2016 ரமளான் (11) – நிலமெல்லாம் இரத்தம் – யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே!?!

[நிலமெல்லாம் இரத்தம் – முந்தைய விமர்சன கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்]

மதிப்பிற்குரிய பாரா அவர்களுக்கு,

நீங்கள் நபிகள் பற்றி கூறிய கருத்துக்களுக்கு என் கேள்விகளை முந்தைய விமர்சனத்தில் முன்வைத்தேன். அதைத் தொடர்ந்து இஸ்லாம் மற்றும் நபிகள் குறித்த ஒரு முக்கியமான விவரத்தை இந்த கட்டுரையில் எழுதிவிட்டு, உங்களின் இதர வரிகளுக்கு நாம் செல்வோம்.

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்தில் நீங்கள் இஸ்லாம் பற்றி எழுதியவைகளை கூர்ந்து கவனித்தால், கிட்டத்தட்ட இஸ்லாம் சொல்வதை அப்படியே நீங்கள் அங்கீகரிப்பது போல காணப்படுகின்றது. எனவே தான், முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.  (இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது இந்த தற்கால சந்ததி மறைந்த பிறகு, ”பாரா அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார், அவருடைய நிலமெல்லாம் புத்தகத்தை படித்தால் அவர் முஸ்லிம் என்பது புரியும்” என்று முஸ்லிம்கள் சொன்னாலும் சொல்லக்கூடும்).  

யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுவோமா முஸ்லிம்களே!?!

யூதர்களுக்கு நாம் ஏன் ‘ஓ’ போடவேண்டும்? அதாவது ஏன் அவர்களை மெச்சிக்கொள்ளவேண்டும்? அப்படி என்ன உலக மகா காரியத்தை அவர்கள் செய்துவிட்டார்கள்? போன்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். அதற்கான பதிலைத் தான் இக்கட்டுரையில் எழுதப்போகிறேன். 

• பல நூறு ஆண்டுகள் சொந்த நாடு இல்லாமல் இருந்த யூதர்களுக்கு திடீரென்று நாடு கிடைத்ததே! அதற்காக ஓ போடவேண்டுமா? – இல்லை இதற்காக இல்லை.

• மத்திய கிழக்கு பகுதியில், பல இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியிலே ஒரு சுண்டக்கா போல இருந்துக்கொண்டு, எந்த ஒரு பயமுறுத்தலுக்கும் அடிபணியாமல் இருக்கிறார்களே! இதற்காக ஓ போடவேண்டுமா? - இல்லை இதற்காக இல்லை.

• உலகில் கொஞ்ச ஜனத்தொகையாக இருந்தாலும், பல நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்களே, பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து இருக்கிறார்களே! அதற்காக ஓ போடவேண்டுமா? - இல்லை இதற்காக இல்லை.

மேற்கண்ட காரணங்களுக்காக இல்லையென்றால், வேறு எதற்காக நாம் யூதர்களுக்கு 'ஓ' போடவேண்டும்?

உலகில் முதல் மனிதன் ஆதாம் உண்டானது முதற்கொண்டு, எந்த ஒரு இனமும், எந்த ஒரு நாட்டு மக்களும் செய்யாத ஒரு காரியத்தை யூதர்கள் மட்டுமே செய்துள்ளார்கள். இஸ்லாமை நம்புகிறவர்கள், அல்லாஹ்வை நம்புகிறவர்கள் மட்டுமே யூதர்களுக்கு ஓ போட வேண்டும், அதாவது அவர்களுடைய மேன்மையை உலகம் அனைத்திலும் பரப்பவேண்டும்.  ஏன் என்று அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே தரப்பட்ட சில பத்திகளை படியுங்கள். 

1) அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், இனங்களுக்கும், மொழிவாரியாக நபிகளை அனுப்பினான்

குர்-ஆனின் படி, உலகில் வந்த முதல் மனிதன் ஆதாம் முதற்கொண்டு அல்லாஹ் எல்லா நாடுகளுக்கும், எல்லா மொழி பேசும் மக்களை நல்வழிப்படுத்த பல ஆயிர நபிகளை அனுப்பியுள்ளான். அவன் நபிகளை அனுப்பாத சமுதாயமே இல்லை, எல்லா மக்களுக்கும் நல்வழிக்காட்ட அல்லாஹ்வின் இறைச்செய்தி அனுப்பப்படாத சமுதாயம் இல்லை (குர்-ஆன் 16:36, 40:78, 23:44, 28:59).

