பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா?

Did Jesus Have to Die to Forgive Sin?

ஆரம்பத்தில்:

கருத்துசான்று
தேவன் தமது வார்த்தையினால் இவ்வுலகினைப் படைத்தார்.தேவன் "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
   —ஆதியாகமம் 1:3
தேவன் தமது வார்த்தையினால் மனிதனைப் படைத்தார். பின்பு தேவன், "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்".
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
   —ஆதியாகமம் 1:26-27
தேவன் நல்லவர். கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது..
   —சங்கீதம் 107:1

 

இப்போது:

நீங்கள் எதிர்ப்பாராததுநீங்கள் எதிர்ப்பார்ப்ப‌து
தேவன் நாம் காணக்கூடாதபடி மறைவாயிருக்கிறார். தேவன் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

தேவன் இருக்கிறாரா; இருந்தால் அவர் யார் என்பதில் மனிதர்கள் மாறுபட்ட கருத்துடையவர்களாய் உள்ளனர்.

தேவனின் ஆளுகையின் கீழ் மனிதர்கள் உள்ளனர்.

மனிதர்கள் தத்தம் மாறுபட்ட கொள்கைகளினாலும் பேராசையினாலும் மிருகத்தனமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள்.

பலர் தமது நித்திய வாழ்வினை துன்பமும் தண்டனையும் நிறைந்த நரகத்தில் கழிக்கிறார்கள்.

நித்திய‌ துயரமான நரகத்தீயினில் ஒருவரும் தண்டனையடைந்து வெந்து மாய்வதில்லை.

நடந்தது என்ன‌?

கருத்துசான்று

ஆதாம் மற்றும் ஏவாளின் மீறுதல்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி:
"நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."
...
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது"
...
சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: "நீங்கள் சாகவே சாவதில்லை;" நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
   —ஆதியாகமம் 2:16, 3:1, 3:4-7

மனிதன் பாவ சுபாவம் உள்ளவனாய் இருக்கிறான்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்..
   —ஆதியாகமம் 3:7, 8

தேவன் மனிதனை சபித்தார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
   —ஆதியாகமம் 3:17-19

தேவன் மனிதனை தன் பிரசன்னத்திலிருந்து துரத்திவிட்டார்

ஆகையால் தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்....
   —ஆதியாகமம் 3:23

அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
   —ஆதியாகமம் 4:26F

தேவ வார்த்தையின் இரு தோற்றங்கள்

உண்மைபொய்

தேவன் பேசுவது போன்றே உண்மை சம்பவங்கள் அமைகின்றன‌

"தேவன் மெய்யாகவே சொன்னாரா....?"

"நன்மை தீமை அறியத்தக்க இம்மரத்தின் கனியை நீங்கள் புசித்தலாகாது, ஏனெனில் அவ்வாறு புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள்."

"நீங்கள் சாகவே சாவதில்லை."

இல்லை, தேவன் எளிதில் பாவங்களை மன்னிக்கிறது இல்லை. அவர் தம் வாக்கினின்று மாறுபடுவது இல்லை.

தாம் விரும்பினால் தேவன் பாவங்க‌ளை எளிதில் மன்னிக்கக்கூடும்.
அவர் கூறியதை கருத்திற்கொள்ள வேண்டாம்.

முடிவுரை‌

தேவன் தமது வல்லமைமிக்க வார்த்தையினால் இவ்வுலகினை உண்டக்கினார்

தேவன் சொன்னார், " நன்மை தீமை அறியத்தக்க இம்மரத்தின் கனியை நீங்கள் புசித்தலாகாது, ஏனெனில் அவ்வாறு புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள்."

ம‌னித‌ன் ச‌ர்ப்ப‌த்தின் வார்த்தையை ந‌ம்பினான்: " தேவன் மெய்யாகவே சொன்னாரா....?", தேவ‌னின் வார்த்தை‌யை அல்ல‌.

இவ்வுல‌கினை உண்டாக்கிய அதே வல்லமை மிக்க வார்த்தை மனிதனை சபித்தது.

த‌ன்னிச்சையாக‌ பாவ‌ம‌ன்னிப்பு பெறும‌ள‌விற்கு தேவ‌ன் த‌ம‌து வார்த்தை‌யினை அற்பமாக்குவ‌தில்லை!

தேவ‌னின் சாப‌ம் நிறுத்த‌ப்ப‌ட‌ப்போவ‌தில்லை.

அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக, தேவ‌ன் ந‌ம்மை நேசிக்கிறார். அவ‌ர் த‌ம‌து கிருபையை ந‌ம‌க்குத்தரச் சித்த‌மாயிருக்கிறார்.

