இஸ்லாமிய அகராதி > அ வார்த்தைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (ASSALAMU ALAIKUM)

இது ஒரு இஸ்லாமிய வாழ்த்து ஆகும். இதன் பொருள் ”உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” என்பதாகும். ஒரு முஸ்லிம் முதன் முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று மற்றவரை பார்த்து வாழ்த்து கூறும் போது,  இதற்கு பதிலாக “வா அலைக்கும் ஸலாம்” என்று அவர் பதில் வாழ்த்து கூறுவார், இதன் பொருள், “உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்” என்பதாகும். 

இதே வாழ்த்துதலை,  இன்னும் நீட்டி, “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது அல்லாஹி வ பரகாதஹூ” என்று கூறுவர், இதன் பொருள் “சாந்தியும் அல்லாஹ்வின் அருளும், ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாவதாக” என்பதாகும். (Full version is "Assalamu alaikum wa Rahmatu Allahi wa Barakatuhu", meaning "Peace and the Mercy and Blessings of God be upon you").

மேலதிக விவரங்களுக்கு பார்க்க: இஸ்லாமிய வாழ்த்துக்கள் (GREETINGS).