முஹம்மதுவின் காலத்துக்கு முன்பு வரை இப்படி அனுப்பிக்கொண்டே இருந்தான். கடைசியாக, கி.பி. 570-632 ஆண்டுகளில் முஹம்மது என்பவரை அனுப்பினான், இவர் தான் அல்லாஹ் அனுப்பிய கடைசி நபி என்று இஸ்லாம் சொல்கிறது.

உலகில் அல்லாஹ் அனுப்பிய அனைத்து நபிகளும் ‘அல்லாஹ்’ என்ற ஏக இறைவனை வணங்கும் படி போதித்தார்கள். ஒரே இன மக்களுக்கு பல நபிகளை ஒருவருக்கு பின்னாக இன்னொருவரை அனுப்பிக்கொண்டே இருந்தான்.  இந்த நபிகள் அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டவைகளைக் கொண்டு மக்களுக்கு போதித்தார்கள், நேர்வழி காட்டினார்கள். சில சமுதாய மக்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அல்லாஹ் சோர்ந்துப்போகவில்லை, முஹம்மதுவின் காலம் வரை (கி.பி. 570-632), சரமாரியாக அனுப்பிக்கொண்டே இருந்தான். அப்படியானால் எத்தனை நபிகளை அனுப்பியிருக்கவேண்டும் கற்பனை செய்துப்பாருங்கள்? கடைசியாக முஹம்மதுவை அனுப்பி, இவர் தான் கடைசி நபி, இனி நான் எந்த ஒரு நபியையும் அனுப்பப்போவதில்லை என்று அடித்துச் சொல்லிவிட்டான். இதுதான் இஸ்லாம் சொல்லும் நபிகள் பற்றிய இறையியல்.

குர்-ஆனில் 25 நபிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது. மேலும், சில இஸ்லாமியர்களின் கணக்குப்படி 1,24,000 நபிகள் மற்றும் இறைத்தூதர்களை அல்லாஹ் உலகில் அனுப்பியுள்ளான். சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த எண்ணிக்கை தவறு என்றுச் சொல்கிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலம் வரைக்கும் நபிகளை/இறைத்தூதர்களை தொடர்ந்து உலகம் முழுவதும் அல்லாஹ் அனுப்பியது மட்டும் உண்மை என்று எல்லா முஸ்லிம்களும் நம்புகிறார்கள்.  இது பாயிண்ட் 1 (A). இதனை மனதில் வைக்கவும்.

2) இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் அல்லாஹ் அனுப்பிய நபிகள்

இஸ்லாமின் மேற்கண்ட இறையியலின் படி பார்த்தால், இந்தியாவிற்கும் (ஆரம்பத்தில் இந்தியா பல சிறு நாடுகளாக பிரிந்திருந்தது) அல்லாஹ் நபிகளை அனுப்பியிருந்திருக்கின்றான், வேதங்களையும், இறைச்செய்திகளையும்  கொடுத்திருந்திருக்கின்றான்.

குறிப்பிட்டுச் சொல்வதானால், தமிழ் பேசும் தமிழர்களுக்கும், அல்லாஹ் இறைத்தூதர்களை அனுப்பியிருந்திருக்கின்றான். 

நம் தமிழ் மொழிப் பற்றிச் சொல்லும் போது, “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” என்றுச் சொல்லுவோம். அப்படியானால்,  முஹம்மதுவின் காலம் வரைக்கும் பல நூறு தூதர்களை அல்லாஹ் தமிழர்களுக்காகவே அனுப்பியிருக்கிறான். 

