இஸ்லாமிய அகராதி >  ஸ வார்த்தைகள்

ஸூரா (சூரா, SURA, SURAH) - அத்தியாயம்

ஸீரிய மொழியில் “ஸுர்தா” என்பவர்கள்.

இதன் அர்த்தம் "எழுத்துகள், புனித நூல், குர்-ஆனின் அத்தியாயம்” எனலாம். இஸ்லாமில் குர்-ஆனின் அத்தியாயத்தை குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஸூரா - ”ஒரு வரி (அ) தொடர்ச்சியான வரிகள்”. இந்த வார்த்தை குர்-ஆனின் அத்தியாயங்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. குர்-ஆனின் சில அத்தியாயங்களில் 100க்கும் அதிகமான வசனங்கள் இருக்கிறது, சில அத்தியாயங்களில் 14 வசனங்கள் உண்டு. குர்-ஆனின் அத்தியாயங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பெயர்கள், அந்த அத்தியாயங்களில் வரும் வசனங்களில் இருக்கும் ஒரு சில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு, ஸூரத்துல் ஹதீத் (இரும்பு) அத்தியாயத்தைச் சொல்லலாம். முந்தைய கால யூதர்கள் மோசேயின் ஆகமங்களை 45 பிரிவுகளாக (சைடெரிம் - Siderim) பிரித்து இருந்தனர். மேலும் அந்தந்த பிரிவில் வரும் ஒரு வார்த்தையை அந்த பிரிவிற்கு பெயராக வைத்திருந்தனர். இதே போலத்தான் குர்-ஆனின் ஸூராக்களுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது ( பக்கம் 623, Hughes' Dictionary of Islam)

முக்கியமான விஷயம் என்னவென்றால், “Encyclopedia of Islam”  ஸூரா என்ற வார்த்தையின் மூல வார்த்தை என்னவென்று தெரியாது என்றுச் சொல்கிறது. எபிரேய மற்றும் ஸீரிய மொழியில் இவ்வார்த்தையின் மூலம் பற்றி அனேக கோட்பாடுகள் சொல்லப்படுகின்றது, ஆனால், இதைப் பற்றிய ஒருமித்த கருத்து இல்லை. பரவலாக பயன்படுத்தப்படும் இந்த வார்த்தையின் மூல வார்த்தை என்ன என்று குர்-ஆன் விரிவுரையாளர்களாலும் ஒரு மித்த கருத்துக்கு வரமுடியவில்லை. ஒரு வேளை இது வேற்று நாட்டு மொழியின் வார்த்தையாகக் கூட இருக்கலாம், ஏனென்றால், முஹம்மது தம்முடைய திருமணத்திற்கு முன்பு வியாபாரத்திற்காக ஸிரியாவிற்கு சென்று இருந்தார், அங்கிருந்து இந்த வார்த்தையை அவர் கொண்டு வந்து இருக்கலாம்.

குர்-ஆனில் மொத்தம் 114 ஸூராக்கள் (அத்தியாயங்கள்) உள்ளன. ஆனால், இந்த 114 என்ற எண்ணிக்கை, உபை பி. கஅப் என்பவரிடமும், அப்துல்லாஹ் இப்னு மஸூத் என்பவரிடமும் இருந்த மூல குர்-ஆன் பிரதிகளில் இருக்கும் அத்தியாய எண்ணிக்கைக்கு வேறுபட்டு இருக்கிறது. இந்த அத்தியாயங்களில் காணப்படும் எண்ணிக்கை வித்தியாயங்கள் பற்றி மேலும் அறிய, இந்த கட்டுரையை படிக்கவும்: The Collection of the Qur'an - from the hadiths, Section 5.3.

குர்-ஆன் ஸூராக்கள் பற்றிய சில விவரங்கள்:

  • இப்படிப்பட்ட ஸூராக்களை யாராலும் எழுதமுடியாது என்ற சவால்: குர்-ஆன் 10:38 & 11:13
  • குர்-ஆனின் முதலாவது ஸூரா, ”அல் ஃபாத்திஹா” ஆகும்.
  • முஹம்மதுவிற்கு முதலாவது இறக்கப்பட்ட ஸூரா என்று இஸ்லாமியர்கள் கூறுவது ஸூரா 96 ஆகும்.
  • இரண்டாவதாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட ஸூரா என்று இஸ்லாமியர்கள் கூறுவது ஸூரா 74 ஆகும்.
  • குறைந்த வசனங்கள் உள்ள அத்தியாயங்கள் (ஸூராக்கள்) குர்-ஆன் 82, 84, 93, 101, 112, 113, 114 ஆகும்.
  • குர்-ஆன் 2:23, 9:64, 86, 124, 127, 11:13, 24:1 & 47:20

மூலம்