இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அல்பா (Alpha)

கிரேக்க மொழியின் முதல் எழுத்து "அல்பா" ஆகும், கடைசி எழுத்து "ஓமெகா" ஆகும். இந்த இரண்டு எழுத்துக்கள் இறைவனின் பட்டப்பெயர்களாக பைபிளில் காணலாம். அதாவது உலகத்தின்  "முதலாமானவராகவும்  கடைசியானவராகவும் இறைவன் இருக்கிறார்" என்பதை சுட்டிக்காட்ட இறைவன் தனக்கு இவைகளை பயன்படுத்துகிறார்.

1. தேவன் "அல்பா மற்றும் ஓமெகாவாக" இருக்கிறார்: 

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

2. இயேசுக் கிறிஸ்து "அல்பா மற்றும் ஓமெகாவாக" இருக்கிறார்:

வெளிப்படுத்தின விசேஷம் 21:6 மற்றும் பார்க்க 22:1-13

வெளி 21:6

அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

கிரேக்க மொழியின் கடைசி வார்த்தைப் பற்றிய இங்கு சொடுக்கவும்.