதுவின் இன்னொரு மருமகனார் அலி அவர்கள், நியாயம் கேட்டு வந்த மக்களிடம் சமாதானம் செய்து, ‘இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது, நல்ல ஆட்சியை உஸ்மான் கொடுப்பார்’ என்றுச் சொல்லி, திருப்பி அனுப்பினார். 
 • ஆனால், திரும்பி போய்க்கொண்டு இருக்கும் மக்களை கொல்லும்படி, எகிப்து ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதி தன் அடிமையை அனுப்பி மாட்டிக்கொண்டவர் உஸ்மான். 
 • உஸ்மானின் அடிமை, உஸ்மானின் குதிரயில் உஸ்மானின் அரசாங்க முத்திரையோடு கடிதத்தை எடுத்துச்செல்வதை கண்ட அந்த மக்கள் மறுபடியும் மதினாவிற்கு வந்து, நியாயம் கேட்கும் போது, நான் அந்த கடிதத்தை எழுதவில்லை என்றுச் சொன்னவர் உஸ்மான். ஒருவேளை, உஸ்மான் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கவில்லையென்றாலும், ஒரு தலைவராக தன் ஆட்சியில் என்ன நடக்கிறது, தன் அதிகாரபூர்வமான முத்திரையை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டறியமுடியாத ஒரு நிர்வாக திறமையில்லாதவர் தான் உங்கள் மூன்றாம் கலிஃபா. 
 • உஸ்மான் கொல்லப்படப்போகிறார் என்பதை அறிந்த இதர தொழர்களாகிய அலியும் மற்றவர்களும், மதினாவிலிருந்து வெளியே சென்றுவிட்டார்கள். 40 நாட்கள் வீட்டுக்காவலில் வைத்து, கடைசியாக உஸ்மானை முஸ்லிம்களே கொன்றுவிட்டார்கள். இது தான் இஸ்லாமிய ஆட்சியின் நிலை. 
 • இஸ்லாம் உருவாக்கிய முதலாம் தலைமுறையின் தலைவர் இப்படிப்பட்டவர் என்றால், இஸ்லாம் இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு தலைவரை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பார் தம்பி.
 • முஹம்மதுவின் மகளை திருமணம் செய்துக்கொண்ட தலைவரால் இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சியை கொடுக்கமுடியுமென்றால், இந்த 21ம் நூற்றாண்டில் சொல்லவேண்டுமா

உன் கருத்துப்படி உஸ்மான் செய்தது தான் உண்மையான இஸ்லாமிய ஆட்சியென்றால், ‘உலகத்துக்கு அப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தேவையில்லை” தம்பி, முக்கியமாக இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆட்சி தேவையில்லை. கீழ்கண்ட கட்டுரையை படித்துப்பார், இஸ்லாமிய சரித்திரத்தின் படி, உஸ்மான் ஏன் கொல்லப்பட்டார்? அவர் எப்படிப்பட்டவர்? போன்றவைகள் புரியும்.

இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)

தம்பி: இதனை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

உமர்:  நீ ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரித்திரத்தை யாரும் மாற்றமுடியாது. முதலில் இஸ்லாமிய சரித்திரத்தைப் படி.  ஜனநாயக ஆட்சி பற்றி பேச உனக்கு தகுதியில்லை. முக்கியமாக இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேச உனக்கு அருகதை கிடையாது.  ஒரு கேவலமான ஆட்சியை செய்து, தன் சொந்த முஸ்லிம்களால் படுகேவலமாக கொல்லப்பட்ட உஸ்மானின் ஆட்சியை இந்திய ஜனநாயக ஆட்சியோடு ஒப்பிட உனக்கு எப்படி தைரியம் வந்தது?

தம்பி: இதனை நான் நம்பமாட்டேன்.

உமர்: ஆரம்பகால முஸ்லிம்கள் ஆட்சிக்காகவும் பணத்திற்காகவும் ஒருவரை ஒருவர்  வெட்டிக்கொண்டு செத்தார்கள். முக்கியமாக முதல் நான்கு கலிஃபாக்களின் ஆட்சியை படித்து தெரிந்துக்கொள். முஹம்மது மரித்த அதே நாள் நாற்காலிக்காக சண்டையிட்டவர்கள் தானே உங்கள் சஹாபாக்கள். தந்தை மரித்த அடுத்த நாளே சொத்துக்களுக்காக சண்டைபோட்டவர் தான் முஹம்மதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவர் அலியும் (நான்காவது கலிஃபா). இப்படிப்பட்ட அடிச்சுவடுகளை வைத்துக்கொண்டு, நீ ஜனநாயகம் பற்றி பேச வந்துவிட்டாய்.

