Dr. ஜாகிர் நாயக்கை திட்டாதீர்கள்! பாகம் 2

மதசகிப்புத்தன்மை கிலோ என்ன விலை?

(முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை ISISக்கு உதவ அனுப்பினால், எதிர்காலத்தில் தொழுதுக்கொள்ள முஸ்லிம்களுக்கு கிப்லா இருக்காது, ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்ய மக்காவில் காபா இருக்காது)

என் முந்தைய கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் வெறும் அம்பு தான், எய்தது "இஸ்லாம்" ஆகும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

தற்போதைய கட்டுரையில், ஜாகிர் நாயக் அவர்களின் சர்ச்சைக்குரிய ஒரு பதிலை ஆய்வு செய்யப்போகிறோம். இவரின் இந்த பதிலுக்கு வித்திட்ட 7ம் நூற்றாண்டின் ஒரு நிகழ்ச்சியை உதவிக்கு அழைப்போம். மேலும், அந்த 7ம் நூற்றாண்டின் நிகழ்ச்சி எப்படி ஐஎஸ்ஐஎஸ் என்னும் தீவிரவாத இயக்கத்தின் நாடித்துடிப்பாக இருக்கிறது என்பதையும் காண்போம். 

1) சௌதி அரேபியாவில் இதர மார்க்கங்களுக்கு ஏன் அனுமதியில்லை என்ற கேள்வியும், ஜாகிர் நாயக் அவர்களின் பதிலும்

திரு ஜாகிர் நாயக் அவர்கள், பீஸ் டீவி மூலமாக பல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் (மன்னிக்கவும், நடத்திக்கொண்டு இருந்தார்!). இந்துக்கள், கிறிஸ்தவர்கள், நாத்தீகர்கள் என்று பல தரப்பட்ட மக்கள் அவரிடம் கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுக்கும் சில பதில்கள் புத்திசாலித்தனமாக இருக்கும், சில பதில்கள் புத்தியீனமாக இருக்கும். (ஆனால், இந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் அளவிற்கு அந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியவில்லை என்பதை அவர்கள் கைத்தட்டும் விதத்தை பார்த்தால் புரிந்துவிடும்).

இப்படி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதிலைத் தான் நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம்.

கேள்வி: சௌதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள், இதர மார்க்க பிரச்சாரங்களை ஏன் அனுமதிப்பதில்லை? இதர மார்க்க வணக்கஸ்தலங்களை (கோயில்கள், கிறிஸ்தவ திருச்சபைகள்) புதிதாக கட்ட அனுமதிப்பதில்லையே ஏன்?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்:

நான் முஸ்லிமல்லாதவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது தான். நீங்கள் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறீர்கள் என்றும், மேலும் ஒரு கணக்கு ஆசிரியரை நியமிக்க நேர்க்காணலுக்கு அழைத்துள்ளீர்கள் என்றும், வைத்துக்கொள்வோம். மூன்று பேர் நேர்க்காணலுக்கு வந்தார்கள், அவர்களிடம் 2+2 எவ்வளவு என்று கேட்கிறீர்கள். முதலாவது நபர் 2+2 = 3 என்று பதில் அளிக்கிறார், இரண்டாவது  நபர் 2+2 = 4 என்கிறார், மூன்றாவது நபர் 2+2= 6 என்று பதில் கொடுத்துள்ளார். இப்போது நான் முஸ்லிமல்லாதவர்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், நீங்கள் யாருக்கு வேலை கொடுப்பீர்கள்? 2+2 = 3 என்று, அல்லது 2+2 = 6 என்று பதில் சொன்னவர்களுக்கு கணக்கு வாத்தியார் வேலையை கொடுப்பீர்களா? ”இல்லை” என்று நீங்கள் பதில் சொல்வீர்கள். ஏன் கொடுக்கமாட்டீர்கள்? என்று நான் கேட்டால், “அவர்களுக்கு கணக்கு பாடம் பற்றிய சரியான ஞானம்” இல்லை என்று பதில் சொல்வீர்கள்.

இதே போலத்தான்,  மதத்தை பொருத்தமட்டில், இறைவனின் பார்வையில் இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் அறிந்திருக்கிறோம். குர்‍ஆன் 3:85ன் படி, இறைவன் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதத்தையும் அங்கீகரிக்கமாட்டான். இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சர்ச்சுக்கள் மற்றும் இந்துக்களின் கோயில்கள் கட்டுவதைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், அவர்களின் மதங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் வணக்கவழிபாட்டு முறைகள் தவறாக இருக்கும் போது,  நாங்கள் எப்படி அவர்கள் இஸ்லாமிய மண்ணில் தங்கள் வணக்கஸ்தலங்கள் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கமுடியும்? எனவே, எங்கள் (இஸ்லாமிய) நாடுகளில் அப்படிப்பட்ட தவறான  மதங்களுக்கு நிச்சயமாக அனுமதி கொடுக்கமாட்டோம்.

