மிஷால் அல்காதி அவர்களுக்கு மறுப்பு: எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?

நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு அல்காதி என்பவர் பதில் கொடுத்துள்ளார், அவரது மறுப்பிற்கு நம் பதிலை இக்கட்டுரையில் காண்போம்.

மிஷால் அல் காதி என்பவர் நம்முடைய "எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?" என்ற கட்டுரைக்கு பதில் கூறியுள்ளார்.

மரியம் சூரா (19):17ம் வசனத்தை நபி அவரக்ளும்(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மற்றும் இதர நபித்தோழர்களாகிய இபின் மஸூத், சுலைமான் இபின் முரா போன்றவர்களும் விளக்கியுள்ளார்கள். உலக மக்கள் அனைவரும் எப்படி நரக நெருப்பின் மீது அமைக்கப்பட்ட "சிரத்" என்ற பாதையின் மீதாக சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதை இவ்வசனம் விளக்குகிறது. அதிகமாக பயபக்தியுடையவர்கள் மட்டுமே அந்த பாதையை கடக்கமுடியும். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் சுலைமான் இபின் முரா கூறியதாவது: "அதிகமாக பக்தியுடையவர்களை இந்த பாதையின் பயணம் எந்த பாதிப்பையும் உண்டாக்காது, இப்ராஹிம் நபியவர்களை எப்படி இறைவன் நெருப்பிலிருந்து காப்பாற்றினானோ அதுபோல, இவர்களையும் காப்பாற்றுவான். ஒரு நபரின் பக்திக்கு ஏற்றாற்போல, உவ்வுலகில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்திற்கு ஏற்றாற்போல, இந்த பாதையின் பயணம் இருக்கும் இருக்கும். சிலர் மின்னல் வேகத்தில் கடப்பார்கள், சிலர் புயலைப்போல வேகமாக கடப்பார்கள், சிலர் ஓடுவார்கள், சிலர் நடப்பார்கள் சிலர் தவழ்ந்துச் செல்வார்கள். இந்த விவரங்கள் அனைத்தும் நபியவர்களின் அனேக ஹதீஸ்களில் உள்ளது.

திரு அல்காதி அவர்கள் கூறியதை நான் மறுபடியும் சொல்லட்டும், அதாவது அவரின் கூற்றுப்படி, நல்ல பக்தியுள்ள இஸ்லாமியர்கள் நரகத்திற்குள் நுழையமாட்டார்களாம், ஆனால், ஒரு பாலம் போல இருக்கும் ஒரு பாதையின் வழியாக கடந்துச் செல்வார்களாம். இந்த பயணமானது அவர்களை பாதிக்காது என்று கூறுகிறார்.

திரு அல்காதி அவர்கள், சில ஹதீஸ்கள் மீது ஆதாரப்பட்டு இந்த விளக்கத்தைக் கூறுகிறார் (ஆனால், அவர் அந்த ஹதீஸ்களின் எண்களைத் தரவில்லை, அப்படி கொடுத்து இருந்தால், நாம் சரி பார்த்து இருந்திருப்போம்). ஆனால், ஹதீஸ்களை விட குர்‍ஆன் மிகவும் தெளிவாக கீழ்கண்டவாறு கூறுகிறது.

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
(குர்‍ஆன் 19:71-72)

There will be no one of you who will not enter it (Hell). This was an inevitable decree of your Lord. Afterwards he may save some of the pious, God-fearing Muslims out of the burning fire.
-- Sura 19:71-72

ஆர்பெரி என்பவர் இன்னும் துள்ளியமாக பொருள் வரும்படி மொழியாக்கம் செய்துள்ளார், இதனை கீழே படிக்கவும்:

No one of you there is, but he shall go down to it; That for thy Lord is a thing decreed, determined. Then We shall deliver those that were god-fearing; and the evildoers We shall leave there, hobbling on their knees.
-- Sura 19:71-72

மேலே கண்ட இரண்டு ஆங்கில மொழியாக்கங்களும் சூரா 19:71ம் வசனம் "நரகத்திற்குள் நுழைகிறார்கள்" அல்லது "நரகத்திற்குள் செல்கிறார்கள்" என்றும் கூறுகிறது, இது நரகத்தின் மீது எந்த ஆபத்தும் இல்லாமல் கடப்பது பற்றி கூறவில்லை. இந்த வசனத்தை திரு அல் காதி அவர்கள் கூர்ந்து படித்து இருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் வருகிறது.

இந்த குர்‍ஆனின் முரண்பாடு பற்றி இஸ்லாமியர்கள் கொடுத்த இதர‌ பதில்களையும், அதற்கான எங்கள் மறுப்புக்களையும் கீழே காணலாம்.

1) மோயிஜ் அம்ஜத் அவர்களின் கட்டுரையும் எங்கள் பதிலும்

2) எல்லா இஸ்லாமியரக்ளும் நரகத்திற்குச் செல்வார்களா? பாகம் 1, பாகம் 2

3) Karim in Hell

ஆங்கில மூலம்: Response to Mishaal Al-Kadhi

இதர குர்‍ஆன் முரண்பாடுகள்