இந்த விவரத்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

 1. Which prophets were sent to India? Is Ram, Krishna prophets? Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள்? ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் & ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.  
 2. The Honorable Lord Krishna: A Prophet Of Allah - கிருஷ்ணா - அல்லாஹ்வின் நபி
 3. Lost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)  
 4. Wikipedia discussion page (Prophets in Islam)
 5. Indian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)
 6. Prophet foretold in Indian Scriptures (இந்திய வேதங்களில் முஹம்மது)

கிபி 7ம் நூற்றாண்டு வரை உலகில் இருந்த எல்லா நாடுகளுக்கும், இன மக்களுக்கும், காட்டுவாசிகள் வாழ்ந்த இடங்களுக்கும், பல மொழிகளை பேசும் மக்களிடத்திற்கும், அல்லாஹ் தொடர்ச்சியாக நபிகளை, இறைச்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தான். இது பாயிண்ட் 2 (B), இதனையும் மனதில் பதித்துக்கொள்ளவும். 

3) பழைய நாடுகளின் எண்ணிக்கை

நான் மேற்கொண்டு சொல்லப்போகும் விவரங்களை புரிந்துக்கொள்வதற்கு, பண்டைய காலத்தில் தோராயமாக எத்தனை பெரிய நாடுகள், சிறிய நாடுகள், மாநிலங்கள் போன்ற அமைப்புக்கள்  இருந்தன என்ற கணக்கை அறிந்துக்கொள்வது நல்லது. இந்த எண்ணிக்கை தற்காலத்தில் செய்த அகழ்வாராய்ச்சி, மற்றும் இதர தொல்பொருள் ஆய்வுகளின்படி ஆகும். இன்னும் ஆய்வுகளில் அகப்படாத மக்கள் கூட்டம் பல இருந்திருக்கும். 

பெரிய நாடுகள் என்று கருதப்படும் நாடுகள் இவை என்று விக்கிபீடியா சொல்கிறது, மேலும் இந்நாடுகள் இருந்த காலக்கட்டமும் சொல்லப்பட்டுள்ளது.

 • மெசபடோமியா – கி.மு. 3700
 • எகிப்து – கி.மு. 3300 
 • இந்து சமவெளி – கி.மு. 2500 
 • இந்தியா – கி.மு. 1700
 • சைனா – கி.மு. 1600 

(The earliest known primary states appeared in Mesopatamia ca. 3700 B.C., in Egypt ca. 3300 B.C., in the Indus Valley ca. 2500 B.C., India ca 1700 B. C.,and in China ca. 1600 B.C. - https://en.wikipedia.org/wiki/List_of_sovereign_states_in_the_7th_century_BC

விக்கிபீடியாவின் படி, கி.மு. 7ம் நூற்றாண்டில் இருந்ததாக அறியப்பட்ட நாடுகளின் பெயர்கள் மற்றும் அவைகளின் காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலை இங்கு மறுபதிவு செய்யாமல், இடத்தை மிச்சப்படுத்த விரும்புகிறேன். எனவே, இந்த தொடுப்பை சொடுக்கி, ஒவ்வொரு கண்டத்திலும் எத்தனை நாடுகள் இருந்தன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.  இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்ட அக்கால நாடுகள் (States) 140ஐ தாண்டுகின்றது. 

இவைகள் போக, கீழ்கண்ட காலங்களிலும்(Bronze Age, Iron Age etc..) இருந்த நாடுகள் பற்றிய கணக்கெடுப்பு கீழே உள்ள தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளை சொடுக்கி நாடுகளை எண்ணிக்கொள்ளுங்கள். 

ஆக, நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஆயிரக்கணக்கான நபிகள் மூலமாக, இறைவேதங்களை (அ) இறைச்செய்திகளை அல்லாஹ் அனுப்பிக்கொண்டே இருந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பிரேக் போட்டார், கடைசி நபியை (முஹம்மதுவை) அனுப்பினார், கடைசி வேதத்தை (குர்-ஆனை) அனுப்பினார். 

இதுதாங்க, நம்முடைய இக்கட்டுரையின் கருப்பொருளை தெளிவாக புரிந்துக்கொள்வதற்கான அறிமுக விவரங்கள். 

இந்த விவரங்களுக்கும், யூதர்களுக்கு ஓ போடுவதற்கு என்னடா சம்மந்தம் என்று கேட்கத்தோன்றுகிறதா? . . .இதோ வந்துட்டேனுங்கோ….