Zakir Naik: I ask the non-Muslims, suppose you are the principal of a school and you intend to select a mathematics teacher. Three candidates come and you ask them, what's the total of 2 plus 2? The first replies: 2 plus 2 equals 3. The second answers: 2 plus 2 equals 4. And the third one answers that 2 plus 2 equals 6. Now, I ask these non-Muslims, will you allow the candidate to teach in your school who says that 2 plus 2 equals 3 or that 2 plus 2 equals 6? They'll say, no. I ask, why? They'll say, because he does not have correct knowledge of mathematics. Similarly, as far as matters of religion are concerned we (Muslims) know for sure that only Islam is a true religion in the eyes of God. In the Holy Quran (3:85), it is mentioned that God will never accept any religion other than Islam. As far as the second question, regarding building of churches or temples is concerned, how can we allow this when their religion is wrong and when their worshipping is wrong? Therefore, we will not allow such wrong things in our Islamic country.

மூலம்: Who is responsible for the stereotypes of Islam  

(இந்த மேற்கோள் இன்னும் சில தளங்களில் காணப்படுகின்றது, அவைகளை அடிக்குறிப்பில் பார்க்கவும்.)[1]

2) ஜனநாயகம், மதசார்பின்மை, மதசகிப்புத்தன்மை என்றால் என்னவென்று ஜாகிர் நாயக்கிற்கு தெரியுமா?

ஜாகிர் நாயக்கின் மேற்கண்ட பதிலை படிக்கும் முஸ்லிம்கள், ”அவர் சொன்னது உண்மை தானே” என்று சொல்வார்கள்.

மேற்கண்ட பதிலின் மூலமாக, ஜாகிர் நாயக் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள்:

முஸ்லிமல்லாத நாடுகள் தாங்கள் பின்பற்றும் மார்க்கம் உண்மை என்று நிச்சயமாக நம்பினால், ஏன் அவர்கள் இதர மார்க்க வணக்கஸ்தலங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும்? உதாரணத்திற்கு சொல்வதானால், கிறிஸ்தவ நாடுகள் தங்கள் மார்க்கம் தான் உண்மையானது என்று நம்பினால், ஏன் இதர மதங்கள் பிரச்சாரம் செய்யப்பட‌ தங்கள் நாடுகளில் அனுமதிக்கிறார்கள்? கோயில்கள், மசூதிகள் கட்ட ஏன் அனுமதிக்கிறார்கள்? இது இஸ்லாமல்லாத எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இது தான் ஜாகிர் நாயக் அவர்கள் கேட்கும் கேள்விகள் (லாஜிக்) ஆகும்.

இதர நாடுகள் எல்லா மதங்களையும் சரி சமமாக பார்ப்பதை இவர் குற்றப்படுத்துகிறார். ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியவில்லை, அதாவது மதசார்பற்ற ஜனநாயக நாடுகள் தங்கள் மார்க்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதினால் தான், மதசார்ப்பற்ற முறையில் நடந்துக்கொள்கின்றன. ”நீ வாழு, மற்றவர்களையும் வாழவிடு” என்பதை இஸ்லாமிய நாடுகள் தவிர இதர நாடுகள் அனைத்தும் பின்பற்றுகின்றன. சௌதி அரேபியா இதர மதங்களை அனுமதிக்காததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதாவது, இதர மார்க்கங்களை அறியும் வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைத்தால், அவைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம்கள் இதர மார்க்கங்களை பின்பற்றிவிடுவார்களோ என்ற பயத்தினால் தான் இதர மார்க்கங்களை அனுமதிப்பதில்லை. மேலும், இந்த கட்டுப்பாட்டையும் தாண்டி ஒரு முஸ்லிம் கிறிஸ்தவனாகவோ, நாத்தீகனாகவோ மாறினால், அவனுக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய நாடுகள் கொடுக்கின்றன.

ஜாகிர் நாயக்கின் கருத்துப்படி இந்தியா நடந்துக்கொண்டால்,  இந்தியா ஜனநாயக மதசார்ப்பற்ற நாடாக இல்லாமல் இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருப்பதினால், இந்தியாவில் மசூதிகள் கட்ட அனுமதிக்கக்கூடாது, முஸ்லிம்கள் தங்கள் மத பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இஸ்லாமை பரப்புபவர்களை தண்டிக்கவேண்டும், முஸ்லிம்களாக மாறும் இந்துக்களை கொலை செய்யவேண்டும். இப்படித் தான் இந்தியா நடந்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும் என்று ஜாகிர் நாயக் சொல்கிறார். இப்படியெல்லாம் நீங்கள் ஏன் நடந்துக்கொள்வதில்லை என்று மறைமுகமாக கேட்கிறார். இப்படி நடந்துக்கொண்டால் தான் இந்து மதம் மீது இந்துக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம் என்பது தான் ஜாகிர் நாயக்கின் கருத்து. இதே போல, இலங்கையிலும் முஸ்லிம்கள் மசூதிகள் கட்டாமல் புத்தமத அரசாங்கம் பார்த்துக்கொள்ளவேண்டும். ஜாகிர் நாயக்கின் இப்படிப்பட்ட பதில்கள் தான், நல்லவர்களாக இருக்கும் இதர மக்கள் கூட‌ முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட தூண்டுகின்றன.