இஸ்லாமினால் 14 நூற்றாண்டுகளால் ஒரு நல்ல அரசையும் கொடுக்கமுடியவில்லை.  இந்த இலடசத்தில் நீ இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக கேள்வி எழுப்புகிறாய்! இந்தியாவில் காணப்படும் பிரச்சனைகளுக்கு வழி காட்டுகிறேன் என்றுச் சொல்லி,  இந்தியாவை சுடுகாடாக்க பார்க்கிறாய். முதலாவது ஒரு நல்ல இஸ்லாமிய ஆட்சியை இஸ்லாமிய நாடுகள் நடத்திக்காட்டட்டும், மக்களின் பொருளாதார நிலை உயரட்டும், பெரும்பான்மை முஸ்லிம்கள் நல்ல நிலையில் வாழட்டும். இதனை பார்க்கும் மற்ற ஜனநாயக நாடுகள் தானாகவே, இஸ்லாமிய சட்டத்தை தங்கள் நாடுகளிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். 

ஆனால், இந்த 21ம் நூற்றாண்டில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் அளவிற்கு உலக நாடுகள் தரம் தாழ்ந்துவிடவில்லை.  இஸ்லாமிய நாடுகளில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் சுன்னி முஸ்லிம்கள் வெடிகுண்டு வீசுகிறார்கள், பெண்களின் நிலை சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளை உருவாக்கி உலகமனைத்துக்கும் அனுப்பும் நாடுகளாக இஸ்லாமிய நாடுகள் காணப்படுகின்றன. 

உலக செய்திகளை ஒவ்வொரு நாளும் படி, ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாமியர்களால் வன்முறை தீவிரவாதம் நடந்திருக்கும். இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியது. 

தம்பி, கடைசியாகச் சொல்கிறேன், உங்கள் முஹம்மது செய்த ஆட்சியும், கலிஃபாக்கள் செய்த ஆட்சியும் நேர்மையான ஆட்சிகள் அல்ல. இதனை இஸ்லாமிய சரித்திரம் நமக்கு எடுத்துக்காட்டும், நீ முஸ்லிமாக மாறு அப்போது நான் பாதுகாப்பு அளிப்பேன், இல்லையேல் என் வாளுக்கு பதில் சொல்லு என்பது தான் முஹம்மதுவின் அரசாங்க ஸ்லோகமாகும். இதையே, அபூ பக்கரும், உமரும், பின்பற்றினார்கள். 

இந்திய பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இஸ்லாமை உள்ளே நுழைக்கவேண்டாம். பிஜேபி கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ, வேறு  இதர கட்சிகளோ, இவைகளை நாங்கள் சமாளித்துக்கொள்வோம், இந்தியர்களுக்கு ஜனநாயகம் போதும். ஒரு கட்சியின் ஆட்சி சரியில்லையென்றால், அவரை தள்ளிவிட்டு, இன்னொருவரை நாங்கள் அமர்த்திக்கொள்வோம், அவரும் சரியில்லையென்றால், இன்னொருவரை நியமிப்போம்.  இஸ்லாமிய ஆட்சி  என்பது குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை தான், ஒவ்வொரு நாளும் முஸ்லிம் நாடுகளில் மக்கள் படும் அல்லல்களை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு இஸ்லாம் வேண்டாம் தம்பி, ஜனநாயகமே போதும்.

தம்பி: நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள்?

உமர்: நல்லவைகளை முஸ்லிம்களிடமிருந்து கேட்டு நடக்கவேண்டிய நிலையில், உலகில் யாரும் இல்லை, முக்கியமாக அந்த துர்பாக்கியமான நிலையில் இந்தியா நிச்சயமாக இல்லை என்பதை உனக்கு ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

ஆடு மழையில் நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டதாம். அது போல இருக்கிறது, உன் ‘இஸ்லாமிய ஆட்சி’ பற்றிய அறிவுரை.

தேதி: 3, டிசம்பர் 2016


உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்

உமரின் இதர தலைப்புகள்