4) மூன்று வேதங்கள், 25 நபிகள் பற்றி மட்டுமே குர்-ஆன் சொல்கிறது ஏன்?

குர்-ஆன் முந்தைய வேதங்கள் என்றுச் சொல்லி மூன்றே வேதங்களை குறிப்பிடுகின்றது.  அவைகள் தோரா, ஸபூர், மற்றும் இஞ்ஜில் ஆகும். ஆபிரகாமின் சுருள்கள் என்றும் ஒரு வேதத்தைச் சொல்கிறது, ஆனால், அதன் பெயர் குறிப்பிடவில்லை. மோசேயின் சுருள்கள் என்றுச் சொல்வதை நாம் தோரா என்றும் கருதலாம்.  

மேலும் 25 நபிகளின் பெயர்களை குறிப்பிடுகின்றது.  இந்த 25 பேர்களில் 20-21 நபர்கள் பைபிளில் காணப்படுபவர்கள் (பழைய/புதிய ஏற்பாட்டில்). மீதமுள்ள நான்கு-ஐந்து நபிகள், அரேபியாவின் வடக்கு பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்டவர்கள் என்று குர்-ஆன் சொல்கிறது (ஆது, தமுத், மீதியான் பகுதிகள்). முஹம்மது ஒட்டு மொத்த மனுக்குலத்துக்கும், ஜின்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது, பார்க்க - https://en.wikipedia.org/wiki/Prophets_and_messengers_in_Islam

5) ஏன் யூதர்களுக்கு ஒரு பெரிய ’ஓ’ போடவேண்டும்?

நன்றாக கூர்ந்து கவனியுங்கள் (சாரி படியுங்கள்), நாம் கிளைமாக்ஸில் இருக்கிறோம். 

இதுவரை கண்ட விவரங்களின் படி, பல நூறு நாடுகள், பல ஆயிர நபிகள், பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கிறான். இந்தியாவில் பேசப்பட்ட ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் தனித்தனி நபிகள், வேதங்கள் அல்லது இறைச்செய்திகள் கொடுக்கப்பட்டது. 

இப்படி, உலகம் அனைத்தும் பலப்பல வேதங்களை அல்லாஹ் அனுப்பியிருக்கும்போது, எல்லா மக்களும் தங்களுக்காக அல்லாஹ் அனுப்பிய வேதங்களை பாதுகாக்கவில்லை.  பல ஆயிர நபிகளை அல்லாஹ் அனுப்பி என்ன பயன்? பல வேதங்களை அனுப்பி என்ன பயன்? அந்த நபிகளும் தங்கள் வேதங்களை பாதுகாக்க வில்லை, அந்த மக்களும் அல்லாஹ் இறக்கிய செய்தியை தூயவடிவில் பாதுகாக்க வில்லை. என்ன கஷ்டகாலம் பாருங்கள். 

தமிழர்களாவது அல்லாஹ்வின் வார்த்தையை பாதுகாத்தார்களா?

திருக்குறள்:

கி.மு. 200 – 500 நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய நூலை பத்திரமாக பாதுகாத்த தமிழர்கள், அல்லாஹ்வின் இறைச்செய்தியை மட்டும் பாதுகாக்கவில்லை ஏன்? 

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. 

அடப்பாவமே, கி.மு. காலத்தில் 473 புலவர்கள் எழுதிய பாடல்களை, பல தெய்வ வழிப்பாட்டு நூல்களை பாதுகாத்த தமிழர்கள், ஏக இறைவன், உண்மை தெய்வம் அல்லாஹ் இறக்கிய ஒரு வேதத்தை பாதுகாக்கவில்லையே! இவர்களை என்னவென்றுச் சொல்வது?

ஆக, தமிழர்கள் அல்லாஹ்வின் இறைச்செய்தியை பாதுகாக்கவே இல்லை (இஸ்லாமின் படி). பல நபிகளை அல்லாஹ் அனுப்பியும் பயனில்லை, எத்தனை இறைச்செய்திகளை இறக்கியும் பயனில்லை, எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயம் போல காணாமல் போய்விட்டது. 

சமஸ்கிருத வேதங்கள்:

ரிக் வேதம்: இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. 