ஒரு வேளை ஒவ்வொரு முஸ்லிமல்லாதவனும், ”நான் ஜாகிர் நாயக் சொன்னது போல‌ இனி நடக்கப்போகிறேன்” என்று முடிவு செய்தால் என்ன நடக்கும்? ஒரு கிராமத்தின் தலைவன் இப்படி நினைத்தால் என்ன நடக்கும்? இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்தாலும், தன் கட்டுப்பாட்டில் (அதிகாரத்தில்) இருக்கும் தன் கிராமத்தில் வசிக்கும் இதர மக்களுக்கு எதிராக நடந்துக்கொள்வான் அல்லவா? மசூதிகளையும், சர்ச்சுக்களையும் அழிக்கமுயலுவான் அல்லவா? ஜாகிர் நாயக்கின் இப்படிப்பட்ட பேச்சு நல்லவர்களையும் கெடுத்துவிடும் போல் இருக்கிறது! இஸ்லாமை பின்பற்றாத நாடுகளின் நல்ல குணத்தை, அதாவது ஜனநாயக மதசார்ப்பற்ற ஆட்சியை ஜாகிர் நாயக் குற்றப்படுத்துகிறார். இஸ்லாமிய ஆட்சிமுறையில் இருக்கும் மதசகிப்புத்தன்மையற்ற நிலையை நியாயப்படுத்த, இதர நாடுகளின் ஜனநாயகத்தை, மதசகிப்புத்தன்மையை கேவலப்படுத்துகிறார் இவர். இது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை கவனியுங்கள்.

3) இஸ்லாமுக்கு சரியாக கணக்கு போடத் தெரியுமா (2+2 = 4)?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மேற்கண்ட பதிலைச் சொல்வதற்கு முன்பாக, ஒரு கணக்கைச் சொல்கிறார்.

முஸ்லிம்களுக்கு மட்டும் தான் 2+2 = 4 என்ற சரியான பதில் தெரியுமாம், இதர மக்களுக்கு தெரியாதாம், அதாவது முஸ்லிம்களுக்குத் தான் தங்கள் மதம் உண்மையானது என்று தெரியுமாம், இதர மக்களுக்கு அந்த நம்பிக்கை இல்லையாம், எனவே தான் அவர்கள் எல்லா மதங்களுக்கும் மதிப்பு கொடுத்து, நாட்டில் அனுமதிக்கிறார்களாம். உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாகிர் நாயக் முதற்கொண்டு, இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில், முஸ்லிம்கள் தங்கள் அறியாமையினால் 2+2 = 3 என்பது தான் சரியான பதில் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். முஸ்லிம்களிடம் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால், தாங்கள் தவறான ஒன்றை (இஸ்லாமை) சரியான ஒன்று என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் இருப்பது தான்.

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது போல இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று கருதினால், ஏன் இஸ்லாமிய நாடுகளில் படிப்பறிவின்மை, படுகொலைகள், தீவிரவாத செயல்கள், விவாகரத்துக்கள், பெண் கொடுமைகள் போன்றவை  மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக நடக்கின்றன‌? 2+2 = 4 என்று இஸ்லாம் நம்பினால், உலகில் உள்ள எல்லா மதங்களைக் காட்டிலும் ஏன் இஸ்லாம் மட்டும் அதிகமாக தீவிரவாதிகளை பெற்றுத் தள்ளுகிறது? ஜாகிர் நாயக்கின் படி 2+2=3 என்று நம்பும் இதர மதங்களில் என் இஸ்லாமைப் போல, அதிக அளவில் தீவிரவாதிகள் இல்லை? கடைசியாக, ஜனநாயகத்தின் மீதும், மத சகிப்புத்தன்மை மீதும் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய ஆட்சியில் கஷ்டங்களை அனுபவிக்கும் முஸ்லிம்கள் இதர நாடுகளுக்கு உயிர் பிழைக்க செல்கின்றார்களே! ஏன்? 

இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களே! உலக இஸ்லாமிய நாடுகளின் பட்டியலை தயாரித்து, இதர நாடுகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இஸ்லாமிய நாடுகள் எந்த வகையில் இதர நாடுகளைவிட பொருளாதாரத்தில், மனித உரிமைகளை பாதுகாப்பதில், பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பதில், எவ்விதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்துப்பாருங்கள். உண்மையாகவே, இஸ்லாம் 2+2=4 என்பதை நம்புகின்றதா? அல்லது 2+2=3 அல்லது 2+2=6 என்பதை நம்புகின்றதா என்பதை அறிய இஸ்லாமிய நாடுகளில் (முக்கியமாக சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளில்) சில ஆண்டுகள் வாழ்ந்துப் பாருங்கள், உண்மை புரியும்.

ஜாகிர் நாயக் அவர்களின் பதிலை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், ‘இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று முஸ்லிம்கள் மட்டுமே நம்புவதாக’ கூறுகின்றார். மேலும், குர்-ஆன் 3:85ன் படி, இஸ்லாம் ஒரு மத சகிப்புத்தன்மையற்ற மதம் என்பதை அவரே ஒப்புக்கொள்கின்றார்.  இதைத் தான் முஸ்லிம் நாடுகளில் நாம் பார்க்கின்றோம்.

என் மதம் தான் உண்மையானது, ஆகையால், மற்ற மதங்கள் வாழ அனுமதிக்கமாட்டோம் என்ற இஸ்லாமிய கோட்பாடு எப்படி இஸ்லாமை அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதை இப்போது காண்போம்.

4) காபாவை நிச்சயம் தாக்குவோம் - ISISஸின் அடுத்த இலக்கு

கடந்த சில ஆண்டுகளாக, ஐஎஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் அட்டூழியங்களை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இஸ்லாமிய ஹதீஸ்களாகிய புகாரி, முஸ்லிம் தொகுப்புக்களில் மற்றும் இதர இஸ்லாமிய சரித்திர நூல்களில் யுத்தங்கள் பற்றியும், அடிமைகள் பற்றியும் வரும் விவரங்களை படித்தால், தற்போது ஐஎஸ் மூலமாக நடந்துக்கொண்டு இருக்கும் நடபடிகளை செய்திகளில் படிப்பதைப் போன்ற உணர்வு உண்டாகும். அதாவது, இஸ்லாம் தூய வடிவில் செயல்பட்டால் எப்படி இருக்குமோ, அதைத் தான் ஐஎஸ் இன்று செய்துக்கொண்டு இருக்கின்றது என்பதை காணமுடியும்.  உலகில் காணும்  இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும், தாங்கள் தான் உண்மையான தூய இஸ்லாமை பின்பற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

ஏன் ஐஎஸ் தீவிரவாதிகள், காபாவை இலக்கு வைத்து இருக்கிறார்கள்? என்று சிந்திக்கும் போது, இஸ்லாமிய சரித்திரத்தில் காணப்படும் இரண்டு அடிப்படை விவரங்கள் நம் கண்முன் நிற்கும். ஜாகிர் நாயக்கின் பதிலும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.

முதலாவது, இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்ற அவர்களின் திடமான நம்பிக்கை,

இரண்டாவது, முஸ்லிம் குழுக்களுக்கு ஆள் பலம் கூடும் போது, அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதர மார்க்கங்களை அழிக்க முயற்சி எடுப்பது.

இதன் அடிப்படையில் தான் ஐஎஸ் தீவிரவாதிகள் இதர மார்க்க சின்னங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்

  • ஆப்கானிஸ்தானில் புத்தமத சரித்திர சின்னத்தை, சிலைகளை அழித்தார்கள்.
  • கிறிஸ்தவ தேவாலயங்களை அழித்தார்கள்.
  • ஷியாக்களின் வணக்க ஸ்தலங்கள், சரித்திர சின்னங்களை அழித்தார்கள்.

இந்த பட்டியல் மிகப்பெரியது, இதனை கீழ்கண்ட தொடுப்பில் சென்று படிக்கவும்.

Destruction of Cultural Heritage by ISIL  

அப்பாடா!, நம்முடைய வணக்க ஸ்தலங்களை இவர்கள் விட்டுவிட்டார்களே! என்று பெருமூச்சு விடுகின்றீர்களா சுன்னி முஸ்லிம்களே! உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஐஎஸ் இஸ்லாமிய தீவிரவாதிகள், சுன்னி மசூதிகளிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளார்கள். அதனை மேற்கண்ட தொடுப்பில் படிக்கவும். இன்னும் ஒரு மிகப்பெரிய ஆபத்து உலக முஸ்லிம்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் மூலமாக பிரச்சனை வரும் என்று எண்ணுகின்றீர்களா? இல்லை, முஸ்லிமல்லாத நாடுகளால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. முக்கியமாக இதர இஸ்லாமல்லாத நாடுகளுக்கு காபாவோடு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு வரும் ஆபத்து, உங்களிலிருந்தே வரும். ஐஎஸ் தீவிரவாதிகள் காபாவையும் அழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்கள். காபாவில் ஒரு மூளையில் உள்ள கருப்புக்கல் என்பது ஒரு விக்கிர ஆராதனைக்கு சமமானது எனவே, அதனையும் நாம் அழிப்போம் என்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பக்தாதி கூறியுள்ளார்:

