முதலாவதாக அல்லா உருவாக்கியது எது? வானமா? அல்லது பூமியா?

குர்-ஆன் முரண்பாடுகள்

உமர்

பதில்:ஒரு இடத்தில் குர்-ஆன் அல்லா வானத்தை முதலாவது உருவாக்கியதாகவும், பிறகு பூமியை உருவாக்கியதாகவும் சொல்கிறது. மற்றோர் இடத்தில் குர்-ஆன் இதையே மாற்றிச்சொல்கிறது.

அ) முதலில் பூமி உருவாக்கப்பட்டது பிறகு வானம் உருவாக்கப்பட்டது

குர்-ஆன் 2:29 மற்றும் 41:9-12 வசனங்களில் குர்-ஆன் சொல்கிறது - ”முதலில் பூமி படைக்கப்பட்டது பிறகு வானம் படைக்கப்பட்டது”.

குர்-ஆன் 2:29

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். குர்-ஆன் 2:29

குர்-ஆன் 41:9-12

"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயாமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக. 

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக்கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்). 

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்)படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின. 

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

ஆ) முதலிம் வானம் பிறகு பூமி:

குர்-ஆன் 79:27-33 வசனங்களில், அல்லா முதலில் வானத்தைப் படைத்தான் என்றும் பிறகு பூமியை படைத்தான் என்றும் சொல்கிறது. இது முன் சொல்லப்பட்ட( 2:29, 41:9-12) வசனங்களுக்கு முரண்பட்டது.

குர்-ஆன் 79:27-33

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான் அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். அவன்தான் இரவை இருளடயதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான். இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

முடிவாக, வசனம் 2:29 ல், தெளிவாக "பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டன்" என்று உள்ளது. முதலில் பூமியை படைத்துவிட்டு பின்பு அல்லா வானம் படைக்க முற்பட்டான். 

வசனம் 41:11 ல், "பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது(அதைப்படைக்க) நாடினான்" என்றும் , மட்டுமில்லை வசனம் 41:12 ல், "அவற்றை அவன் ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்" என்று தெளிவாக உள்ளது. ஆனால், வசனங்கள் 79:27-33 சொல்கிறது, முதலில் வானத்தை படைத்துவிட்டு, "இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்" என்றும் பிறகு தண்ணீரையும் மேய்ச்சல் பொருள்களையும் படைத்தான் என்றும் சொல்கிறது.


இதர குர்-ஆன் முரண்பாடுகளை படிக்கவும்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்