யசுர் வேதம்: இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.

சாம வேதம்: இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது

அதர்வண வேதம்: இது கி.மு. 1200  - கி.மு. 1000 வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்டு இருகலாம்.

சமஸ்கிருத வேதங்களை கி.மு. காலத்திலிருந்தே பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை மட்டும் பாதுகாக்கவில்லையே!.

இதர நாடுகளில் உள்ளவர்களாவது பாதுகாத்தார்களா? சைனா, ஆப்ரிக்கா, எகிப்து என்று பல நாடுகளுக்கு அல்லாஹ் நபிகளை/செய்திகளை அனுப்பியிருந்தும்,  ஒரு பயனுமில்லை. அல்லாஹ்விற்கு துக்கம் தாங்க முடியவில்லை.  இவர்களுக்கு நபிகளை அனுப்பி என்ன பிரயோஜனம் என்று நொந்துக்கொண்டு இருந்தபோது, ஒரு இனம் மட்டும் உலகத்தில் எந்த இனமும், மக்களும், செய்யாத ஒன்றை செய்தது. அந்த ”கல்தோன்றி மண் தோன்றா காலத்தே” என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே,  நாமும் செய்யாத ஒன்றை ஒரு இனம் செய்தது. 

அது எந்த இனம்? அது தான் யூத இனம்.

இந்த யூத இனம் மட்டுமே, தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை கி.மு. 1500 லிருந்து பாதுகாத்துக்கொண்டு வந்து, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மதுவின் கையில் கொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் இந்த யூத இனம் தங்கள் வேதத்தை பாதுகாத்து வந்து, முஹம்மதுவிடம் கொடுத்தது. இந்த யூதர்களைப் போலவே  கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை (இஞ்ஜிலை) பாதுகாத்துக்கொண்டு வந்து முஹம்மதுவின் கையில் கொடுத்தார்கள். ஓ.. இந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களும் யூத இரத்தமாக இருந்தபடியினால், தங்கள் வேதத்தை காத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

பல ஆயிர நபிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி என்ன பயன்? பல வேதங்களை இறக்கி என்ன பயன்? இந்த யூதர்கள் மட்டும் தான் வேதங்களை பாதுகாத்தார்கள். இதனால் தான் குர்-ஆனில் அல்லாஹ் தோரா (மோசே), ஸபூர் (தாவீது) மற்றும் இஞ்ஜில் (இயேசு) பற்றி மட்டுமே பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவைகளில் ஒளியும் நேர்வழியும் இருக்கிறது என்கிறார் (இருந்தது என்றல்ல). (பார்க்க: WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE)

ஆபிரகாமுக்கு இறக்கிய சுருள் என்னவானது? ஆபிரகாமும், அவரது பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளும் எதற்கும் லாயக்கில்லை. தங்கள் தகப்பனுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை தொலைத்துவிட்டார்கள். ஆனால், அதே ஆபிரகாமின் கொள்ளு, கொள்ளு, கொள்ளுப் பேரன்கள், அதாவது யாக்கோபுக்கு பிறந்த 12 சிங்கக்குட்டிகள், எகிப்தில் அடிமைகளாக இருந்தாலும், அவர்களை விடுவிக்க வந்த மோசேக்கு அல்லாஹ் இறக்கிய வேதத்தை கச்சிதமாக பாதுகாத்தார்கள். அதன் பிறகு தாவீதுக்கு அல்லாஹ் கொடுத்த ஸபூரையும் அதே யூதர்கள் பாதுகாத்தார்கள். அதே யூத ரத்தத்தில் வந்த இயேசுவிற்கு கொடுத்த இன்ஜிலையும் பாதுகாத்தார்கள் யூதர்கள். இயேசுவின் சீடர்களும் யூத இரத்தம் தானே.

எல்லோரும் யூதர்களுக்கு ஒரு பெரிய ‘ஓ’ போடுங்கள் பார்க்கலாம். போடமாட்டீர்களா? அப்படியானால், மேலே சொன்ன விவரங்கள் உங்களுக்கு புரியவில்லையென்று அர்த்தம், இன்னொரு முறை படித்துப் பாருங்கள், நிச்சயமாக நீங்க யூதர்களுக்கு ஓ போடுவீங்க. பாரா அவர்களே, உங்களுக்கு புரிந்து இருந்திருக்கவேண்டுமே!