ISIS LEADER AL-BAGHDADI CALLS FOR DESTRUCTION OF KAABA STONE

Ibrahim Al Kandari, a Kuwaiti Islamist preacher, also demanded the destruction of the stone believed to be of meteoric origin. “The Black Stone should be destroyed to put an end to this ancient pagan ritual and idolatrous worship of images”.  “The fact that the prophet Mohammed discarded the 360 idols but did not destroy the Kaaba stone does not mean that we shouldn’t do it now” he insisted.

மூலம்: http://worldnewsdailyreport.com/isis-leader-calls-for-destruction-of-kaaba-stone/

எனவே, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களே, உங்கள் பிள்ளைகளை ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட நீங்கள் அனுப்புவீர்களானால், எதிர் காலத்தில் நீங்கள் தொழுதுக்கொள்ள உங்களுக்கு கிப்லா இருக்காது, நீங்கள் ஹஜ் செய்ய மக்காவில் காபாவும் இருக்காது. உங்கள் மார்க்கத்தை உண்மை (2+2=4) என்று நம்பும்   தீவிரவாதிகள் அதனை அழித்துவிடுவார்கள்.

இன்று நான் சொல்லும் வார்த்தைகளை மனதில் பதித்துக்கொள்ளுங்கள், இன்றைய தேதியை உங்கள் டைரியில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புனித நகரமாகிய‌ மக்காவில் இந்த தீவிரவாதிகளால் முதல் குண்டு வீசப்படுமானால் அது காபாவின் மீது தான் வீசப்படும். காபா தாக்கப்படுமானால், அது முஸ்லிம் தீவிரவாதிகளால் மட்டுமே முடியும் . ISஐ முஸ்லிம்கள் ஆதரித்தால், எதிர்காலத்தில் கிப்லாவிற்காக வேறு ஒரு திசையை முஸ்லிம்கள் தேடவேண்டிய‌ நிலைக்கு தள்ளப்படுவார்கள். புதிய கிப்லாவை கண்டுபிடிக்கவும் இப்போது வாய்ப்பு இல்லை, 7ம் நூற்றாண்டில் முஹம்மது உயிரோடு இருந்தார் எனவே, ஜெருசலேமிலிருந்து மக்காவிற்கு கிப்லாவை அல்லாஹ்வின் உதவி கொண்டு மாற்றினார், இன்று அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்று யார் தருவது? எனவே காபாவை காத்துக்கொள்ளுங்கள் முஸ்லிம்களே! தாலிபான் ஆறு அடி பாய்ந்தால், அல்கெய்தா  பதினாறு அடி பாய்ந்தது. ஐஎஸ்ஸோ 666 அடி பாய்வதற்கு காத்துக்கொண்டு இருக்கிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன், தன் பிள்ளைகளை ISஸுக்கு உதவ அனுப்பாமல் இருக்கக்கடவன்.

மதினாவில் கால் பதித்த தீவிரவாதிகள்:

"இப்படியெல்லாம் நடக்காது, காபாவையும், மக்காவையும் காப்பதாக அல்லாஹ் வாக்கு கொடுத்துள்ளான். அக்காலத்தில் காபாவை அழிக்க வந்த இராணுவத்தை அல்லாஹ் பறவைகளைக்  கொண்டு, எரிகற்களை வீசி அழித்தான், அது போல இப்போதும் செய்து காப்பாற்றுவான்" என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும் (உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் உண்மைப்படுத்தினால் நன்றாக இருக்குமே!). ஆனால் முஸ்லிம்களே, தீவிரவாதிகள் மதினா வரையில் வந்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் தூரம் தான் உள்ளது மக்காவிற்கு.

இந்த வருடம் (2016) ரமளான் மாதத்தில், மதினாவில் முஹம்மதுவின் மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு தாக்குதல் நடந்தது. அதே நாள் இன்னும் இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.

