இஸ்லாமிய அகராதி > ம வார்த்தைகள்

முஹர்ரம் (முஹரம் – முஃகர்ரம்)

இஸ்லாமிய நாட்காட்டியில் (காலண்டரில்) "முஹர்ரம்" என்பது முதல் மாதமாகும். ஷியா முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களை துக்க நாட்களாக அனுசரிக்கிறார்கள். கர்பலா என்ற இடத்தில் முஹம்மதுவின் பேரன் "ஹுசைன்" கொல்லப்பட்ட மாதமாக முஹர்ரம் இருப்பதால், அவரின் மரணத்தை நினைவு கூறும் வண்ணமாக இப்படி துக்க நாட்களை அனுசரிக்கிறார்கள். இந்த நாட்களில் அவர்கள் எந்த ஒரு கேளிக்கை காரியங்களிலும் ஈடுபடமாட்டார்கள்.

எகிப்தின் பார்வோன் கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை இறைவன் விடுவித்ததற்காக, சுன்னி (பிரிவினர்) முஸ்லிம்கள், முஹர்ரம் மாதத்தின் 9, 10 மற்றும் 11ம் நாட்களை நினைவு கூறுகிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியா தொடுப்பு.