என‌வே அவ‌ர் த‌ம‌து ஒரே பேரான‌ குமார‌னை ந‌ம்மிடையே அனுப்பினார்,
  • கன்னியின் வயிற்றில் பிறந்து, பாவ சுபாவம் இன்றி,

  • நம்மைப்போன்றே உலகப்பிரகாரமான தூண்டுதல்களுக்கு உட்பட்டும் பாவம் சிறிதுமின்றி,

  • தாம் பரிசுத்தமாயிருந்தும் நமது பாவங்களினிமித்தம் சாபத்தினை ஏற்றுக்கொண்டு, தம்மை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் அழிந்து போகாமல் நித்திய வாழ்வினை அடையும் பொருட்டு

 

விவாதம்

கடவுள் பற்றிய அடிப்படையான இரு கோட்பாடுகள் உள்ளன‌.

ஒரு பார்வையின்படி, தவறு செய்யும் ஒவ்வொரு மனிதன் பின்னும் அவன் செய்யும் தவறுகளை கண்காணிக்க கடவுள் ஒரு தூதனை அனுப்பி அவன் செய்ததை குறித்துவைத்துக்கொண்டு நியாயத்தீர்ப்பின் நாளில் அத‌னை அவனுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்; இவ்விதம் கடவுள் பல கோடிக்கணக்கான தூதர்களைக் கொண்டு மனிதர்களை நரகத்திற்கு அனுப்புவதில் தீவிரமாய் இருக்கிறார் என்பதாகும்.

எனவே எவ்வாறாயினும் கடவுள் என்பவர் மனிதர் செய்யும் பாவங்களுக்காக அவர்களை தண்டிப்பவராகவே பலரால் நம்பப்படுகிறார்.

வேறுவிதமான பார்வையை பைபிள் நமக்குத்தருகிறது:

[இயேசு சொன்னார்]

"திருடன் திருடவும்
கொல்லவும்
அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.

நானோ அவைகளுக்கு
ஜீவன் உண்டாயிருக்கவும்,
அது பரிபூரணப்படவும் வந்தேன்."

—யோவான் 10:10பைபிள் கூறுவதின்படி, தேவன் இவ்வுலகை நேசிக்கிறார். அவர் நாம் நரகத்திற்குச்செல்லாதபடி இருக்க தம்மால் இயன்ற சகலத்தையும் செய்கிறார். அதாவது நாம் அனைவரையும் என பொருள்படும். தேவன் நல்லவர்கள், நீங்கள், நான் மற்றும் நாம் அறிந்தவர்களில் மிகவும் பொல்லாதவர்கள் உட்பட அனைவரையும் நேசிக்கிறார். எந்த தேவதூதனும் நாம் நரகத்திற்கு செல்லும்படியான எந்தவொரு காரணத்தினையும் கண்டுபிடிக்க ஒரு நொடியும் செலவிடுவதில்லை.

சாத்தான் என்கின்ற திருடன் உங்களுக்கு எதிராக செயல்படுகிறான். நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும் தகுதியை இழந்து உங்களைக்கொன்று நரகத்தில் வீழ்த்த அவன் வருகிறான்.

நரகம் என்பது சாத்தானுக்கும் அவன் உடன் பணியாளர்களுக்கும் ஆயத்தம் பண்ண‌ப்பட்ட இடம். அவர்கள் தெரிந்தே தாமாக தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் தாமே தமது செயலால் இந்த கொடுமையான முடிவிற்கு முற்றிலும் தகுதியானவர்களானார்கள். ஏதேன் தோட்டத்தில் மனிதன் சாத்தானின் சதியினில் பங்கு கொண்டு அவன் உடன் பங்காளியானான். ஆதாமும் ஏவாளும் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதினால் நாம் பிசாசுடன் நரகத்தின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதோ இது தான் தெளிவான மற்றும் முக்கியமான‌ ஓர் விளக்கம். தேவனின் வார்த்தை மட்டுமே விண்ணிலும் மண்ணிலும் எவ்விடத்திலும் அதிக நிச்சயமானது. முன்பொருகாலத்தில் உமது நியமங்களின்படி காலங்காலத்திற்கும் நிலைத்திருக்க இவைகளை ஏற்படுத்தினீர் என அறிந்தேன் என பைபிள் கூறுகிற‌து. தேவ‌னின் வார்த்தை ச‌த்திய‌ம்; தேவ‌னின் வார்த்தை வ‌ல்ல‌மை மிக்க‌து; தேவ‌னின் வார்த்தை எக்காலமும் நிலைத்திருப்ப‌து. தேவ‌ன் த‌ம‌து வார்த்தையை ஒருபோதும் மீறுவ‌தில்லை.

எனவே தேவனின் வார்த்தை அவரே பின்பற்றத்தக்க சட்டமாகின்றது. தேவன் தாமே உண்மையில் அவரின் சொந்த வார்த்தைக்குக் கட்டுப்படுகிறார்.

