வண்ணத் திருக்குர்ஆன் - அல் ஃபாத்தியா - Chapter 1
வண்ணத் திருக்குர்ஆன்
அத்தியாயம் 1: அல் பாத்தியா | ||
1:1 | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) |
|
1:2 | அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். |
|
1:3 | (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். |
|
1:4 | (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி (யும் ஆவான்). |
|
1:5 | (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். |
|
1:6 | நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! |
|
இவைகள் மனித வார்த்தைகளா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தைகளா?
இந்த முதல் அத்தியாயத்தில் வரும் வசனங்கள், இறைவனிடம் மனிதர்கள் வேண்டும் வகையில் உள்ளன.
முக்கியமாக, கடைசி இரண்டு வசனங்கள் 5 மற்றும் 6 ஐ பாருங்கள்:
1:5 | (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். |
1:6 | நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! |
'உன்னையே, உன்னிடமே, நீ' போன்ற வார்த்தைகளை மனிதன் பேசுவதாகும், அதே போல 'நாங்கள், எங்களை' போன்ற வார்த்தைகள் கூட மனிதர்கள் பேசுவது தான். எனவே இவைகளை மனித வார்த்தைகள் என்று சொல்லலாம்.
ஆனால், இப்படி 'நீங்கள்' வேண்டிக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் எங்களுக்குச் சொல்லியுள்ளான், எனவே இவைகள் 'அல்லாஹ்வின் வார்த்தைகளே' என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
எனவே, நாமும் இப்போதைக்கு இவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றே கருதி விட்டுவிடுகிறோம்.
தேதி: 5th Mar 2025
வண்ணத் திருக்குர்ஆன் - பொருளடக்கம்