மதினா வரையில் வந்தவர்கள், மக்காவில் நுழைவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? மேலும், மக்காவில் முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு, தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தானே! ஹஜ் செய்யவரும் முஸ்லிம்களில் யார் தீவிரவாதி என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? விக்கீபிடியாவின் படி, மதினாவில் முஹம்மதுவின் மசூதிக்கு அருகில் குண்டு வெடித்தது, 1400 ஆண்டுகளில் இது தான் முதல் முறை என்றுச் சொல்கிறது. ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே மதினாவில் இருந்த ஒரு மசூதி தீக்கிரையாக்கப்பட்டது என்பது வேறு விஷயம். யார் இப்படி செய்தது? என்று கோபம் கொள்கிறீர்களா? இதனை அறிய இக்கட்டுரையை நீங்கள் தொடர்ந்து படிக்கவேண்டும்.

ஐஎஸ் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல:

ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்களையும் அழிக்க முயன்றுள்ளதால், அவர்கள் இஸ்லாமுக்கு எதிராக நடப்பவர்கள் தானே! என்று சில முஸ்லிம்கள் கேட்கக்கூடும்.

முஸ்லிம்கள்,  முக்கியமாக கவனிக்கவேண்டியது ஒன்று உள்ளது. அதாவது இஸ்லாமின் படி, யாருக்கு ஆள் பலம் அதிகமாக உள்ளதோ, அவர்கள் சொல்லும் கோட்பாடு தான் உண்மையான இஸ்லாமை பிரதிபலிக்கும்.  சுன்னி முஸ்லிம்களுக்கு ஆள் பலம் கூடினால், ஷியாக்களின் நம்பிக்கைகள் தவறானவைகள் என்று கருதப்படும், எனவே, அவர்களின் வணக்கஸ்தலங்களை தாக்கலாம். அதே போல, ஷியாக்கள் அதிகமாக இருந்தால், சுன்னி முஸ்லிம்களின் கோட்பாடுகள் தவறானவை, எனவே அவர்கள் இடங்களை ஷியாக்கள் தாக்கலாம். இவ்விருவர் தனித்தனியாக இருந்தால், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இருக்கவே இருக்கிறார்கள், அவர்களின் கோயில்களைத் தாக்கலாம், ஏனென்றால் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள் அல்லவா! ஆக, யாரிடம் பலம் அதிகமாக உள்ளதோ, அவர் சொல்வது தான் உண்மையான இஸ்லாம்.

இதன் அடிப்படையில், ஐஎஸ் தீவிரவாதிகளின் நம்பிக்கையின் படி, உண்மையான இஸ்லாமை பிரதிபலிப்பவர்கள் அவர்கள் தான், எனவே ஷியாக்களின் வணக்கஸ்தலங்களை இடிக்கிறார்கள், சர்ச்சுக்களை இடிக்கிறார்கள், புத்தமத சின்னங்களை இடிக்கிறார்கள். அவ்வளவு ஏன், காபாவில் உள்ள கருப்புக்கல் கூட ஒரு விக்கிரகம் என்றுச் சொல்லி அதையும் இடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதனால் தான் சொல்கிறேன், முஸ்லிம்களே, உங்கள் பிள்ளைகளை ஐஎஸ்ஸுக்கு உதவி செய்ய அனுப்பாதீர்கள், உங்கள் காபா தாக்கப்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் விரலைக்கொண்டு உங்கள் கண்களையே குத்திக்கொள்ளக்கூடிய அளவிற்கு தரம் தாழ்ந்துவிடாதீர்கள்.

சரி, முஸ்லிம்களின் அடுத்த துக்கம் இது தான்: இஸ்லாமின் இரண்டாம் புனித பூமியாகிய மதினாவில் மசூதிக்கு அருகில் குண்டு வைத்தவன் வெறியன் ஆவான், அவனை நாம் கண்டிக்கிறோம் என்றுச் சொல்வார்கள். அன்பான முஸ்லிம்களே! கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். மசூதியில் குண்டு வெடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தீவிரவாதி என்றுச் சொல்லி நீங்கள் முத்திரைக் குத்தினால், மிகப்பெரிய தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள்.

இஸ்லாமை பொருத்தமட்டில், இஸ்லாமிய மசூதியாக இருந்தாலும், அதில் சொல்லப்படும் கோட்பாடு இஸ்லாமுக்கு எதிராக இருந்தால், உடனே அதனை இடித்து எரித்துவிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘இஸ்லாம் என்பது உண்மை, எனவே மற்றவை இருக்கக்கூடாது. இஸ்லாம் என்ற பெயரில் தவறானவை இருந்தாலும், அதனையும் அழிப்போம். அது காபாவாக இருந்தாலும் சரி, முஹம்மது முதன் முதலாக கட்டிய மதினா மசூதியாக இருந்தாலும் சரி, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் தீவிரவாதிகள்.

புரியவில்லையா!... அடுத்த தலைப்பை படியுங்கள், எல்லாம் தெளிவாக புரியும்.