அ) யூத நபிகளை தவிர்த்து, அரேபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த நபிகளைத் தவிர்த்து வேறு ஒரு நபியின் பெயரையும், வேதத்தையும் ஏன் குர்-ஆன் குறிப்பிடவில்லை?

ஆ) யூதர்கள் தவிர வேறு ஒருவரும் ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை? 

இ) தமிழர்கள் சங்க கால இலக்கியங்கள் மற்றும் இதர இலக்கியங்கள் பலவற்றை பத்திரமாக பாதுகாத்தார்கள். ஆனால் தங்களுக்கு அல்லாஹ் கொடுத்த வேதத்தை ஏன் பாதுகாக்கவில்லை?

ஈ) சமஸ்கிருத மொழியில் இருக்கும் நான்கு வேதங்களையும், இதர புராணங்களையும் பத்திரமாக பாதுகாத்தவர்கள், அல்லாஹ்வின் வேதத்தை பாதுக்காக்கவில்லை ஏன்?

உ) இந்தியர்களை விடுங்கள், இதர நாட்டு மக்கள் பல நூல்களை பாதுகாத்தார்கள், ஏன் அல்லாஹ்வின் வேதத்தை பாதுகாக்கவில்லை.

ஊ) உலகமே கோட்டை விட்டபோது, யூதர்கள் மட்டும் எப்படி தோரா, ஸபூர், இன்ஜிலை  பாதுகாத்தார்கள்? இந்த மூன்றை மட்டுமே குர்-ஆன் பெயர் சொல்லி குறிப்பிடுவதிலிருந்து நமக்கு என்ன புரிகின்றது? 

முடிவுரை:

குர்-ஆன் சொல்வது உண்மையானால், உலக மக்கள் அனைவரும் கோட்டை விட்டதை யூதர்கள் பிடித்துக்கொண்டார்கள், அதாவது குர்-ஆனின் படி, முந்தைய வேதங்களை பாதுகாத்தார்கள். ஆக, முஸ்லிம்கள் அனைவரும்  யூதர்களுக்கு ஒரு பெரிய ’ஓ’ போடத்தான் வேண்டும். அல்லாஹ்வின் ஆசையை நிறைவேற்றியவர்கள் யூதர்கள் தான்.

இக்கட்டுரையைப் பற்றி யாராவது கருத்து தெரிவித்தால், கேள்விகள் கேட்டால், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.

யூதர்களின் இந்த சாதனையை பாராட்டி, பாரா அவர்களும், முஸ்லிம்களும் அவர்களை மெச்சிகொண்டே ஆகவேண்டும்.  இதனை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையென்றால், இதன் அர்த்தமென்ன? குர்-ஆன் சொல்லும் உலகளாவிய நபிகளை அனுப்பியது, எல்லாம் பொய்யும் பித்தலாட்டம் ஆகும் என்று அர்த்தம். 

பின் இணைப்பு:

1) ஒருவேளை “யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் அல்லவா?” என்று முஸ்லிம்கள் கேட்கலாம். 

ஆனால், இதற்கு முஸ்லிம்களிடம் ஆதாரமில்லை. குர்-ஆனில் ஒரே ஒரு வசனத்தை, அதாவது “தோராவையும், ஸபூரையும், இன்ஜிலையும் யூத கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டார்கள், ஓ முஹம்மதுவே, இனி அவைகளை பின்பற்றாதீர்கள்” என்று பெயர்கள் குறிப்பிட்டுச் சொல்வதை காட்டுங்கள். அது உங்களால் முடியாது. ஆனால், அதே குர்-ஆனில், இந்த மூன்று வேதங்களை புகழ்ந்துத் தள்ளிய வசனங்களை நான் காட்டமுடியும், இந்த தமிழ் கட்டுரையை பார்க்கவும்: பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்.

2) உலகில் அல்லாஹ் அனுப்பிய எல்லா வேதங்களின் பெயர்களையும் அல்லாஹ் குர்-ஆனில் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமில்லை.