இவ்வாறு தேவ‌னின் ச‌ட்ட‌த்திற்குட்ப‌ட்டு நாம் த‌ண்ட‌னைக்கேதுவான‌வ‌ர்க‌ளாய் இருக்கும்போது நாம் த‌ப்பித்துக்கொள்ள நமக்கு ஒரு வ‌ழி ஏற்ப‌ட்ட‌து. இயேசு கிறிஸ்து, தாம் குற்ற‌ம‌ற்ற‌வ‌ராய் இருப்பினும் ந‌ம்மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ த‌ண்ட‌னையை த‌ம்மீது தாமே ஏற்றுக்கொண்டு அத‌னை அனுபவித்தார். நாம் அவர்மீது வைக்கும் விசுவாசத்தின் மூலம் தண்டனைக்குத் தப்பிக்கும் இந்த வழியினைப் பற்றிக்கொள்ளலாம்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்
—யோவான் 3:16இறுதியாகபலர் வினவுகின்றனர்

"தேவன் நல்லவராயிருப்பின் உலகில் ஏன் இத்தனை தீயவைகள் உள்ளன?"

இதனை விளக்க பைபிளினின்று நான்கு காரியங்களை நான் காண்பிக்கட்டும். முதல் இரண்டும் பழைய ஏற்பாட்டினின்றும் அடுத்த இரண்டும் சுவிசேஷங்களினின்றும் எடுக்கப்பட்டுள்ளன‌.

பின்பு தேவன் அவர்களை[ஆதாம் மற்றும் ஏவாள்] நோக்கி:
"நீங்கள் பலுகிப்பெருகி,
பூமியை நிரப்பி,
அதைக் கீழ்ப்படுத்தி,
சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்,
பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். "
—ஆதியாகமம் 1:28ஆதாமும் ஏவாளும் முன்னதாக பூமியின் மீது சகல உரிமையையும் பெற்றிருந்தார்கள். ஆயினும், அவர்கள் பாவம் செய்தபின்பு பூமியின் மீதிருந்த தங்களது ஆளுகையை விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இப்போது (நாம் கீழே காண்கின்றபடி) சாத்தான் பூமியில் ஆளுகை செய்ய அதிகாரமுள்ளவனானான்.

அப்பொழுது அவன் [தேவதூதன்] என்னை நோக்கி,
"தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.

இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான் "
—தானியேல் 10:12-14பெர்சிய ராஜா என்பவன் ஒரு மனிதனாக அல்லாமல் ஒரு அசுத்த ஆவியாக சித்தரிக்கப்படுகிறான். தானியேல் மூன்று வாரங்க‌ளாக ஜெபித்தும் பலன் ஏதும் காணவில்லை. அவன் காணக்கூடாதது என்னவென்றால் அவனின் ஜெபம் தேவதூதர்களுக்கும் ஆளுகை செய்யும் அசுத்த ஆவிகளுக்கும் ஒரு பெரும் யுத்தத்தையே துவக்கிவிட்டது என்பதே.

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
"இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். "

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக,
"எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.'"

—லூக்கா 4:5-8இவ்வுலகின் ராஜ்ஜியங்களிலெல்லாம் தனக்கு ஆளுகை இல்லாவிடில் பிசாசினால் எவ்வாறு இயேசுவுக்கு இவ்விதம் ஆசை காட்டியிருக்க முடியும்?

[இயேசு சொன்னார்]

"நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது;
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக"

—மத்தேயு 6:9-10எனவே தேவனின் சித்தம் பரலோகத்தில் நிறைவேற்றப்பட்ட அளவிற்கு பூமியில் நிறைவேற்றப்பட வில்லை என்பது தெரிகின்றது. இல்லையெனில் இயேசு இவ்விதம் நம்மை ஜெபம் செய்யச்சொல்லியிருக்கமாட்டார்.

தேவனின் சித்தம் பூமியில் செய்யப்படவில்லை என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? இன்றைக்கு செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்தாலே இது வெளிப்படையாக எவ‌ருக்கும் தெரியும்.

எவ்வாறாயினும், இந்த ஜெபமும் தானியேலின் புத்தகத்தில் வரும் இந்த நிகழ்ச்சியும் தேவனின் சித்தம் பூமியில் செய்யப்பட நம்முடைய ஜெபம் உதவிபுரியும் என்பதை விளக்குகின்றன‌.


இக்கட்டுரைக் குறித்து கேள்விகள்,
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன,
ஆசிரியரோடு தொடர்பு கொள்ளவும்.

ஆங்கில மூலம்: Did Jesus Have to Die to Forgive Sin?


அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்