நியாயத்தீர்ப்பு நாளில் யார் “இறைவன்” என்று அழைக்கப்படுபவர்?

இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில்  கீழ்கண்டவாறு சொல்கிறார்: (மத்தேயு 7:21-23)

7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 

7:22  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 

7:23  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மேற்கண்ட 22ம் வசனத்தில் “அந்நாளில்” என்ற சொல் “நியாயத்தீர்ப்பு நாளை குறிக்கிறது”. உலகமனைத்தையும் நியாயத்தீர்ப்பு செய்பவருக்கு முன்பாக அந்த நாளில் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைப் பற்றிய கணக்கை ஒப்புவிக்கவேண்டும்.

இயேசு அந்த நியாயத்தீர்ப்பு நாளின் “நியாயாதிபதி” என்று இங்கு பறைச்சாற்றுகிறார்.

ஒரு நாள் வரும், அந்த நாளில் ஒவ்வொருவருக்கும் “யார் இறைவன் (கர்த்தர்)” என்று தெளிவாக தெரியவரும். இதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் யாருக்கும் வராது [1].

அந்த நாளில் எல்லோரும் தம்மை “கர்த்தாவே / ஆண்டவரே” என்று அழைப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். இப்படி மக்கள் அழைக்கும் போது அவர் அதனை மறுக்கவில்லை. இப்படி அழைப்பவர்களைப் பார்த்து “ஏன் எனக்கு இப்படிப்பட்ட தெய்வீகத்தன்மையான பட்டத்தைக் கொடுத்து அழைக்கிறீர்கள்” என்றுச் சொல்லி, அவர்களை குற்றப்படுத்தமாட்டார், அதற்கு பதிலாக அவர்களின் கீழ்படியாமைப் பற்றி கேள்வி எழுப்புவார். கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டவர்களையும், அவரது ஊழியம் செய்து, அவருடைய பெயரில் பல காரியங்களை செய்தவர்களையும் அவர் கேள்வி கேட்பார், அவர்களின் கீழ்படிதல் பற்றி குற்றம் சாட்டுவார் [2]. இப்படிப்பட்ட ஊழியம் செய்த இவர்கள் இயேசுவிற்கு முழு இருதயத்தோடும் கீழ்படிந்தார்களா? அவரோடு தனிப்பட்ட விதத்தில் உறவுமுறையை வைத்திருந்தார்களா? அல்லது மத சடங்காச்சாரங்களை மட்டும் பின்பற்றிக்கொண்டு, அவர் மீது சாராமல் வாழ்தார்களா என்று கேள்வி எழுப்புவார்.

அந்த நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு மட்டுமே நியாயாதிபதியாக இருப்பார், எனவே, இன்று அவரை ஆண்டவர் என்று அழைப்பதும் சரியான ஒன்று தான். 

நாமும் எச்சரிக்கையாக இருப்போம், இயேசுவை (உதட்டளவில்) பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லிக்கொண்டு, அவரை முழுமனதோடு நேசிக்காமல், கீழ்படியாமல் இருந்தால், நம்மிடமும் அந்த நாளில் கேள்விகள் கேட்கப்படும்.

மேற்கண்ட வசனங்களில் மக்களிடம் காணும் பிரச்சனை எதுவென்றால் “அவர்கள் இயேசுவை எப்படி கூப்பிட்டார்கள் என்பது பற்றியது அல்ல, அதற்கு பதிலாக, அவர்கள், அவருக்கு முழுமனதோடு கீழ்படிந்தார்களா?” என்பது தான். 

குர்-ஆனின் 5:116-118 வசனங்கள் சொல்வது போல, இயேசு அந்த நாளில் கேள்விகள்  கேட்கப்படமாட்டார். அதற்கு பதிலாக, அந்த நாளில் நியாயாதிபதியாக அவரே இருப்பார். இவருக்கு முன்பாகத்தான், உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் புரிந்த செயல்களுக்கு கணக்கை ஒப்புவிக்கவேண்டும். இயேசுவை எப்படி இவர்கள் கண்டார்கள், என்னவென்று அழைத்தார்கள் என்பதும் கேட்கப்படும், கடைசியாக நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும்.

மத்தேயு 7:21-23ல் இயேசு கூறியவற்றோடு, முஹம்மது கூறியதாக புகாரி ஹதீஸில் வரும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் [3]

அடிக்குறிப்புக்கள்

[1] பார்க்க பிலிப்பியர் 2:5-11

[2] பார்க்க ”The Easy Sinful Nature Of Christianity”.

[3] புகாரி ஹதீஸ்கள்:

6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :7 Book :81

6586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.  . . .Volume :7 Book :81

6587. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :81

மூலம்: http://www.answering-islam.org/BibleCom/mt07_21-23.html

இஸ்லாமியர்களுக்கான பைபிள் விரிவுரை