5) முஹம்மது அழித்த மதினா மசூதி

இஸ்லாமை பொருத்தமட்டில், தவறான நோக்கத்தோடு கட்டப்படுவது மசூதியானாலும் சரி அதை அழிக்கவேண்டும். இஸ்லாமிய தொழுகை நடத்தப்படும் மசூதிக்கே இந்த கதியானால், இதர மதங்களின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.

தாலிபான், கல்கெய்தா, ஐஎஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாத கூட்டம் இதர மதங்களின் ஷியாக்களின் வணக்கஸ்தலங்களை அழிக்கிறார்கள் என்று சொல்லும் போது, சராசரி முஸ்லிம்கள் வெகுளித்தனமாக “அவர்கள் முஸ்லிம்கள் அல்ல” என்று நம்மிடம் சொல்வார்கள். இப்போது இந்த எடுத்துக்காட்டுக்கு முஸ்லிம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அதுவும் குர்‍ஆனின் கட்டளையிலிருந்தே அந்த அழிவு தொடங்கியுள்ளது:

குர்-ஆன் 9:107-110

9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மதினாவில் ஒரு குழுவினர் ஒரு மசூதியை கட்டினார்கள். முஹம்மது வந்து அதில் தொழுகையைச் செய்து தொடங்கி வைக்கும்படி கேட்டார்கள், அவரும் வருகிறேன் என்றுச் சொன்னார். ஆனால், அவருக்கு ஒரு வெளிப்பாட்டை அல்லாஹ் இறக்கினான், அதனைத் தான் மேலேயுள்ள வசனங்கள் காட்டுகின்றன. உடனே முஹம்மது தன் ஆட்களை அனுப்பினார், மக்கள் அந்த மசூதிக்குள்ளே இருக்கும் போதே, முஹம்மதுவின் அடியாட்கள் அந்த மசூதியை கொளுத்துவிட்டார்கள். அந்த மசூதி ஏன் அழிக்கப்பட்டது என்பதற்கு பலவகையான காரணங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர், அவைகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

1) மஸ்ஜித் திராரின் அழிவு (Demolition of Masjid al Dirar)

2) Islamic Encyclopedia (மஸ்ஜித் திரார்)

3) Allah ordered to demolish - QA Islam

நமக்கு முன்பாக நிற்கும் கேள்விகள் என்னவென்றால், அல்லாஹ்வை தொழுதுக்கொள்ள கட்டப்பட்ட மசூதி, அதை கட்டியர்வர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனை அழித்து இருந்திருக்கக்கூடாது என்பதாகும். ஒரு தலைவராக (யாரிடம் ஆள் பலம் அதிகம் இருந்ததோ அவர் தான் அப்போது தலைவர்), நீதி செலுத்தும் முஹம்மது என்ன செய்து  இருந்திருக்கவேண்டும்? மசூதியை அழிக்காமல், தீவிரமாக விசாரணைச் செய்து, மக்களுக்கு நீதி வழங்கி இருந்திருக்கவேண்டும். தீய நோக்கத்தோடு கட்டியிருந்தால், அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுத்திருந்திருக்கவேண்டும். மக்கள் மசூதிக்குள்ளே இருக்கும் போதே, அதனை கொளுத்தினார்கள், முஹம்மதுவின் அடியாட்கள். இது தான் இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் மதினாவில் அழிக்கப்பட்ட முதல் மசூதி. அதையடுத்து, இந்த 2016ம் ஆண்டில் ரமளானில், அதே மதினாவில், முஹம்மது கட்டிய மசூதிக்கு அருகாமையில் ஒரு தற்கொலை குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் என்ன? ஒரு இஸ்லாமிய குழு (ஆள் பலம் உள்ள குழு, அது சட்டப்படியான நாடாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தாங்கள் பின்பற்றுவது தான் உண்மையான இஸ்லாம் என்று நம்பும் தீவிரவாத குழுவாக இருந்தாலும் சரி), தங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் மார்க்கம், அல்லது இவர்களின் படி, தவறான கோட்பாடுகளை பின்பற்றும் மக்களின் வணக்கஸ்தலங்களை தாராளமாக அழிக்கலாம். இதற்கு குர்-ஆனிலிருந்து எடுத்துக்காட்டை மேலே கண்டோம். முஹம்மது குர்-ஆனின் அடிச்சுவடிகளில் நடந்தார், இவரது அடிச்சுவடிகளில் இன்றைய இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நடக்கின்றன.