உண்மை தான், ஆனால், தன்னுடைய கடைசி வேதமாகிய குர்-ஆனில் ஏன் வெறும் யூதர்களின் வேதங்களை மட்டுமே குறிப்பிடவேண்டும். உலகத்துக்கே குர்-ஆன் வழிகாட்டியென்றால், குறைந்த பட்சம் இந்தியாவிற்காக அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவரின் பெயர், ஒரு வேதத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்? இதே போல, இதர நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிகளில் குறைந்தபட்சம் ஒருவரையாவது குறிப்பிட்டு இருந்திருக்கலாம்.  எப்போது பார்த்தாலும், ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்மாயீல், யாக்கோபு, மோசே, தாவீது, இயேசு என்று பாடிய பல்லவியையே ஏன் பல முறை பாடவேண்டும். இந்தியாவிற்கு அனுப்பிய ராமசாமி, கோவிந்தசாமி, அரவிந்தசாமி (நடிகரை குறிப்பிடவில்லை), என்று சிலருடைய பெயரையாவது சொல்லியிருக்கவேண்டாமா? சைனா போன்ற நாடுகளுக்கு அனுப்பிய பெயர்களில் சில ”சிங்சாங், கிளிங் கிளாங்” என்ற நபிகள் பற்றி எழுதியிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது? 

இதிலிருந்து எவைகளை அறிகிறோம், முஹம்மதுவிற்கு அல்லது குர்-ஆனின் ஆசிரியருக்கு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றி மட்டுமே தெரிந்துள்ளது, மேலும் கிபி ஏழாம் நூற்றாண்டில் வாழும் ஒரு நபருக்கு, பல இடங்களுக்குச் சென்று வியாபாரம் புரியும் வியாபாரிகள் போன்றவர்களுக்கு பொது அறிவு எவ்வளவு இருக்குமோ, அது மட்டுமே குர்-ஆனில் நாம் பார்க்கமுடியும். மேலும் ஆய்வு செய்யாத பொதுஅறிவு என்று எடுத்துக்கொண்டால், பல சரித்திர தவறுகள், விஞ்ஞான தவறுகள் அதில்  உள்ளடக்கிவிடுவது சகஜமே. இதைத் தான் நாம் குர்-ஆனில் பார்க்கமுடியும். 

ஆக, குர்-ஆன் ஆக்கியோன் ஒரு மனிதன் என்று நினைக்கவேண்டும், அல்லது யூதர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் (நபிகளை, வேதங்களை காத்த விஷத்தில்) என்று முஸ்லிம்கள் அங்கீகரிக்கவேண்டும். பாரா அவர்களே, இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், தயவு செய்து என்னிடம் கேளுங்கள், நாம் எழுத்துவிவாதம் செய்வோம்.

3) இந்த கட்டுரையில் முக்கியமாக நீங்கள் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்துள்ளீர்கள், இது கண்டிக்கப்படத்தக்கது

முதலாவதாக, நான் இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுக்கவில்லை. இஸ்லாமின் உலகளாவிய இறையியல் உண்மை என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் இக்கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகள் எழும். எத்தனை இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் இருப்பதுதெரியும்? சங்க இலக்கியங்களை எழுதிய புலவர்களின் எண்ணிக்கைத் தெரியும்? எந்த காலக்கட்டத்தில் அவைகள் எழுதப்பட்டது என்ற விவரம் தெரியும். ஆனால், அவைகளை இக்கட்டுரையில் சுருக்கமாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். இந்துக்கள் முதலாவது அவர்களின் வேதங்கள் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும், அவைகளை படிக்கவேண்டும், ஆய்வு செய்யவேண்டும். அதன் பிறகு அவைகளின் அருமை பெருமைகளை இதர மக்களுக்குச் சொல்லமுடியும்.  இப்படியெல்லாம் செய்யாமல் வெறுமனே, இந்துக்களின் வேதங்களை வம்புக்கு இழுத்தீர்களென்றுச் சொன்னால் யாருக்கு என்ன பயன்?