ஐஎஸ் தீவிரவாதிகள், ஷியாக்களின் தர்காக்களை அழிப்பதற்கு மேற்கண்ட குர்-ஆனின் நிகழ்ச்சி வழிகாட்டுகின்றது. இதர மார்க்க வணக்கஸ்தலங்களாகிய சர்ச்சுக்கள், கோயில்களை தகர்க்க மேற்கண்ட குர்-ஆன் வசனம் தான் ஆதாரம். அவ்வளவு ஏன், மதினாவில் குண்டு வைத்ததற்கும் அதே நிகழ்ச்சி தான் காரணம். கடைசியாக, காபாவில் உள்ள கருப்புக்கல்லை காரணம் காட்டி, மக்காவின் காபாவை தாக்க ஐஎஸ் தீவிரவாதிகள் முடிவு செய்ததற்கும் இதே குர்-ஆன் வசனம் தான் காரணம். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். முஸ்லிம்களே மசூதிகளை அழிப்பது என்பது சாதாரண உதாரணமா? அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட ஒன்றாகும்.

ஐஎஸ் தீவிரவாதிகள் இஸ்லாமை நம்பினாலும், காபாவில் உள்ள கல் ஒரு விக்கிர ஆராதனைக்கு சம்மமானது என்று அவர்கள் கருதுவதினால் (அன்று முஹம்மது அழித்த மசூதியைப்போல), தன் இன மக்கள், தன் சகோதர்கள் ஒவ்வொரு ஆண்டு மேற்கொள்ளும் ஹஜ்ஜின் போது, முத்தமிடும் அந்த கல்லை அழிக்க முயலுகின்றனர். இது நியாயமா இல்லையா? என்ற கேள்விக்கு இடமில்லை. முஹம்மது காட்டிச்சென்ற வழியின் படி, யாரிடம் ஆள் பலம் அதிகமாக இருக்கின்றதோ அவர் சொல்வது தான் சரியானது. அன்று முஹம்மதுவிடம் ஆள் பலம் அதிகமாக இருந்தது, மதினாவின் மசூதி அழிந்தது, நேற்று தாலிபனிடம் பலம் இருந்தது, பல வணக்கஸ்தலங்கள் அழிந்தன, இன்று ஐஎஸ் இருக்கிறது, எனவே காபாவை இவர்கள் குறிவைத்துள்ளார்கள். “Survival of the fittest” என்றுச் சொல்வார்களே, அது போல இஸ்லாமில் நியாயமில்லை, நிதியில்லை, யாரிடம் பலம் அதிகமாக இருக்கிறதோ, அவர் சொல்வது தான் சட்டம் அவர் செய்வது தான் சரியானது.

முடிவுரை:

ஜாகிர் நாயக்கின் பதிலின் வேர் எங்கு வரை சென்றுள்ளது என்பதை கவனியுங்கள். இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அந்த காலக்கட்டத்துக்கு நேராக இஸ்லாம் உலகை கொண்டுச் செல்ல விரும்புகிறது, நம்மை 7ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்லும் பணியில் தான் ஜாகிர் நாயக் போன்றவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இதைப்போலவே,  ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஜாகிர் நாயக் ஞானத்தை மூலதனமாக வைத்துச் செய்கிறார், ஐஎஸ் வன்முறையை மூலதனமாக வைத்துக்கொண்டு செயல்படுகின்றது.  இவ்விருவரும் செய்வது ஒரே செயல் தான், ஆனால், வழிமுறைகள் வேவ்வேறு. அன்று முஹம்மது அந்த மதினாவின் மசூதியை அழிக்காமல் இருந்திருந்தால், முஸ்லிம்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்களை பின்பற்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

கடைசியாக, முஸ்லிம்களே, உங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள முயற்சி எடுங்கள், இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும். உங்கள் பிள்ளைகளை ஐஎஸ்ஸோடு சேர அனுப்பாதிருங்கள், உங்களுக்கு ஹஜ் செய்ய மக்கா, காபா வேண்டுமல்லவா? தொழுகை செய்ய கிப்லா வேண்டுமல்லவா? எனவே, சிந்தியுங்கள். இந்தியர்களே! டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை திட்டாதீர்கள்! அவர் என்ன செய்வார் பாவம்? எந்த காலத்திலாவது எய்தவனிடம் 'என்னை எந்த காரணத்திற்காக செலுத்தினாய்?' என்று கேட்க அம்புக்கு அதிகாரம் இருந்ததுண்டா?

அடிக்குறிப்புக்கள்:

[1] Youtube - Why do many Muslim countries disallow the propagation of other Religions in their country?

[2] Zakir Naik AZ-Quote 

[3] Who is responsible for the stereotypes of Islam

[4] Destruction of Cultural Heritage by ISIL  

[5] ISIS leader calls for destruction of Kaaba stone

[6] மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல் (BBC) 

[7] சவுதியில் தொடர் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி (தினமலர்) 

[8] மஸ்ஜித் திராரின் அழிவு (Demolition of Masjid al Dirar) - Wikipedia

[9] Islamic Encyclopedia (மஸ்ஜித் திரார்)

[10] Allah ordered to demolish - QA Islam


Dr. ஜாகிர் நாயக்கிற்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்கள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்