இரண்டாவதாக, பாரா போன்றவர்கள் இதர மக்களின் வேதங்களிலிருந்து விவரங்களை எடுத்து, அவைகளை மாற்றி எழுதுவதினால், அவருக்கு பதில் கொடுக்கவேண்டியது எங்கள் கடமையாகும். இப்படிப்பட்ட பதில் சொல்லப்படும் போது, இதர மக்களின் வேதங்களையும் தொடவேண்டிய அவசியம் உண்டாகும். நான் சொன்னதில் தவறு இருந்தால், இந்துக்கள் தங்கள் பதில்களைத் தரலாம். கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. 

4) இஸ்லாமிய இறையியல் ”உலகளாவிய நபி அனுப்பப்படுதல்” என்பதை ஏற்கிறது, இதனால், உலகில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் நேர்வழிப்படுத்த அல்லாஹ் வழி காட்டினான் என்று அறியமுடிகின்றது. ஆனால், யூத கிறிஸ்தவ கோட்பாட்டில் உலகளாவிய நபி அனுப்பப்படுதல் இல்லையே, அப்படியானால் உலக மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டவேண்டும் என்று ஏன் பைபிளின் இறைவன் (யெகோவா தேவன்) விரும்பவில்லை? இது சரியானதா? இயேசுவிற்கு முன்பு பல நாடுகளில் வாழ்ந்தவர்கள் பைபிளின் தேவனை அறியவில்லையே, அவர்களின் நிலை என்ன? இன்றும் பல கோடி பேர் இயேசு என்ற பெயரையும் அறியவில்லையே அவர்களின் நிலை என்ன?

இதற்கு தனியாக ஒரு கட்டுரையை எழுதுவேன். இக்கேள்விகு பதில் வேண்டுமென்று ஒரு முஸ்லிமாவது என்னிடம் கேட்டுக்கொண்டால் நான் எழுதுவேன். 

இந்த கட்டுரைக்கு, பின்னூட்டமிடவேண்டும் என்பவர்கள், ஈஸா குர்-ஆன் பிளாக்கரில் பின்னுட்டமிடலாம், அல்லது ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில், ”தொடர்பு கொள்க” என்ற மெனுவை க்ளிக் செய்து பின்னூட்டமிடலாம். நான் பதில் எழுதுவேன்.

இக்கட்டுரையில் பயன்படுத்திய தொடுப்புக்கள்

[1] List of sovereign states in the 7th century BC 

[2] Which prophets were sent to India? Is Ram, Krishna prophets? Dr Zakir Naik (இந்தியாவிற்கு எத்தனை நபிகள் அனுப்பப்பட்டார்கள்? ராமாவும் கிருஷ்ணாவும் நபிகளா? டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அளித்த பதில் (ஆங்கிலம்) - யூடியுப் & ஃபேஸ்புக் தொடுப்புக்கள்.  

[3] The Honorable Lord Krishna: A Prophet Of Allah - கிருஷ்ணா - அல்லாஹ்வின் நபி

[4] Lost Prophets of India and Hinduism (தொலைந்துவிட்ட இந்திய மற்றும் இந்துயிஸத்தின் நபிகள்)  

[5] Wikipedia discussion page (Prophets in Islam)

[6] Indian Muslim cleric calls Hindu deity Shiva the first prophet of Allah (சிவன் அல்லாஹ் இந்தியாவிற்கு அனுப்பிய முதல் நபியாவார், ஒரு முஸ்லிம் அறிஞரின் ஒப்புதல்)

[7] Prophet foretold in Indian Scriptures (இந்திய வேதங்களில் முஹம்மது)

[8] List of Bronze Age states (3300 - 1200 கி.மு)

[9] List of Iron Age states (1200 கி.மு. -  600 கி.மு.)

[10] List of Classical Age states (600 கி.மு. -  200 கி.பி)

[11] List of states during Antiquity (200 கி.பி -  700 கி.பி)

[12] Prophets and Messengers in Islam

[13] திருக்குறள் - விக்கிபீடியா

[14] சங்க இலக்கியம் - விக்கிபீடியா

[15]  சமஸ்கிருத வேதங்கள் - விக்கிபீடியா

[16] WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE

[17] பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்


2016 ரமளான் - நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு பதில்கள்

உமரின் இதர ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்